Krishnaveny, A.N Dr

கலாநிதி ஏ.என்.கிருஷணவேணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் தத்துவம், நுண்கலைகள் போன்றவற்றில் ஆழமான கற்றலும் தேடலும் கொண்டவர். 

குறிப்பாக, இவர் தமிழ் இலக்கிய மரபை அடிப்படையாகக் கொண்ட 'இரசனைக் கோட்பாடு' பற்றிய தேடுகையிலும் ஆய்விலும் கவனம் செலுத்துபவர். சைவசித்தாந்தம் குறித்து தெளிவாக மாணவர் நோக்கில் எடுத்துரைக்க விழைபவர். இவர் பல்வேறு ஆய்விதழ்களிலும், கருத்தரங்குகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கி வருபவர். 

ஏ.என்.கிருஷ்ணவேணி புத்தகங்கள்
2008 - சமய நூல் - சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்
2014 - கலைகள் - தமிழ் அழகியல்
2017 - சமய நூல் - சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்