Book Type (புத்தக வகை) : உளவியல்
Title (தலைப்பு) : ஆளுமை உளவியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-10-05-055
ISBN : 978-955-1857-54-7
Author Name (எழுதியவர் பெயர்) : மணியம் சிவகுமார்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 106
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 380.00
Edition (பதிப்பு): 1ம் பதிப்பு 2009. மறுபதிப்பு 2016
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

2    à®†à®³à¯à®®à¯ˆ ஓர் அறிமுகம்
3    à®†à®³à¯à®®à¯ˆ வகைகள்
3.1    à®•à®°à¯à®¤à¯à®¤à¯à®¤à¯ திரிபு ஆளுமை
3.2    à®‰à®³à®šà¯ சிதைவு ஆளுமை
3.3    à®¤à®µà®¿à®°à¯à®ªà¯à®ªà¯ ஆளுமை
3.4    à®µà®°à®®à¯à®ªà¯ ஆளுமை
3.5    à®¨à®Ÿà®¿à®ªà¯à®ªà¯ ஆளுமை
3.6    à®¤à®©à¯ வழிபாட்டு ஆளுமை
3.7    à®šà®¾à®°à¯à®ªà¯à®¨à®¿à®²à¯ˆ ஆளுமை
3.8    à®•à®Ÿà¯à®Ÿà®¾à®¯ ஆளுமை
3.9    à®ªà®£à®¿à®µà¯ தாக்;குதல் ஆளுமை
3.10     à®šà®®à¯‚க எதிர்ப்பு ஆளுமை
4    à®†à®³à¯à®®à¯ˆà®•à¯à®•à¯‚றுகளும் பேச்சுக் கோளாறுகளும்
5    à®†à®³à¯à®®à¯ˆà®•à¯ கோட்பாடுகள்
5.1    à®®à®©à®¿à®¤ இனநல இருத்தல் நிலைக் கோட்பாடு
5.2    à®µà®•à¯ˆà®¯à®¿à®¯à®²à¯ கோட்பாடு
5.3    à®‰à®³à®ªà¯à®ªà®•à¯à®ªà¯à®ªà¯à®•à¯ கோட்பாடு
5.4    à®šà®®à¯‚கத் தன்முனைப்புக் கோட்பாடு
5.5    à®†à®³à®¿à®Ÿà¯ˆà®•à¯ கோட்பாடு
5.6    à®¨à®Ÿà®¤à¯à®¤à¯ˆà®•à¯ கோட்பாடு
6    à®†à®³à¯à®®à¯ˆà®šà¯ சோதனை முறைகள்
6.1     à®ªà¯‡à®Ÿà¯à®Ÿà®¿ முறை 
6.2     à®¤à®©à®¿à®¯à®¾à®°à¯ வரலாற்று முறை 
6.3     à®®à®¤à®¿à®ªà¯à®ªà¯€à®Ÿà¯à®Ÿà¯ முறை
6.4     à®•à®©à®µà¯à®ªà¯ பகுப்புமுறை
6.5     à®ªà¯Šà®°à¯à®³à¯ இணைத்தறி சோதனை
6.6     à®šà¯Šà®²à¯ இயைபுச் சோதனை
6.7     à®¤à®©à¯ விபரப்பட்டியல்கள் 
6.8     à®¤à®©à¯à®µà®¿à®³à®•à¯à®• வினா நிரல்கள் 

Full Description (முழுவிபரம்):

