Book Type (புத்தக வகை) : அகராதி
Title (தலைப்பு) : யாழ்ப்பாண அகராதி
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-05-04-015
ISBN : 978-955-1857-14-1
Author Name (எழுதியவர் பெயர்) : சந்திரசேகரப் பண்டிதர் சரவணமுத்துப் பிள்ளை
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 1008
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 4500.00
Edition (பதிப்பு): மூன்றாம் பதிப்பு
Binding (கட்டு): கெட்டி அட்டை
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

    தமிழ்மொழி மீது தீராத அன்பு கொண்டிருந்த நான் நேரடியாக தமிழ் பணியில் 2005ம் ஆண்டு தமிழ் புத்தக வெளியீடு, விற்பனை, மீள்பதிவுடன் ஆரம்பித்தேன். யாழ்ப்பாண அகராதி மீள்பதிவு நடைபெற்றபோது எனது பங்களிப்பு மிகவும் சிறியதாகவே அமைந்தது. தமிழ்நாட்டில் பிறந்த தமிழ்மண் பதிப்பக நிறுவனத்திரும், எனது 25 வருட நண்பருமான அண்ணன் கோ.இளவளகனா உழைப்பே மிகவும் அதிகமாக இருந்தது.  தமிழால் கொள்கையால் ஒன்றுபட்ட நாம் வாழ்வது மட்டும் வேறு நாடுகளில் இவ்வகராதியின் ஆரம்பம் எமது நாடு என்பது மட்டுமே பெருமை கொள்ள வேண்டிய விடயம். ஆனால் அதை நாம் கவனிக்காமலும் தெரியாமலும் இருந்துள்ளோம். அண்ணன் அவர்களின் பெரும் முயற்சியில் இதை தேடி எடுத்து மீண்டும் ஒவ்வொரு சொற்களாக அச்சு பதிவு செய்து சுமார் 1000 பக்கங்கள் அடங்கிய ஒரு பெரிய ஆவணமாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு படைத்துள்ளார். இந்த தமிழ் ஆவணத்தை எமது பார்வைக்கு தந்துதவியதற்காக அவரையும் அவரது குடும்பத்தாரையும் மணமார வாழ்த்தி எமது நன்றியை தெளியப்படுத்துகின்றோம். மேலும் எமது பார்வைக்குபடாமல் இருக்கும் அரிய பொக்கிஷங்களை, தேடி எடுத்து இம்மண்ணிற்கு தரவேண்டும் என்று எண்ணி, அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டும் என வேண்டுகின்றேன். 
இவ்வகராதியை பொறுத்தவரை மிகவும் சிறிய பங்களிப்பை செய்த என்னை பதிப்பாளர்களில் ஒருவராக உயர்த்தி உலக நாடுகள் முழுவதற்கும் விற்பனை உரிமையை எனக்கு தந்து 14ஃ05ஃ2005ஆம் ஆண்டு கொழும்பு தமிழ் சங்கத்தில் நடந்த பெரும் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி என்னை ஊக்குவித்த அண்ணன் கோ.இளவழகனார் அவரையும் அவர் தம் குடும்பத்தாரையும் வாழ்நாளில் நானும் எனது இல்லத்தாள் ஜெயராணி, குழந்தைகள் தர்ஷினி, சஞ்சயன், சஷிவர்ணன், அபிநந்தா ஆகியோர் இன்றைக்கும் ஏழேழு பிறப்பிற்கும் கட்ப்பாட்டுக்குரியவர்கள்.
2008ம் ஆண்டு ஆவணி 24ம் திகதி எனது பிறந்த நாளில் 3ம் பதிப்பாக இவ்வகராதி மீண்டும் வெளிவருகிறது. 2008ம் ஆண்டு யாழ்ப்பாண அகராதி பதிப்பாளராக இனங்காணப்பட்ட நான் 2002ம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் நாளில் தனியாக நூல்களை பதிக்க ஆரம்பித்து பேராசிரியர் தகைகளை நண்பர் மதுசூதனன் அவர்களினூடாக அறிமுகமாகிக் கொண்டு இந்த எட்டுமாத காலத்தில் சுமார் இருபத்திமூன்று கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளேன். இதன் அத்தனை பெறுமைகளும் அண்ணன் இளவழகனாரையே சாரும். யாழ்ப்பாண அகராதி பெருமைப்பட்டதை விட நான் அதனால் பெருமைப்பட்டதும் பயனடைந்ததும் அதிகம் என்பதை இதில் கூறிக்கொள்கிறேன். 
