Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-01-01-001
ISBN : 978-955-1857-00-4 , 978-955-685-000-0
EPABNo : EPAB/02/18578
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 172
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 560.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் இல்லை
Content (உள்ளடக்கம்):
  1. பிளேட்டோவும் இலட்சியக் கருத்தியலும் ( Ploto : 427 - 347 BC )
  2. ரூசோவும் இயற்பண்புக் கருத்தியலும் ( Jean Jacques Rousseau : 1712 - 1778 )
  3. குழந்தைகளை நடுநாயகப்படுத்தும் கல்விக் கருத்தியலை வலியுறுத்திய புரோபல் ( F.W.Froebel : 1782 - 1852 )
  4. கார்ல் மார்க்சும் பொதுவுடமைக் கருத்தியலும் ( Karl Marx : 1818 - 1883 )
  5. ஜோன்டுயியும் பயன்கொள் கருத்தியலும் ( John Dewey : 1859 - 1952 )
  6. முற்போக்குக் கல்வியில் உளப்பகுப்பு இயலை ஒன்றிணைத்த சசான் ஐசாக்ஸ் ( Sussan Issac : 1855 - 1948 )
  7. மார்க்சிய தருக்கத்தைக் கல்வி உளவியலுடன் ஒன்றிணைப்புச் செய்த எல்.வி.வைக்கோட்சி ( L.V.Vygotsky : 1896 - 1934 )
  8. ஆசிரியத்துவம் தொடர்பான மாற்றுவகைச் சிந்தனைகளை முன்வைத்த கால் ரொஜர்ஸ் ( Carl Rogers : 1902 - 1987 )
  9. கற்றலில் மாணவரின் அகமோதலைக் குவியப்படுத்திய ஏ.எஸ்.நீல் ( A.S.Neill : 1883 - 1973 )
  10. முற்போக்குக் கல்வியை முன்மொழிந்த ஹரோல்டு றக் ( Harold Rugg : 1886 - 1960 )
  11. கலையே கல்வியின் அடிப்படை என வலியுறுத்திய ஹேர்பட் றீட் ( Herbert Read : 1893 - 1968 )
  12. கல்வி இலக்குகளின் ஒன்றிணைந்த முக்கியத்துவத்தை வலியுறுத்திய ரெயிலர் ( Ralph Winifred Tyler : 1902 - 1994 )
  13. கருவிசார் நிபந்தனைப்பாட்டை கற்பித்தலில் அறிமுகப்படுத்திய பி.எவ்.ஸ்கின்னர் ( Burrhus Fredric Skinner : 1904 - 1990 )
  14. கல்வி இலக்குகளின் பகுப்பாய்வை முன்மொழிந்த பென்ஜமின் புளூம் ( Benjamin S Bloom : 1913 - 1999 )
  15. அறிகை உளவியலில் இருந்து பண்பாட்டு உளவியலுக்குப் பெயர்ந்த புறூனர் ( Jerome S.Bruner : 1915 )
  16. உயர்கல்வியிற் பொருண்மிய முனைப்புக்களை முன்னெடுக்கும் கிளார்க் கேர் ( Clark Kerr : 1911 )
  17. பின்நவீனத்துவ கல்விச் சிந்தனைகளை வழங்கிய லியோதார்த் ( Jean Francois Lyotard : 1924 - 1998 )
  18. அதிகாரத்துக்கும் அறிவுக்குமுள்ள தொடர்புகளைத் தெளிவுபடுத்திய மிசேல் பூக்கோ ( Michel Foucault : 1926 - 1984 )
  19. காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான கல்விக் கருத்தியலை உருவாக்கிய போலோ பிறேறி ( Paulo Fereire : 1921 - 1997 )
  20. பள்ளிக்கூடக் கலைப்புச் சமூகத்தை முன்மொழிந்த இவான் இலிச் ( Ivan Iliich : 1926 - 2002 )
  21. அரசியல் அதிகாரத்துக்கும் பாடசாலைகளுக்குமுள்ள தொடர்புகளைத் தெளிவுபடுத்திய செய்மோர் சராசன் ( Seymour B.Sarason ; 1919 )
  22. மாற்றுக் கல்விச் சிந்தனைகளை முன்மொழிந்த மிசேல் டபிள்யு அப்பிள் ( Michael W.Apple : 1942 )
  23. வலுவுடையோரை மேலும் வலுவூட்டும் கல்விச் செயற்பாடுகளை வெளிப்படுத்திய ஹென்றி கிறொக்ஸ் ( Henry Giroux : 1943 )
  24. கல்வியியலில் நுண்மதிக் காரணிகளைத் தொடர்புபடுத்திய சிறில் லொடோவிக் பேட்டின் ஏமாற்றுத்தனம் ( Cyril Lodovic Burt : 1883 - 1971 )
  25. மீட்புக்குரிய கல்விக் கோட்பாடு 
Full Description (முழுவிபரம்):

