Ponnambalam, M

1950களின் இறுதியிலிருந்து இன்றுவரை தீவிர இயக்கம் கொண்டவர். இவர் ஈழத்தின் நவீன கலை இலக்கிய பரப்பில் முக்கியமான ஆளுமை. கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசனம், கட்டுரை என பல்வேறு களங்களிலும் இயங்கி வருபவர். தமக்கென்று கருத்துநிலைத் தெளிவு கொண்டவர். அதன் வழியே படைப்பாக்க உந்துதல் கொண்டு ஆத்ம தரிசனத்தின் பன்முகத்தை ஆராயும் பண்பை படைப்பாளுமையாக வெளிப்படுத்துபவர்.
மரபு வழியான அறிதல்முறை படைப்பாக்க முறைமை முதற்கொண்டு நவீனத்துவமான அறிதல்முறை, சிந்தனைமுறை சார்ந்து சுய விசாரணையில் ஈடுபடும் முதிர்ச்சியும் பக்குவமும் இவரது தனித்தியல்பாக உள்ளது. இதுவே சிறார் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தன்னாலியன்ற பங்களிப்பை வழங்க முடிகின்றது.
 
சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இலக்கியம் படைக்கும் கலைஞர் அல்ல இவர். மாறாக சிறுவர்களின் உளவிருத்தி, சிந்தனை மட்டம், படைப்பாக்க உந்துதல் முதலானவற்றின் அம்சங்களையும் கருத்தில் எடுத்து சிறுவர்கள் நிலை நின்று அவர்களுடன் ஊடாடும் எழுத்து மரபை உருவாக்குவதில் அதிகம் அக்கறை காட்டுபவர்.

மு.பொன்னம்பலம் புத்தகங்கள்
2010 - குழந்தை இலக்கியம் - கடத்தல்காரர்கள்
2010 - குழந்தை இலக்கியம் - குகைக்குள் யார் ?
2010 - அகராதி - எனக்குப் பசிக்குதே
2010 - குழந்தை இலக்கியம் - செவ்வாய் மனிதன்
2010 - குழந்தை இலக்கியம் - கலைகள் செய்வோம்
- குழந்தை இலக்கியம் - செவ்வாய் மனிதன்
- குழந்தை இலக்கியம் - கலைகள் செய்வோம்