நீண்ட அனுபவமுள்ள பதிப்பாளர்களுக்கிடையில் புதியவராக முன் அனுபவம் இன்றி இத்தொழிலுக்கு வந்த என்னை மிகவும் ஊக்கமளித்து உங்களால் முடியும் என பல தடவை கூறி தனது தொடர் நூல்களை எனக்குப் பதிப்பிக்க உரிமை தந்த எனது மதிப்புக்குரிய பேராசிரியர் சபா.ஜெயராசா நட்புக்குரிய பேராசிரியர் சந்திரசேகரன், கலாநிதி கருணாநிதி, அண்ணனும் ஓய்வு நிலை உதவி அரச அதிபருமாகிய க.ஐயம்பிள்ளை, பேராசிரியர் கிருஷ்ணராசா, பேராசிரியர் அன்டனி நோர்பேட், கலாநிதி திருமதி கிருஷ்ணவேணி, பேராசிரியர் சத்தியசீலன், பேராசிரியர் சு.வித்தியானந்தன், ஓய்வுநிலை அதிபர் திருமதி கோகிலா மகேந்திரன், ஒய்வுநிலை அதிபர் கனகசபாபதி, தையல் முத்து தனராஜ், க.சி.குணரட்ணம், திரு.ஆ.முத்து தம்பிப்பிள்ளை , திரு.ஆப்டீன், திரு.பொன்னுத்துரை இவர்கள் எல்லோரையும் இத்தருணத்தில் அன்புடன் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். 
மிக குறுகிய காலத்தில் நாம் வெளியிட்ட நூல்களான கல்வி கோட்பாடுளும், மாற்றுச்சிந்தனைகளும் சமகால கல்வியில் சில பரிமாணங்கள், கற்றல் உளவியல், கல்வி சமூகவியல், கற்றல் கற்பித்தல் மேம்பாட்டுக்கான வழிமுறைகள், ஜோதியும் சுடரும், அழகியல், முகாமைத்துவ கோட்பாடுகள் ஒர் அறிமுகம், சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம், இலங்கையில் கல்வி வரலாறு, இலங்கை தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள், இலக்கியத் தென்றல், வளிமண்டலவியலும், காலநிலையிலும், உளவியல் முகங்கள், இலக்கியத் திறனாய்வு, திறவுகோள், தலைமைத்துவக் கோட்பாடுகள், நோத் முதல் கோபல்லவா வரை, மொழிக் காலனித்துவமுதம் பரதநாட்டியமும், நந்தியும் மலையகமும், யாழ்ப்பாண சரித்திரம், கல்வியியலும் கணிப்பீட்டியலும் போன்றவை விளங்குகின்றன. இவைகளுள் யாழ்ப்பாண அகராதியின் மூன்றாம் பதிப்பு எமது பதிப்பதற்கு கிடைத்த பெரும்பேறாகஎண்ணி எண்ணி மகிழ வைக்கிறது.  அகராதி ஒரு பொக்கிஷமாக எமது பதிப்பகத்திற்கு கிடைத்ததை எண்ணி மிக

Full Description (முழுவிபரம்):

மிக்க அரிதிற் கிடைப்பனவாகிய, அச்சுப்பதிவுப் பெற்ற தமிழ் நூல்களையும் இன்னும் அச்சில் வராத தமிழறிஞர் சிலரது ஆக்கங்களையும் அச்சுப்பதிவு செய்து அவற்றைத் தமிழ் பயிலும் மாணவரிடையே பரப்பும் பெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ள தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமிகு. கோ.இளவழகனார் அவர்களுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. 
