Book Type (புத்தக வகை) : உளவியல்
Title (தலைப்பு) : வழிகாட்டலும் ஆலோசனையும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-04-02-036
ISBN : 978-955-1857-35-6 , 978-955-685-008-6
EPABNo : EPAB/02/18610
Author Name (எழுதியவர் பெயர்) : விமலா கிருஷ்ணபிள்ளை
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 276
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 960.00
Edition (பதிப்பு): நான்காம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • அறிமுகம்
  • ஆளுமை விருத்தி
  • மாணவர் பிரச்சினைகள்
  • வழிகாட்டல் ஆலோசனைக்குத் தரவுகள் சேகரித்தல்
  • ஆலோசனைச் செயன்முறைகள்
  • ஆலோசனைக் கொள்கைகளும் அணுகுமுறைகளும்
  • தொழில்வாழ்க்கைக்கு வழிகாட்டல்
  • விசேட வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படும் பிள்ளைகள்
  • அசாதாரண நடத்தை
  • ஆலோசனைத் தொழிற்துறை
  • தனியாள் ஆய்வு மாதிரி
  • பாடசாலை வழிகாட்டல் ஆலோசனைச்சேவை அமைப்பு
  • தகைப்பிற்கு பிற்பட்ட உளவடுக்கோளாறு
  • முதுமையில் உளநலம்
  • முடிவுரை
  • பின்னிணைப்பு 1
  • பின்னிணைப்பு 2
  • உசாத்துணை நூல்கள்
Full Description (முழுவிபரம்):

 à®à®¨à¯à®¤à®¾à®®à¯ பதிப்பாக வெளியிடப்படும் வழிகாட்டலும் ஆலோசனையும் எனும் இந்நூலில் உளவளத்துறை சார்பாக மேலும் பல விடயங்கள் சேர்க்கப்படடுள்ளன. இந்நூலின் முதற் பதிப்பு  à®ªà®²à¯à®•à®²à¯ˆà®•à¯à®•à®´à®•à®™à¯à®•à®³à®¿à®²à¯à®®à¯, ஆசிரியக் கல்லூரிகளிலும் பயிலும் ஆசிரியர்களின் வழிகாட்டலும் ஆலோசனையும் என்ற பாடநெறியைக் கருத்திற் கொண்டு 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2ம், 3ம்,க்கிய அத்தியாயங்கள்; சேர்க்கப்பட்டுள்ளன. காலத்தின் தேவையைக் கருத்திற்; கொண்டு உள்ளுர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உளத் தேவைகளுக்கு ஏற்ற ஆலோசனை விடயங்கள், சமுதாய மீள்சீராக்கல் நடவடிக்கைகள், உளநலத்தைப் பேணுதல் போன்ற விடயங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 
  இந்நூல் பொதுவாக ஆசிரியர்களுக்கும், உளநல விருத்தித் துறையில் அக்கறை கொண்டவர்களுக்கும், மக்கள் மத்தியில் களத்தில் தொண்டாற்றும் சேவையாளர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக சமூகத்தொண்டர்கள் , சுகாதார சேவையாளர்கள், தாதியர், மதகுருமார், பிள்ளைகளைப் பராமரிப்பவர்கள் ஆகியோருக்குத் தேவையான பல பொதுப்படையான விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்நூல் ஒருவரின் தனிப்பட்ட உள விளிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதை வாசகர்கள் விமர்சித்துள்ளனர்.
  மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்டுள்ள இந்நூலை கட்டிளமைப்பருவ மாணவர்களும் வாசித்துக் கிரகித்துக் கொள்ளலாம். மேலும் ஆங்கில நூல்களை வாசிப்பதற்கு உதவும் பொருட்டு பல விஞ்ஞான உளவியல் ஆங்கிலக் கலைச்சொற்களும் , அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப்பதங்களும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் இத்துறையில் தமிழ் நூல்களின் பற்றாக்குறையை ஓரளவேனும்; நிவர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை.