உலகக் கல்விப் பரப்பிற் கல்வியியல் தொடர்பான மரபுவழிக் கருத்துக்களையும் மாற்றுக்கருத்துக்களையும் அறிந்துகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் இந்நூலாக்கம் முகிழ்த்துள் ளது. இவ்வாறான ஒரு நூலின் தேவையைக் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் நண்பர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நண்பர் பேராசிரியர் மா.செல்வராஜா அவர்களும் என்னிடத்துக் கூறியதுடன் ஆக்க முயற்சிக்குக் காணும் போதெல்லாம் ஊக்கம் தந்தனர். இந்நூலாக்கத்துக்கு வேண்டிய உசாவல் நூல்களை அவர்கள் தந்துதவியவேளை, தேசிய கல்வி நிறு வகத்திலிருந்து மேலும் பல நூல்களை நண்பர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் அவர்களும், கல்வி அமைச்சிலிருந்து நண்பர் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களும் தேடிவந்து தந்தனர். இந்நண் பர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். கல்வியியலில் மாற்றுச் சிந்தனைகளின் தேவையை நூல் வடிவிலே தரும்படி வேண்டிக் கொண்ட நண்பரும் 'கூடம்', 'அகவிழி', 'ஓலை' ஆகிய மூன்று சஞ்சிகைகளின் ஆசிரியருமாகிய தெ.மதுசூதனன் அவர்கள் உற்சாகம் தரும் நண்பராகி இயங்கிக் கொண்டிருத்தலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 
இத்துறையில் வளமான ஊக்கலைத் தந்துகொண்டிருக்கும் நண்பரும் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அதிபருமாகிய கலாநிதி த.முத்துக்குமாரசாமி அவர்களும் மிக்க நன்றிக்குரியவர். இந்நூலை வெளியிடும் சேமமடு வெளியீட்டு நிறுவனத்தினர் நன்றிக்குரியவர்கள். 
இந்த இரண்டாம் பதிப்பை மேலும் திருத்தங்களுடன் வெளியிடப்படுவதற்குரிய ஊக்கங்களைத் தந்த நண்பர்களுக்கு நன்றி.
சபா .ஜெயராசா

 
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-01-01-001
CBCN:2011-09-01-101
ISBN : 978-955-1857-00-4
978-955-685-000-0
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 208
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 460.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • பிளேட்டோ (427-347bc)
  • ரூசோ (1712-1778)
  • புரோபல் (1782-1852)
  • மார்க்ஸ் (1818-1883)
  • ஜோன் டுயி (1859-1952)
  • ஐசாக்ஸ் (1885-1948)
  • வைகோட்சி (1896-1934)
  • ரொஜர்ஸ் (1902-1987)
  • ஏ.எஸ்.நீல் (1883-1973) 56
  • ஹரோல்டு றக் (1886-1960)
  • ஹேர்பட் றீட் (1893-1968)
  • ரெயிலர் (1902-1994)
  • ஸ்கின்னர் (1904-1990)
  • புளூம்(1913-1999)
  • புறூனர் (1915)
  • கிளார்க் கேர் (1911)
  • லியோதார்த் (1924-1998)
  • மிசேல் பூக்கோ (1926-1984)
  • போலோ பிறேறி (1921-1997)
  • இவான் இலிச் (1926-2002)
  • செய்மோர் சராசன் (1919)
  • மிசேல் டபிள்யு அப்பிள் (1942)
  • ஹென்றி கிறொக்ஸ் (1943)
  • லொடோவின் பேட் (1883-1971)
  • குழந்தைக்கல்விச் சிந்தனைகள்
  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரதும் சுவாமி விபுலானந்தரதும் கல்விச் சிந்தனைகள்
  • மீட்புக்குரிய கல்விக் கோட்பாடு
Full Description (முழுவிபரம்):

