புத்தகம் : இந்திய அறிவாராய்ச்சியியல்
ஆசிரியர் : பேராசிரியர் நா. ஞானகுமாரன்
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : மெய்யியல்
ISBN: 978-955-685-051-2
விலை : 600.00 பக்கங்கள் : 210
புத்தகம் : பறவைகளின் கதை
ஆசிரியர் : சபா.ஜெயராசா
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-28-3
விலை : 280.00 பக்கங்கள் : 12
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அடிப்படை உளவியல்

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்று பாரதி பாடினான். தமிழில் புதிய அறிவியல் நூல்களுக்கு பாரதி காலத்தில் இருந்த தேவையை மனங்கொண்டே அவன் அவ்வாறு கூறினான். பாரதி மறைந்து எண்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பாரதி காலத்தில் கற்பனை பண்ணியிருக்க முடியாத அளவுக்கு புதிய புதிய அறிவுத் துறைகளும் அறிவும் நமது காலத்தில் பன்மடங்காகப் பல்கிப் பெருகியுள்ளன. சமூக வளர்ச்சியும் தனிமனித முன்னேற்றமும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பெரிதும் தங்கியுள்ள இன்றைய காலத்தில் இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவருவது  முன் எப்போதையும் விட இன்று அவசியமாகியுள்ளது. 
உளவியல் அத்தகைய ஒரு புதிய அறிவுத்துறையாகும். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்ததை விட இன்று உளவியல் பெருவளர்ச்சி கண்டுள்ளது. சமூக வன்முறைகளாலும், யுத்தங்களாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சமூகமும், குடும்பமும், தனிமனிதரும் பெருமளவு சிதைவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகும் இன்றைய காலகட்டத்தில் உளவியல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் தமிழில் உளவியல் நூல்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அந்த வகையில் நவீன உளவியலுக்கு ஒரு அறிமுகமாக அமைகின்ற மணியம் சிவகுமாரின் அடிப்படை உளவியல் என்னும் இந்நூல் வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும்.
திரு.சிவகுமார் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர். தமிழை சிறப்புப் பாடமாகப் பயில்கிறார். தன் பட்டப்படிப்புக்கு மத்தியில் உளவியல், சுகாதார வைத்திய முகாமைத்துவம் ஆகிய கற்கைத் துறைகளிலும் டிப்ளோமா பட்டம் பெற்றவர். அறிவுத்துறையில் அவரது


தி.வேல்நம்பி
Velnampy, T Dr

முனைவர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முகாமைத்துவத்துறையில் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார். இவர் கணக்கியல், வர்த்தகம், முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பயிற்சியும் தேடலும் தமிழ் மரபு பண்புசார் புலங்களுடன் ஊடாடி புதிய ஆய்வுத் தோற்றப்பாடுகள் உருவாக்கவும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். முகாமைத்துவச் சிந்தனையாளர் தமிழியல் ஆய்வுச் செல்நெறிகளுள் உள்வாங்கப்படுகின்றார். இதன் இன்னொரு வெளிப்பாடாகவே முகாமைத்துவமும் திருக்குறளும் என்னும் நூல் அமைகின்றது.