  உளவியல் ஆலோசனைத் துறையில் பல காலமாக ஈடுபட்டு ஆராய்ச்சி நூல்கள் பலவற்றைப் படித்து, சுயமாக ஆராய்ந்து, எமது நாட்டிற்குப் பொருத்தமான முக்கிய பல விடயங்கள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகப் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வழிகாட்டல் ஆலோசனை , கல்வி அளவீடும் மதிப்பீடும் , கல்வி உளவியல் போன்ற துறைகளில் விரிவுரையாளராகப்; பணிபுரிந்தமையும் அதற்கு முன் பாடசாலை ஆசிரியையாகச் சேவை ஆற்றியமையும் இந்நூலை ஆக்;குவதற்கு ஆதாரமாக அமைந்தது. மேலும் மேற்கொண்ட ஆய்வுகள் , பங்குபற்றிய கருத்தரங்குகள் , பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றுடன், தேசிய கல்வி நிறுவகம்இ திறந்த பல்கலைக்கழகம் மற்றும் சமூகசேவை நிறுவனங்களில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகின்ற போது கிடைக்கப்பெற்ற அனுபவங்களும் இதற்குப் பின்னணியாக இருந்து வளமூட்டியுள்ளன. 
  இந்நூல் உருவாகுவதற்கு ஊக்குவிப்பையும் ஆலோசனைகளையும் வழங்கிய கொழும்புப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களுக்கும் , நூலின் அத்தியாயங்கள் அனைத்தையும் வாசித்துப் பல்வேறு கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தெரிவித்து, இந்நூலிற்கு அணிந்துரையும் நல்கிய பேராசிரியர்.மா.கருணாநிதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் மொழியில் வழிகாட்டலும்; ஆலோசனையும் பற்றிய நூலொன்றைக் கட்டாயம் உருவாக்க வேண்டுமென்று உற்சாகமூட்டிய ஆசிரிய மாணவர்களுக்கும,;  à®‰à®³à®¨à®² சேவையில் பணிபுரிவோர்க்கும் எனது நன்றிகள். இந்நூலின் 4ம், 5ம் பதிப்புகள் வெளிவர வேண்டுமென எனக்கு உற்சாகமூட்டி, அதனை வெளியிட்ட சேமமடு பதிப்பகத்தின் பதிப்பாளர் திரு.சதபூ.பத்மசீலன் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

                            à®•à®²à®¾à®¨à®¿à®¤à®¿ (திருமதி) விமலா கிருஷ்ணபிள்ளை

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : வழிகாட்டலும் ஆலோசனையும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-04-02-036
CBCN:2012-04-01-109
ISBN : 978-955-1857-35-6
978-955-685-008-6
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 306
Edition (பதிப்பு): ஐந்தாம் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • அறிமுகம்
  • ஆளுமை விருத்தி
  • மாணவர் பிரச்சினைகள்
  • வழிகாட்டல் ஆலோசனைக்குத் தரவுகள் சேகரித்தல்
  • ஆலோசனைச் செயன்முறைகள்
  • ஆலோசனைக் கொள்கைகளும் அணுகுமுறைகளும்
  • தொழில்வாழ்க்கைக்கு வழிகாட்டல்
  • விசேட வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படும் பிள்ளைகள்
  • அசாதாரண நடத்தை
  • ஆலோசனைத் தொழிற்துறை
  • தனியாள் ஆய்வு மாதிரி
  • பாடசாலை வழிகாட்டல் ஆலோசனைச்சேவை அமைப்பு
  • தகைப்பிற்கு பிற்பட்ட உளவடுக்கோளாறு
  • முதுமையில் உளநலம்
  • இழவிரக்க ஆலோசனை
  • சிறுவர் துஷ்பிரயோகம்
  • முடிவுரை
  • பின்னிணைப்பு 1
  • பின்னிணைப்பு 2
  • உசாத்துணை நூல்கள்
  • கலைச்சொற்கள்
  • சுட்டி
Full Description (முழுவிபரம்):

1.    à®‰à®²à®•à®³à®¾à®µà®¿à®¯ செல்நெறியும் கற்றலும்
2.    à®†à®šà®¿à®°à®¿à®¯à®°à¯à®•à®³à¯ˆà®¤à¯ தொழிற்ற்றகைப்படுத்தல் 