உலகக் கல்விப் பரப்பிற் கல்வியியல் தொடர்பான மரபுவழிக் கருத்துக்களையும் மாற்றுக்கருத்துக்களையும் அறிந்துகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் இந்நூலாக்கம் முகிழ்த்துள் ளது. இவ்வாறான ஒரு நூலின் தேவையைக் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் நண்பர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நண்பர் பேராசிரியர் மா.செல்வராஜா அவர்களும் என்னிடத்துக் கூறியதுடன் ஆக்க முயற்சிக்குக் காணும் போதெல்லாம் ஊக்கம் தந்தனர். இந்நூலாக்கத்துக்கு வேண்டிய உசாவல் நூல்களை அவர்கள் தந்துதவியவேளை, தேசிய கல்வி நிறு வகத்திலிருந்து மேலும் பல நூல்களை நண்பர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் அவர்களும், கல்வி அமைச்சிலிருந்து நண்பர் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களும் தேடிவந்து தந்தனர். இந்நண் பர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். கல்வியியலில் மாற்றுச் சிந்தனைகளின் தேவையை நூல் வடிவிலே தரும்படி வேண்டிக் கொண்ட நண்பரும் 'கூடம்', 'அகவிழி', 'ஓலை' ஆகிய மூன்று சஞ்சிகைகளின் ஆசிரியருமாகிய தெ.மதுசூதனன் அவர்கள் உற்சாகம் தரும் நண்பராகி இயங்கிக் கொண்டிருத்தலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 
இத்துறையில் வளமான ஊக்கலைத் தந்துகொண்டிருக்கும் நண்பரும் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அதிபருமாகிய கலாநிதி த.முத்துக்குமாரசாமி அவர்களும் மிக்க நன்றிக்குரியவர். இந்நூலை வெளியிடும் சேமமடு வெளியீட்டு நிறுவனத்தினர் நன்றிக்குரியவர்கள். 
இந்த இரண்டாம் பதிப்பை மேலும் திருத்தங்களுடன் வெளியிடப்படுவதற்குரிய ஊக்கங்களைத் தந்த நண்பர்களுக்கு நன்றி.
சபா .ஜெயராசா

 

தலைப்பு (Book Name) : கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-01-01-001
CBCN:2011-09-01-101
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 154
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 460.00
Edition (பதிப்பு): 3ம் பதிப்பு
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

        à®ªà®•à¯à®•à®®à¯
1.    à®ªà®¿à®³à¯‡à®Ÿà¯à®Ÿà¯‹    13
2.    à®°à¯‚சோ         21
3.    à®ªà¯à®°à¯‹à®ªà®²à¯    29
4.    à®®à®¾à®°à¯à®•à¯à®¸à¯    36
5.    à®Ÿà¯à®¯à®¿            44
6.    à®à®šà®¾à®•à¯à®¸à¯    51
7.    à®µà¯ˆà®•à¯‹à®Ÿà¯à®šà®¿    56
8.    à®°à¯Šà®œà®°à¯à®¸à¯    62
9.    à®¨à¯€à®²à¯            68
10.    à®±à®•à¯            75
11.    à®±à¯€à®Ÿà¯            81
12.    à®°à¯†à®¯à®¿à®²à®°à¯    86
13.    à®¸à¯à®•à®¿à®©à¯à®©à®°à¯    92
14.    à®ªà¯à®³à¯‚ம்            99
15.    à®ªà¯à®±à¯‚னர்            105
16.    à®•à¯‡à®°à¯             111
17.    à®²à®¿à®¯à¯‹à®¤à®¾à®°à¯à®¤à¯    116
18.    à®ªà¯‚க்கோ            122    
19.    à®ªà®¿à®±à¯‡à®±à®¿            128
20.    à®‡à®²à®¿à®šà¯            134
21.    à®šà®°à®¾à®šà®©à¯            140
22.    à®…ப்பிள்            146
23.    à®•à®¿à®±à¯Šà®•à¯à®¸à¯    152
24.    à®ªà¯‡à®Ÿà¯            159
25.    à®®à¯€à®Ÿà¯à®ªà¯à®•à¯à®•à¯à®°à®¿à®¯ கல்விக்கோட்பாடு     166

