Book Type (புத்தக வகை) : கலைகள்
Title (தலைப்பு) : தமிழ் அழகியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2014-10-12-130
ISBN : 978-955-685-029-1
EPABNo : EPAB/2/19286
Author Name (எழுதியவர் பெயர்) : ஏ.என்.கிருஷ்ணவேணி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2014
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 136
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 380.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

(1)    à®…றிமுகம்    01                    
(2)    à®¤à®®à®¿à®´à¯à®•à¯ கவிதையியல்    08    
(3)    à®…றநெறிக்கால அழகியல்    30    
(4)    à®¤à®®à®¿à®´à¯à®•à¯ கவிதைப் பாரம்பரியத்தில் பக்திச்சுவை    47    
(5)    à®‡à®²à®•à¯à®•à®£ நூல்களின் அடிப்படையில் அழகியல்    69
(6)    à®¨à®¾à®Ÿà¯à®Ÿà®¿à®¯ அபிநயங்களும் கலை அநுபவமும்    90     
(7)    à®ªà®£à¯à®Ÿà¯ˆà®¤à¯ தமிழர் மதமும் அழகியலும்    105    
(8)    à®¤à¯†à®©à¯à®©à®¿à®¨à¯à®¤à®¿à®¯ சிற்பக்கலை மரபு     122
உசாத்துணைகள்    135

 

Full Description (முழுவிபரம்):