மனித ஆளுமை சமூக வரலாற்றின் தொடர்ச்சியான பதிவுக ளால் உருவாக்கப்படுகின்றது. சமூக இருப்பு (ளுழஉயைட நுஒளைவநnஉந) ஆளுமை யின் இருப்பாகின்றது. சமூக நிர்ணயிப்பின் பொருண்மியக் காரணி களின் வளர்ச்சியும் அவற்றினூடே தோற்றம் பெறும் பன்முகப் பாங்கு களும் ஆளுமையிலே பன்முகத் தோற்றப்பாடுகளையும் பன்முக உறு பண்புகளையும் (வுசயவைள) உருவாக்கிய வண்ணமுள்ளன. தனிச் சொத் துரிமையின் வளர்ச்சியோடு மனிதரின் தனித்துவங்களைக் கண்டறி யும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படலாயின. மனிதர் பிரபஞ்சத்தின் நடுவன் பொருளாக்கப்பட்டனர். அந்நிலையில் ஆளுமை, தலைமைத்துவம் போன்ற எண்ணக்கருக்கள் உளவியலின் ஆய்வுப் பொருட்களாயின.
மேலைப்புலத்தில் வளர்ச்சி பெற்ற உளவியற் சிந்தனா கூடங்க ளாகிய உளப்பகுப்புவாதம், நடத்தைவாதம், அறிகைவாதம், மானிட வாதம் முதலியவற்றை அடியொற்றி ஆளுமை உளவியலை நண்பர் மணியம் சிவகுமார் இந்நூலில் அனைத்தடக்க (ஊழஅpசநாநளெiஎந) முறை யில் விளக்கியுள்ளார்.
சமூகத்திலே காணப்படும் சுரண்டலும், பறிப்பும், முறியடிப்புப் போட்டிகளும், மேலெழ முடியா அவலங்களும் மனித ஆளுமையில் உதிர்வுகளையும் சிதறல்களையும், உடைதல்களையும் ஏற்படுத்திய வண்ணமுள்ளன. அந்நிலையிலே தோற்றம்பெறும் ஆளுமை வகைப் பாடுகளும் இயல்புகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. உளமுறிவினதும் உளச்சிதறல்களினதும் வெளிப்பாடுகளாக அமை யும், பதிவுகளும் தெறிப்புகளும், பரவற் கோலங்களும் சித்திரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
ஆளுமை உளவியலுக்குப் 'பெருந்தளமிட்டோர்' வரிசையில் உளப்பகுப்புச் சிந்தனையாளர் சிறப்பிடம் பெறுகின்றனர். பின்னைய உளப் பகுப்புச் சிந்தனையாளரின் ஆளுமை நோக்கும் இந்நூலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க நூற் பண்பாகவுள்ளது.
உளவியல் எண்ணக்கருக்களை வரையறை செய்வதிலும், விளக்குவதிலும் மேலெழுந்துவரும் மட்டுப்பாடுகளை ஆசிரியர் அறிகை நிலையில் அணுகியிருத்தல் நூலாக்கத்தில் இடம்பெற்றுள்ள புறவயத் தன்மையைப் புலப்படுத்துகின்றது. 
உளவியற் கோட்பாடுகள் மனித விளக்கத்தைப் பொறுத்தவரை சரியானவை என்றும், பொருத்தமானவை என்றும் அவற்றை மறுப் பின்றியும் திறனாய்வின்றியும் ஏற்கும் உளப்பாங்குகள் வளர்ந்துவரும் அறிகைச் சமநிலை குன்றிய நிலையில் உளவியல் சார்ந்த திறனாய்வுச் சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்கும் இந்நூல் பயனுள்ள ஆக்க மாக அமைந்துள்ளது.
ஆளுமை உளவியல் ஆய்விலே ஒரு முக்கிய பரிமாணமாக அமைவது கணியப்படுத்தும் செயற்பாடாகும். இந்நூலில் ஆளுமை தொடர்பான புறவயச் சோதனைகள் பற்றிய தொகுப்பும் இடம்பெற் றுள்ளமை நூலின் அறிகைப் பெறுமதியை அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறான எழுத்தாக்கங்கள் தமிழ்மொழியில் வளர்ச்சியுற்று வரு தல் தமிழின் நவீனப்பாட்டுக்கும், கனதியான வாசிப்பை வேண்டி நிற்போருக்கும் நடைமுறைப் பயனை விளைவிக்கவல்லது. 
இந்நூலாசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உளவியல், கல்வியியல் போன்ற துறைகளில் தொடர் கல்வியை மேற்கொண்டு வரும் ஒரு இளநிலை ஆராய்ச்சி மாணவராக இருக்கின்றார். தமது புலமைத்துவத்தை விரிவாக்குவதுடன் மட்டும் நிற்காமல், அவற்றைக் கருத்தாக்கம் செய்து ஆக்கமாகவும் படைக்கும் திறன் பெற்றவராகவும் உள்ளார். இவரின் எழுத்தாக்கப் பணிகள் தொடரவும், வளரவும், துலங்கவும் எனது நல்வாழ்த்துக்கள்.

சபா.ஜெயராசா

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : ஆளுமை உளவியல்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 112
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

2 ஆளுமை ஓர் அறிமுகம்
 
3 ஆளுமை வகைகள்
  • 3.1 கருத்துத் திரிபு ஆளுமை
  • 3.2 உளச் சிதைவு ஆளுமை
  • 3.3 தவிர்ப்பு ஆளுமை
  • 3.4 வரம்பு ஆளுமை
  • 3.5 நடிப்பு ஆளுமை
  • 3.6 தன் வழிபாட்டு ஆளுமை
  • 3.7 சார்புநிலை ஆளுமை
  • 3.8 கட்டாய ஆளுமை
  • 3.9 பணிவு தாக்குதல் ஆளுமை
  • 3.10 சமூக எதிர்ப்பு ஆளுமை
 
4 ஆளுமைக்கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்
 
5 ஆளுமைக் கோட்பாடுகள்
  • 5.1 மனித இனநல இருத்தல் நிலைக் கோட்பாடு
  • 5.2 வகையியல் கோட்பாடு
  • 5.3 உளப்பகுப்புக் கோட்பாடு
  • 5.4 சமூகத் தன்முனைப்புக் கோட்பாடு
  • 5.5 ஆளிடைக் கோட்பாடு
  • 5.6 நடத்தைக் கோட்பாடு
 
6 ஆளுமைச் சோதனை முறைகள்
  • 6.1 பேட்டி முறை 
  • 6.2 தனியார் வரலாற்று முறை 
  • 6.3 மதிப்பீட்டு முறை
  • 6.4 கனவுப் பகுப்புமுறை
  • 6.5 பொருள் இணைத்தறி சோதனை
  • 6.6 சொல் இயைபுச் சோதனை
  • 6.7 தன் விபரப்பட்டியல்கள் 
  • 6.8 தன்விளக்க வினா நிரல்கள் 