Full Description (முழுவிபரம்):

ஆரம்பத்தில் இருந்து மனித சமுதாயத்தில் கல்வியும் வளர்ந்து வந்துள்ளது. மனிதராகப் பிறந்த ஒவ்வொரு ஜீவியும் கல்வி வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களிலும் தமக்குப் பொருத்தமானதைத் தேவையானதைக் கற்றுக்கொண்டே வந்துள்ளார்கள். கற்றல் என்பது மனிதரது இயல்பான பண்புகளில் ஒன்றானது. மனிதர்கள் தொடர்ந்து புதியவற்றைத் தேடியும் கண்டுபிடித்தும் கல்வியின் பல்பரிமாண விருத்திக்கும் சாதகமான தன்மைகளை உருவாக்கி வந்துள்ளார்கள்.
கல்விச் செயற்பாடு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு, கருத்துநிலை மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களில் மிகுந்த தாக்கம் செலுத்தத் தொடங்கின. குறிப்பாக நாடுகளின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வளர்ச்சியில் கல்விச்செயற்பாட்டின் பங்களிப்புக்கு பெரும் முக்கியத்துவம் வழங்கப்படும் நிலைமைகள் படிப்படியாக மேற்கிளம்பின. கல்வியின் நவீன செல்நெறிகள் மனிதாயப்பட்ட போக்குகளின் மற்றும் அவற்றின் செயல்தன்மைகளின் உள்ளீடுகள் நிரம்பிய தளமாகவும் உருப்பெற்றன. இந்த நோக்கில் கல்வி பற்றிய சிந்தனைகளின் களம் மேலும் மேலும் விரிவும் ஆழமும் கண்டது, கண்டு வருகின்றது.
சமகாலத்தில் பாடசாலை மற்றும் உயர்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ச்சிகள் கல்விசார் அறிவுத் தொகுதியில் பெரும் மாற்றங்களை, பாய்ச்சல்களை உருவாக்கியுள்ளன.  à®‡à®©à¯à®±à¯ கல்விசார் அறிவுத்தொகுதி 'கல்வியியல்' அறிவுத்தொகுதியாக கற்கைப் புலமாக வளர்ச்சியடைந்துள்ளது. சமூக அறிவியல், இயற்கை அறிவியல், மொழியியல் போன்ற பல்வேறு துறைசார்ந்த அறிவுத் தொகுதிகளுக்கு ஈடாக கல்வியியல் அறிவுத் தொகுதியும் பெரும் பாய்ச்சலாக வளர்ச்சி கண்டுள்ளது. 
இத்தகு பின்புலத்திலேயே கல்வி பற்றிய நவீன சிந்தனைகள் முகிழ்ந்துள்ளன. இவை மேலைத்தேசம், கீழைத்தேசம் சார்ந்து பல்வேறு சிந்தனைப் பள்ளிகளாக உருப்பெற்றுள்ளன. ஆனால் தேடுதல் மனித குலத்தின் பண்பு அது. தனது தொடர்ந்த  à®¤à¯‡à®Ÿà¯à®¤à®²à®¿à®²à¯  à®Žà®ªà¯à®ªà¯‹à®¤à¯à®®à¯ பின்வாங்குவதில்லை. இதன் பயனாக கல்வியியல் அறிவுத் தொகுதியும் பல்வேறு அறிவுத் தொகுதிகளுடன் ஊடாடி மேலும் வளர்ச்சி கண்டுள்ளன. வளர்ச்சி கண்டு வருகின்றன. 
இதுவரை உலகின் பலபாகங்களில் இருந்தும் தத்துவார்த்த அடிப்படைகளை பல்வேறு ஆளுமைகள் விளக்கியுள்ளார்கள். இந்த விளக்கத்தின் விரிவாக்கத்தின் அடிப்படையில் கல்வியின் கருவூலங்கள் யாவும் சமூகம், மனிதர், இயற்கை பற்றிய விசாரணைகளாகவே நீட்சிப்பெற்றுள்ளன. இவை தொடர்ந்து மனித விடுதலை, சமூகமாற்றம் குறித்த தேடலுக்கும் வழிவகுத்துள்ளன. நாம் இத்தகு ஆளுமைகளை அவர்தம் சிந்தனைகளை, கோட்பாடுகளை, மாற்றுச் சிந்தனைகளை, தொடரும் உரையாடல்களை விளங்கிக்கொள்ள வேண்டிய தேவை எமக்கு உள்ளது. 