3.    à®µà®¿à®³à¯ˆà®¤à®¿à®±à®©à¯à®³à¯à®³ கற்பித்தலின் கூறுகள்
4.    à®†à®šà®¿à®°à®¿à®¯à®°à¯à®•à®³à¯ˆ மதிப்பிடுதல்
5.    à®†à®šà®¿à®°à®¿à®¯à®°à¯ கல்வியும் பயிற்சியும் - பாடசாலைகளில்         à®…வற்றின் பயன்பாடுகளும்
6.    à®®à®¾à®£à®µà®°à¯ பற்றிய மதிப்பீடுகள்
7.    à®®à®¾à®£à®µà®°à¯ கற்றல் - ஆசிரியர்களுக்கான         à®µà®¿à®©à¯ˆà®¤à¯à®¤à®¿à®±à®©à¯à®•à®³à¯
8.    à®•à®²à¯à®µà®¿à®šà¯ செயற்பாடுகளில் அதிகரித்துவரும்         à®ªà¯†à®±à¯à®±à¯‹à®°à®¿à®©à¯ வகிபங்கு
9.    à®ªà®¿à®³à¯à®³à¯ˆà®¯à®¿à®©à¯ ஆளுமையில் வழிகாட்டல் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததொரு செயற்-பாடாகும். புராதன காலந்தொட்டு இன்றுவரையில் வழிகாட்டல் ஆலோ-சனை பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வந்துள்ளது. குடும்பம் மற்றும் சமூகம் என்ற அடிப்படையில் ஒழுக்க விழுமியங்களைப் பேணும் பொருட்டும் பெரியவர்கள் இளையவர்களுக்குப் புத்திமதிக-ளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருதல் வழக்கமாக இருந்தது. காலப் போக்கில் சமூக அமைப்பு மாற்றம்பெற்றபோது, வழிகாட்டல் ஆலோசனைக்கான தேவைகள் விரிவடைந்து, உளவியல் மற்றும் சமூக விஞ்ஞான அடிப்படைகளைக்கொண்ட கொள்கைகளும் கோட்பாடுக-ளும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்தது! மேலும் பல ஆராய்ச்சி களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரயோகத்துறையாக இத்துறை பரிணாமம் பெற்றுள்ளபோது, வழிகாட்டல் ஆலோசனையில் ஈடுபடுவோரும், தொழில்சார் தகைமைகளைக்கொண்ட நிபுணத்துவ சேவையை வழங்கக்கூடியவராக இருத்தல் வேண்டுமென எதிர்பார்க்-கப்படுகிறது.
இன்றைய சமூக அமைப்பில் வழிகாட்டல் ஆலோசனைச் சேவை-யின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டுள்ளது. மேலைத் தேசங்களில் உள்ளதுபோன்று இலங்கையிலும் இச்சேவை வளர்ச்சி பெறவில்லை யாயினும், இன்று பல்வேறு காரணிகள் அதன் வளர்ச்சியை ஊக்கு-விக்கின்றன. இலங்கைப் பாடசாலைகளில் 1970களிலிருந்து வழிகாட்டல் ஆலோசனைச்சேவை அறிமுகமாகியது. பின்னர், ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் கல்விக் கலைத்திட்;டத்தில் வழி-காட்டல் ஆலோசனை முக்கிய ஒரு பாடத்துறையாகச் சேர்க்கப்பட்-டுள்ளது. இலங்கையின் கல்வி தொடர்பான செயலணிக்குழுவில் வழிகாட்டல் ஆலோசனைக்கென விசேட குழுவொன்றை அமைப்பதற்-கான விதந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
அறிவுத்துறைகளின் பெருக்கம், புதிய தொழினுட்ப வளர்ச்சி, பொதுசன ஊடகங்களின் அபரிமித செல்வாக்கு காரணமாகக் கல்வியும் ஏனைய துறைகளும் மாற்றங்களுக்குள்ளாகின்றன. புதிய தலைமுறை யினரின் தேவைகளும் அபிலாஷைகளும் சிக்கற்றன்மையடைகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில், திறந்த பொருளாதாரம் மற்றும் பூகோளமயமாக்கம் போன்ற விடயங்கள் சார்பான தெளிவான விளக்க மின்மை இளைஞரிடையே பல்வகைப்பட்ட உளவியல் சீராக்கப் பிரச்-சினைகளையும் முரண்பாடுகளையும் உருவாக்குகின்றது. இவர்களுக்கு வழிகாட்டவேண்டிய ஆசிரியரும் பெற்றோரும் போதிய விளக்கமின்றித் தத்தளிக்கின்றனர். வழிகாட்டல் ஆலோசனை பற்றிய விளக்கங்களை இவர்கள் எல்லோரும் நிச்சயமாக அறிந்திருத்தல் வேண்டும். 