அழகியல் கலையின் அழகுசார் பண்புக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட கலைக் கொள்கைகள் பற்றி விசாரணையாக விளங்குவது கலை உருவாக்கம், ரசனை, வியாக்கியானம், விமர்சனம், மதிப்பீடு போன்ற விடயங்களின் அடிப்படையிற் கலைகளையும், கலைக்கொள்கைகளையும் ஆராய்வது. மேலைத்தேசத்தைப் பொறுத்த மட்டில் அழகியல் நீண்டகால தத்துவத்துறையின் ஒரு பிரிவாக வளர்ந்து பின் தனித்துறையாக தனக்கேயுரிய முறைமையியலூடு வளர்ந்து வந்தது. ஒரு செழுமையான கலை விமர்சனம் அரிஸ்டோட்டில், பிளேட்டோ காலத்தில் இருந்து வந்தமையை அழகியல் வரலாறு எடுத்துக் கூறுகிறது. 18ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மேலைத்தேய அழகியல் வரலாற்றில் ரசனை பற்றிய கருத்தாடல் மூலம் திறனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுதந்திரமான, ஆரோக்கியமான,   ஓர் விமர்சனம் கலையை அடிப்படையாகக் கொண்டு வளர்வதற்கு வழிவகுத்தது.  
    à®®à¯‡à®²à¯ˆà®¤à¯à®¤à¯‡à®¯à®•à¯ கலை மெய்யியலாளர்களில் இமானுவேல் காண்ட் (1790) (வுhந ஊசவைஙைரந ழக யுளநவாநவiஉ துரனபநஅநவெ) டேவிட்  à®¹à®¿à®¯à¯‚ம்(1757) (வுhந ளுவயனெயசநன ழக வுயளவந) போன்றோர் ரசனையை அடிப்படையாகக் கொண்ட கலை, அழகியல் அநுபவம் பற்றிய கொள்கைகளை விளக்கியுள்ளனர். இந்திய அழகியல் சமஸ்கிருதக் கவிதையியலை ஆதாரமாகக் கொண்டு அலங்கார சாஸ்திரங்களின் அடிப்படையில் வளர்ந்து வந்துள்ளது. பரதரது நாட்டிய சாஸ்திரம் தொடக்கம் பண்டிதர் ஜெகன்னாதரது ரஸகங்காதரம் வரைக்கும் அலங்கார சாஸ்திர நூல்கள் தோன்றி வளர்ந்துள்ளன. 
    à®‡à®¨à¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®±à¯ தமிழ் அழகியல் பற்றிய ஆய்வுகள் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளன என்று ஆராயும் போது, அது வரன்முறைக்குட்பட்ட வகையில் ஆராயப்பட்டுள்ளதா என்ற வினா எம் முன்னால் எழுகிறது. கிரேக்கம், லத்தீன், வடமொழிகளுடன் ஒப்பிடக் கூடிய தொன்மையும், இலக்கியச் செழுமையும், அழகும் கொண்டது தமிழ்மொழி. பரதரது நாட்டிய சாஸ்திரத்துடனும், அரிஸ்டோட்டிலின் கவிதையியலுடனும் ஒப்பிட்டு நோக்கும் அளவுக்கு கலை, இலக்கியங்களைக் கொண்டது. தொல்காப்பியம் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரம், நாட்டிய சாஸ்திர 'ரசனைக் கொள்கை' அரிஸ்டோட்டிலின் 'கதாசிஸ்' கொள்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் இயலாகப் பொருளதிகாரம் ஆறாவது இயலாக 'மெய்ப்பாட்டியல்' விளங்குகிறது. மிக அண்மைக்காலமாகப் பொருளதிகாரத்தை, அதன் வைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டு அதனை ஒரு கவிதையியல் நூலாக அங்கீகரித்தமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந் நிலையிலும் தொல்காப்பியத்தை தளமாகக் கொண்ட தமிழ் அழகியல் நூல்கள் குறைவாகவே உள்ளன. 
    à®®à¯€à®©à®¾à®Ÿà¯à®šà®¿à®šà¯à®¨à¯à®¤à®°à®©à®¾à®°à¯, திருஞானசம்பந்தன், சுந்தரமூர்த்தி, இந்திரன், தமிழவன், தி.சு.நடராஜன் போன்றோர் இத்துறை நூல்களை எழுதியுள்ளனர். தொல்காப்பியக் கவிதையியல் பற்றிய பல அறிஞர்களும் ஆக்கபூர்வமான, ஆய்வு ரீதியான கட்டுரைகளை எழுதியுள்ளனர். இத்தகைய ஒரு பின்புலத்தில் தமிழர் பண்பாட்டில் இயற்றமிழை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வந்த தமிழ் அழகியல் பற்றிய ஒரு நூலை எழுத வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணத்தின் வெளிப்பாடாக 'தமிழ் அழகியல்' என்ற எனது நூல் வெளிவருகிறது.  
    à®¤à®®à®¿à®´à®¿à®²à¯ முத்தமிழ்க் கோட்பாடு முதன்மையானது. இது இயல், இசை, நாடகத் தமிழாகவே உள்ளது. இசை, நடனம், நாடகம் போன்ற கலைகள் பண்டைய சமூகப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவை. மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய இக்கலைகள், மக்களது விருப்பு, வெறுப்புக்கள், அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள், சடங்குகளுடன் தொடர்புடையனவாக வளர்ந்து கலையாகப் பரிணமித்தமை கண்கூடு. தமிழ் மக்கள் மத்தியில் சிற்ப ஓவியக்கலைகளும் நன்கு பயிலப்பட்டு வந்தமைக்குத் தமிழ் இலக்கியங்கள், காப்பிய நூல்கள், சிற்ப, ஓவியங்கள் ஆதாரமாக உள்ளன. பண்டைக்காலந் தொட்டு இற்றைவரை இக் கலைகளுக்கான ஆற்றொழுக்கான பின்னணியின் அடிப்படையில் இவை மேலும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியன. 'முத்தமிழ்' என்ற கோட்பாட்டிற்குள் இவற்றை அடக்கி விட முடியாது. தமிழ் மக்கள் மத்தியிற் காணப்பட்ட தமிழர் அழகியற் கூறுகள்  à®’வ்வொன்றையும் நாம் தொடர்ந்து பின்பற்றியோ, முன்னெடுத்தோ வந்தவர்கள் என்று கூறவும் முடியாது.  à®¤à®®à®¿à®´à®°à¯à®•à¯à®•à¯‡ உரிய காண்பியக்கலைசார் அழகியற் கொள்கைகளை மீட்டெடுக்கும் போதே தமிழர் அழகியல் பற்றிய பூரணமான கொள்கைகளை முன்வைக்க முடியும். இதில் இளம் ஆய்வாளர்கள் பலர் தம்மை ஈடுபடுத்தியுள்ளமை தமிழர் அழகியலைப் பொறுத்தமட்டில் ஓர் ஆரோக்கியமான விடயமாகும். இத்தகைய பின்புலத்தில் பண்டைத் தமிழர் வாழ்வியலுக்கு அழகைக் கொடுத்த அன்பின் ஐந்திணையைப் பொருளாகக் கொண்ட அகத்திணை நூல்கள், புறத்திணை நூல்கள், தமிழ்மொழி, இலக்கியம், தமிழர் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம், அறநெறிக் காலத்திற் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள், அனைந்திய அளவிலும், உலகளாவிய ரீதியிலும் தமிழர் ஆளுமைப் பறைசாற்றிய பக்தி இலக்கியங்கள், தமிழர் பண்பாட்டிற்குப் பெருமை சேர்த்த சோழர் காலத்திற் தோன்றிய இலக்கண நூல்களின் துணைக் கொண்டு, தொடர்ச்சியாக வளர்ந்த கவிதைப் பாரம்பரியத்தின் ஊடாகத் தமிழ் அழகியற் சிந்தனை முன்வைக்கப்படுகிறது. 
    à®®à¯‡à®²à¯à®®à¯ இந்தியாவுக்குரிய செந்நெறி நடன வகைகளுட் பரத நாட்டியம் முக்கியத்துவம் பெற்ற நடனமாக இருப்பதுடன் தமிழ் நாட்டிற்கே சிறப்பாக உரிய நடனமாகவும் உள்ளது. பரத முனிவரினால் இலக்கணம் வகுக்கப்பட்டதனால் பரத நாட்டியம் அபிநயங்களினாலும், முத்திரைகளினாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுடன், குறியீட்டு ரீதியான அர்த்தங்களை வெளிப்படுத்துவது. இறைவனையே ஆடற்கலை வல்லானாகக்கண்டு, கலைகளுக்கு உன்னத இடத்தைத் தந்து நடராஜ வழிபாட்டிற்கும், சிற்பங்களுள் நடராஜ வடிவத்திற்கும் முதன்மை கொடுத்தவர்கள் தமிழ்மக்கள். ஆடற்கலைக் கூறுகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டு சிற்பமும் அழகை வெளிப்படுத்தும் கலைவடிவங்களில் ஒன்றாகத் தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து வந்துள்ளது. அந்தவகையில் நாட்டிய அபிநயங்களும், கலை அநுபவம் பற்றியும், தமிழர் மத அநுபவம் பற்றியும், தென்னிந்திய சிறபக்கலை மரபு பற்றியும் இந் நூல் எடுத்துக் கூறுகிறது.
    à®‡à®¨à¯à®¨à¯‚லை அழகிய முறையில் அச்சேற்றி உதவிய சேமமடு பதிப்பக உரிமையாளர் சதபூ. பத்மசீலன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஏ.என்.கிருஷ்ணவேணி 
நுண்கலைத் துறை
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்