இந்த நோக்கத்தின் காரணமாகவே 'கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்' என்னும் இந்நூல் வெளிவருகின்றது. இந்நூல் கல்வியியல் அறிவுத்தொகுதியில் ஒரு புதுப்பரிமாணம் எனலாம். சுமார் 25 கல்விச் சிந்தனையாளர்களின் தத்துவார்த்தப் புலப்பாடுகள் தத்துவ விசாரணைகள் தொடருறு அறிவுச் சேகரமாக மையம் கொள்வதை இனங்காணலாம். பன்னாட்டுக் கல்விப் பரப்பில் கல்வியியல் தொடர்பான மரபு வழிக்கருத்துக்களையும் மாற்றுக் கருத்துக்களையும் நாம்  à®‡à®©à¯à®©à¯à®®à¯ ஆழமாக அறிந்து தெளிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதன் பயனாகவே இந்நூல் வெளிவருகின்றது. 
நாம் ஒரு தொடர் கற்றலை ,விவாதத்தை, உரையாடலை நிகழ்த்த வேண்டுமானால் மிகக்குறைந்த கால அளவில் மிக அதிகமான தத்துவச் சிந்தனைகளைக் கடந்து வரவேண்டி உள்ளது. பிளேட்டோ, ரூசோ....., மார்க்ஸ்....., புறூனர்....., பூக்கோ, லியாதார்த்... போன்ற ஆளுமைகள் சார்ந்து நாம் இயங்கும் போதுதான் 'கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்' என்னும் பொருட்பரப்பில் ஆழமான  à®•à®±à¯à®±à®²à¯ˆ, தேடலை நிகழ்த்த முடியும். ஆகவே தமிழில் இது போன்ற நூல் தமிழ்ச்சிந்தனை மரபின் கோட்பாட்டு உறுதிப்பாடுகளையும் மதிப்பீட்டுப் பெருக்கங்களையும் உருவாக்கித் தரும் ஒரு செயல்தளமாகவும் நகர்கின்றது. 
ஆக இத்தகு செயல்தளத்தை பேராசிரியர் சபா.ஜெயராசா தமிழில் எடுத்துத் தந்துள்ளார். அவருக்கேயுரித்தான மொழிநடையில் அறிவுத் தேட்டங்களை சமூகப்படுத்தலுக்கு இட்டுச் செல்லும் பாங்கில் நூலை எழுதியுள்ளார். இதன்மூலம் பல்வேறு புதிய எண்ணக்கருக்களை கருத்தாடல் செய்ய முற்படுகின்றார். நவீனத்துவம், பின்னவீனத்துவம்  à®šà®¾à®°à¯à®¨à¯à®¤  à®šà®¿à®¨à¯à®¤à®©à¯ˆà®•à®³à¯ˆ அடியொற்றி மேலைத்தேசத்தில் வளம்பெறத் தொடங்கிய சொற்களஞ்சியம் தமிழிலும் வரவு கொள்ளத் தொடங்க இந்த நூல் மூலம் புதுத்தடம் அமைக்கின்றார். 
நாம் வழமைபோல் இந்த நூலுக்கும் எமது ஆதரவை வழங்கி பேராசிரியரது முயற்சி தேடல் தொடர பக்கபலமாக இருப்போம். இது எமது கடமை ஆகும். 
சேமமடு பொத்தகசாலையின் இணை நிறுவனமான -  à®šà¯‡à®®à®®à®Ÿà¯ பதிப்பகம் துணிந்து இது போன்ற நூல்களை தமிழில் வெளியிட வந்தமைக்கு நாம் சேமமடுவை பாராட்டுவதுடன் தொடரும் அவர்களது முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். 

தெ.மதுசூதனன்
ஆசிரியர் - அகவிழி