எமது கல்வியமைப்பு சமுதாயத் தேவைகளையும் எதிர்பார்ப்பு களையும் நிறைவுசெய்யவில்லை என்னுங் குற்றச்சாட்டு, பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் தமது ஆற்றலுக்கும் திறமைக்-கும் எதிர்கால முன்னேற்றத்துக்கும் பொருத்தமான பாடங்களையும் பயிற்சி நெறிகளையும் தெரிவுசெய்வதற்கான வழிகாட்டல்கள் இன்-மையே இதற்குக் காரணமாகும். பொருத்தமான கல்வி பற்றிய தீர்மா-னங்களை மேற்கொள்வதில் சமுதாயத்திலுள்ள சகல தரப்பினரும் கூடுதலாக அக்கறை செலுத்த வேண்டும். 
இலங்கையிலுள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும் இன்னொரு முக்கிய பிரச்சினை வேலையின்மையாகும். இப்பிரச்சினையும் கற்றோர் மத்தியிலே கூடுதலாகக் காணப்படுதல் அவதானிக்கத்தக்கது. தமது கல்வித் தகைமைக்கும் ஆற்றலுக்கும் அனுபவங்களுக்கும் பொருத்த-மான தொழில் எதுவென இனங்காண்பதிலுள்ள பிரச்சினையே வேலை-யின்மைக்கான காரணமாகுமென வழிகாட்டல் ஆலோசகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஒரு தொழிலுக்கான தகைமை, அதற்கான சந்தர்ப்பம், குறிப்பிட்ட அத்தொழிலில் முன்னேறுவதற்கான விருப்பம், ஊக்கம் என்பன ஒருவரிடம் காணப்படும்பொழுது, அவருடைய ஆளுமை முழுமையாக வெளிப்படுவதற்குச் சந்தர்ப்பம் உண்டு. இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்விக்கும் தொழிலுக்குமான தொடர்புகள் குறைவாக உள்ளன. இங்கு வழங்கப்படும் கல்விக்கும் தொழில் வழங்குநரின் எதிர்பார்ப்புகளுக்குமிடையே பாரிய இடைவெளி-யுண்டு. பொருத்தமான தொழில்களைத் தேடுவதில் இளைஞர் மத்தியில் பிரச்சினைகள் உண்டாகின்றன என்பது மட்டுமின்றி, அவர்கள் விரக்தி நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இவற்றின் வாயிலாக, பாடசாலைகளி-லும் பல்கலைக் கழகங்களிலும் தொழிலுக்கு வழிகாட்டுதல் ஒரு முக்கிய விடயம் என்பது உணர்த்தப்பட்டுள்ளது. 
மேலும், தற்காலச் சமுதாயச் செயற்பாடுகளின் காரணமாகப் பெற்றோர், பெண்கள், முதியோர், வேலைக்குச் செல்வோர் எதிர்நோக்-கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் பல்வேறு மட்டங்களில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கவேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 
இலங்கையில், வழிகாட்டல் ஆலோசனை நீண்டகாலமாகக் கவனிக்கப்படாத ஒரு துறையாக இருந்தமையால், தொழில்சார் வழிகாட்டல் ஆலோசகர்கள் போதிய அளவில் உருவாக்கப்படவில்லை. குறிப்பாகத் தமிழ்மொழி மூலம் இச்சேவையை வழங்கக்கூடியவர்களின் தொகை மிகக் குறைவு. வழிகாட்டல் ஆலோசனைச்சேவை பற்றிய அடிப்படை அறிவையும் விளக்கத்தையும் பெற உதவும் நூல்களும் தமிழ்மொழியில் கிடைப்பது மிகக் குறைவே.
