Book Type (புத்தக வகை) : விஞ்ஞானக் கட்டுரைகள்
Title (தலைப்பு) : திறவுகோல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-05-03-014
ISBN : 978-955-1857-13-4
EPABNo : EPAB/2/19265
Author Name (எழுதியவர் பெயர்) : பொ.கனகசபாபதி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2019
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 400
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : திறவுகோல்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 136
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • அழகுக்கும் அறிவிற்கும் உத்தரவாதம் மனித முட்டைகள் விற்பனையில்
  • முதுமை இனி இல்லை புதுமையான கண்டுபிடிப்பு
  • Mouse க்கு வந்த மவுசு
  • ‘நீ இன்றேல் நான் இல்லை”நாளை இது நிலைக்குமா?
  • அர்த்தநாரீஸ்வரர் என்பதில் அர்த்தம் உள்ளது 
  • நெற்றிக்கண் காணமுடியுமா?
  • 2050இல் முதியவர்க்கு உயிர்போகாப் பிரச்சினை
  • பெயர் சொல்ல ஒரு பிள்ளை ஆண்பிள்ளை?
  • ஆண்களுக்குக் கேடுகாலம் வருகிறதா?
  • ஆண்களாலும் முடியும், ஆனால்...?
  • இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு தந்தையர்
  • சிறுவனின் வயிற்றில் சிசு
  • இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளின் பின்னர்?
  • மனிதக் கூர்ப்புக்கு நம் தமிழர் தடையா?
  • எனது வயது 150,0000 என்றால் நம்புவீர்களா?
  • தாயே சேய்க்கும் சேயானாள்
  • தாயே சேய்க்கும் சேயானாள்
  • இந்த நூற்றாண்டில் மனிதன் ளுரிநச அயn ஆகிறான்
  • நீர் வாழ் மனிதனை உருவாக்க ஆயத்தங்கள் நடைபெறுகின்றனவா?
  • பெண்ணினது மூளை பல நடவடிக்கைகளை ஒரே சமயத்தில் நடத்தும் தகைமை உடையது
  • ஏகநிலை பற்றி எடுத்துச்சொன்ன வள்ளுவர்
  • பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? திருமந்திரம் சொல்கிறது
  • கி.பி 2103ல் நான் பேசுகிறேன்
  • இதைத் தான் ஊழ் என்பதா?
  • நாற்றுப் போட்டு நல்லிழையம் வளர்க்கலாம்
  • பெண் எனும் பேராச்சரியம்
  • ஆண் பாவம் பொல்லாதது
  • திருமந்திரத்தில் ஒரு மந்திரம்
  • நந்தி தேவர் தோன்றும் காலம் வந்தாச்சு
Full Description (முழுவிபரம்):

என்னை எழுத வைத்தவர் 'தமிழர் தகவல்' ஆசிரியர் நண்பர் திரு. திருச்செல்வம். என்னைக் கொண்டு எழுதுவித்தவர் 'வெற்றிமணி' மற்றும் 'சிவத்தமிழ்' ஆகியவற்றின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன்.
பொதுவாக நான் என்றுமே எழுதுவதில் ஆர்வம் காட்டியவன் அல்ல. எப்படியோ திருச்செல்வத்தின் பார்வையில் பட்ட என்னை 'கனடா வாழ் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், புதிய சூழல், புதிய கலாசாரம், புதிய கல்வி முறை எனப்பல உள்ளனவே அவை பற்றி ஏதாவது எழுதுங்களேன் உபயோகமாக இருக்கும்' என வருந்தி எழுத வைத்தார். அவைகளைத் தொகுத்து இரண்டு நூல்களாகவும் வெளி-யிட்டுள்ளார். என்னை எழுத வைப்பதற்கு அவர் கையாண்ட உத்தி சாம, பேத, தான, தண்டம். 
'தமிழர் தகவல்' வழங்கிய கௌரவத்தினைப் பெறுமுகமாகக் கனடா வந்த சிவகுமாரன் மறைந்த எனது மகன் நினைவாக நான் சிறு-வர்களுக்காக எழுதிவைத்த சிறுகதைகள் சிலவற்றினை எடுத்துக் கொண்டு ஜெர்மனி சென்றார். 'மாறன் மணிக்கதைகள்' என அழகான நூலாக்கி அதனை ரொறன்ரோ எடுத்து வந்து அவனது முதல் ஆண்டு நினைவு நாளன்று வெளியீடு செய்தார். திரும்ப ஜெர்மனி செல்கின்ற போது ஒரு அன்புக் கட்டளையுடன் சென்றார். அவை போன்ற சிறுவர்-களுக்கான சிறுகதைகளை வெற்றிமணியில் பிரசுரிப்பதற்காக எழுது-மாறு வேண்டுகோள் விடுத்தார். அன்புக் கட்டளையை மீற முடிய-வில்லை. முயன்றேன். சில எழுதவும் செய்தேன். அவற்றில் சிலவற்றி-னைத் தொகுத்து எனது மாணவியும் பிரபல எழுத்தாளருமான திருமதி கோகிலா மகேந்திரன் 'மாறன் மணிக்கதைகள் -2' எனத் தாயகத்தில் வெளியிட்டுள்ளார்கள். 
சிவகுமாரன் எந்த நேரமும் தனது பத்திரிகை பற்றிய சிந்தனை-யிலேயே இருப்பவர். ஆகவே, அவர் சிந்தனையில் அடுத்துத் தோன்றிய எண்ணம் என்னைக் கொண்டு விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுவித்தால் என்ன என்பது. அது அன்புக் கட்டளையாக என்னிடம் வந்தது. பிடி-வாதக்காரர். கொஞ்சம் கூட நெகிழ்ச்சி காட்டமாட்டார். சொன்னால் சொன்னதுதான். நான் வேறு எந்தக் கட்டுரையோ, கதையோ எழுதினால் வரையறை செய்து விடுவார். இந்த நிர்ப்பந்தம் காரணமாக நான் விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்க வேண்டியவனாகிவிட்டேன். 
இத்தொகுதிக்கான அணிந்துரையினை எழுதியவர் எனது அன்பிற்குரிய அதிபரும், எழுத்தாளரும், சிறந்த பேச்சாளருமான சைவப்-புலவர் சு.செல்லத்துரை அவர்கள். பின் அட்டையில் என்னைப் பற்றிய அறிமுகத்தினை எழுதியவர் பிரபல எழுத்தாளரும் என் அபிமான மாணவியுமான கோகிலா மகேந்திரன் அவர்கள். இவர்கள் இருவருக்கும் என் இதயபூர்வ நன்றிகள். 
வெற்றிமணி சிவகுமாரன் அவர்கள் திறவுகோல் இது ஒரு விண்-ணாணம் என்ற தலைப்பில் ஜேர்மனியில் வெளியிட்டார். கட்டுரையில் சேர்ப்பனவுகளுடன் அன்புக்குரிய மாணவி கோகிலாவின் அறிமுகம் மூலம் தாயக சேமமடு பதிப்பகத்தினூடாகத் திறவுகோல் விஞ்ஞானக் கட்டுரைகள் என்ற தலைப்பில் வெளிவருவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 
பொ.கனகசபாபதி