Vimala, Krishnapillai Dr

பாடசாலைகள் கல்வி அறிவையும், சிறந்த உளப்பாங்குகளையும், பயனுள்ள திறன்களையும் வழங்கும் இலக்குகளுடன் இயங்கி வருகின்ற போதிலும் இன்றைய சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்கள் காரணமாக, மாணவர்களுக்கு இன்று பல்வேறு துறைகளில் வழிகாட்டலும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன. தொழில், கல்வி, பாடப்பிரிவுகளைத் தெரிதல் போன்றவற்றில் மட்டுமன்றி மாணவர் அடைகின்ற விரக்திகள், பதட்டங்கள், அவர்களிடம் எழுகின்ற அந்தரங்கமான பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு நல்வழி காட்ட, இப்பணியில் கோட்பாட்டு அறிவும் செயற்பாட்டு அனுபவமும் மிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இத்துறை சார்ந்த தமிழ் நூல்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கலாநிதி விமலா கிருஷ்ணபிள்ளை அவர்கள் இந்நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மட்டுமன்றி பெற்றோரும் பயனடையக் கூடிய இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகின் வரவேற்பை நிச்சயம் பெறும்

 

விமலா கிருஷ்ணபிள்ளை புத்தகங்கள்
2012 - உளவியல் - வழிகாட்டலும் ஆலோசனையும்
2009 - உளவியல் - வழிகாட்டலும் ஆலோசனையும்