தமிழ்மொழி மூலம் வழிகாட்டல் ஆலோசனை பற்றிக் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாத-மாகும். வழிகாட்டல் ஆலோசனை பற்றிய வரைவிலக்கணங்கள், விளக்கங்கள் இங்கு விரிவாகத் தரப்பட்டுள்ளன. ஒருவருடைய ஆளு-மைப்பண்புகளை விருத்திசெய்வதில் ஆலோசனையின் செல்வாக்கு, வழிகாட்டல் ஆலோசனையின் வகைகள், வழிகாட்டல் நுட்பங்கள் மற்றும் தொழிலுக்கு வழிகாட்டல் பற்றிய புதிய தொழினுட்பங்கள் போன்ற விடயங்கள் தொடர்பான பல புதிய கருத்துக்கள், இலகுவான மொழிநடையில் விரிவாகவும் தெளிவாகவும் இந்நூலில் எடுத்துக்காட்-டப்பட்டுள்ளன. கல்வித் துறையோடு தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத் தர்கள் மாத்திரமன்றிப் பெற்றோர், பெரி-யோர், இளைஞருடைய அபிவிருத்தியில் அக்கறைகொண்டோர், விசேட தேவையுடைய பிள்ளை களின் விருத்தியில் ஆர்வமுள்ளோர் போன்ற சகல தரப்பினருக்கும் இந்நூல் சிறந்ததொரு அடிப்படையாக விளங்கும் எனக்கூறலாம்.
கலாநிதி. விமலா கிருஷ்ணபிள்ளை, நீண்டகால அனுபவம் மிக்க ஒரு விரிவுரையாளர். கொழும்புப் பல்கலைக்கழகக் கல்வித்துறை, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற் றில் வழிகாட்டல் ஆலோசனை பற்றி நீண்டகாலமாகக் கற்பிப்பதன் மூலம் அவர் பெற்றுக்கொண்ட அறிவும் அனுபவமும், இத்தகையதொரு பெறுமதி வாய்ந்த நூலை இயற்றுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளன. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்நூலை வெளிக் கொணருவதற்கு நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலாநிதி. மா. கருணாநிதி
கல்வித்துறை
கொழும்புப் பல்கலைக்கழகம்

செல்வாக்குச்         à®šà¯†à®²à¯à®¤à¯à®¤à¯à®®à¯ குடும்பக் காரணிகள் 
10.    à®¨à®Ÿà®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பிரச்சினைகளைத் தடுப்பதற்கான         à®šà®¿à®² வழிமுறைகள்
11.    à®µà®•à¯à®ªà¯à®ªà®±à¯ˆ முகாமைத்துவமும் ஒழுக்காற்றுப்         à®ªà®¿à®°à®šà¯à®šà®¿à®©à¯ˆà®•à®³à¯à®®à¯
12.    à®ªà®¾à®Ÿà®šà®¾à®²à¯ˆà®•à®³à®¿à®²à¯ மாணவர் பற்றிய மதிப்பீடுகள்
13.    à®ªà®¾à®Ÿà®šà®¾à®²à¯ˆ மட்டக் கணிப்பீடு : நடைமுறைகளும்         à®ªà®¿à®°à®šà¯à®šà®¿à®©à¯ˆà®•à®³à¯à®®à¯
14.    à®‡à®²à®™à¯à®•à¯ˆà®¯à®¿à®²à¯ ஆரம்பக்கல்வியில் நியாயத்         à®¤à®©à¯à®®à¯ˆà®¯à¯à®®à¯ சமவாய்ப்பும்
15.    à®‡à®²à®™à¯à®•à¯ˆà®ªà¯ பாடசாலைகளில் எட்டாம்,         à®ªà®¤à¯à®¤à®¾à®®à¯ வகுப்பு மாணவரின் கல்வியடைவுகள்