திரு.ந.சி.கந்தையாப்பிள்ளையின் எழுத்தாக்கங்களை முதலிலே வெளிக்கொணர்ந்து, அவற்றைத் தொடர்ந்து வித்துவான் தி.வே.கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி எனும் பதினேழு நூல்களைக் கொண்டப் பெருந்தொகுதியினை வெளியிட்டுள்ள நண்பர் இளவழகனார் இப்பொழுது யாழ்ப்பாணத்து அகராதியெனவும், மானிப்பாய் அகராதியெனவும் அழைக்கப்பெறும் கையகராதியினை வெளியிடுகின்றார்.
இவ்வெளியீடு பற்றி  இவ்வெளியீட்டின் ஈழத்து முகவர் திரு.பத்மசீலன் என்னிடத்துக் கூறியபொழுது ஈழத்தின் ஆய்வாளர்கள் இருவரது குறிப்புரைகளைப் பெறுவது நலம் எனக் கூறினேன். ஒருவர் ஈழத்துத் தமிழ் கிறித்தவ இலக்கியங்களைத் தமது சிறப்பு ஆய்வுத்துறையாகக் கொண்டு அத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளவரான பேராயர் வண.எஸ்.ஜெபநேசன் ஆவார். இவர் தென்னிந்திய திருச்சபையின் யாழ்மறை மாவட்டப் பேராயராக இருந்தவர். மற்றவர் ஈழத்திலக்கியத்தைக் குறிப்பாக பதினேழு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளுக்குரிய ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைத் தமது சிறப்பு ஆய்வுத்துறையாக கொண்டுள்ள பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா ஆவார். இவர்கள் இருவரது குறிப்புரைகளும் இணைக்கப்பட்டுள்ளன. 
அக்குறிப்புரைகள் இரண்டும் இந்த அகராதி பற்றிய விளக்கங்களைத் தருகின்றன. தமிழகத்தில் யாழ்ப்பாணத்து அகராதியென்றும், மானிப்பாய் அகராதியென்றும் குறிப்பிடப்படுவது இக்கையகராதியே என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. இவ்வதிகார-தியின் தமிழ்ப் பெயரை தரும் பக்கத்தினில் சில முக்கிய செய்திகள் உள்ளன. முதலாவது  இதற்குத் தொகுத்தோர் வழங்கிய பெயர் 'பெயரகராதி' என்பதாகும். அப்பக்கத்தின் கீழ்ப்பாகத்தில் தரப்பட்டுள்ள குறிப்பு மிக முக்கியமானது. 
சாலிவாகன சகார்த்தம் தஎளசுநக்குச் சரியான கிருஸ்து வருஷம் 1842இல். நிகழாநின்ற பிலபவருஷம் யாழ்ப்பாணத்துக்குச் சேர்ந்த மானிப்பாய் அமேரிக்காமிசியோன் அச்சுக்கூடத்தில் அச்சுப்பதிக்கப்-பட்டது.
இதன் மூலம் 'யாழ்ப்பாண' 'மானிப்பாய்' எனும் பெயர்கள் கிட்டியதற்கான காரணம் புரிகிறது. 
அகராதியென்பது அதன் உருவிலும் உள்ளடக்கத்திலும் மேலைத்தேய பண்பாட்டுவழி வந்ததாகும். தமிழ் மரபில் நிகண்டு முறைமையே உண்டு. அம்முறைமையினுள் அகராதியிற் கிடைப்பன போன்ற சொல்லுக்கான கருத்து தரப்படாது. மாறாக சொற்கள் தொகுதி-களாக தரப்படும். சிவனுக்குரிய பெயர்கள் கடலுக்குரிய பெயர்கள் என தொகுதி முறையிலேயே வரும். உண்மையில் ஆங்கில மரபுப்படி இவை (ளலழெலெஅள) ஒரு பொருளுக்கான பல பெயர்கள் எனவே கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களிடையே தமது மதத்தைப் பரப்ப முனைந்த முதற்பெரும் பாதிரியார் முதலே அகராதி முறைமை வழியாக தமிழைத் தமது விளக்கப்பதிவிட் கொண்டு வருவதற்கு மேலைநாட்டு மரபுவழி வந்த அகராதி முறைமையைக் கையாண்டுள்ளனர். (வீரமாமுனிவரும் சதுகராதி) புரட்டஸ்தாந்தக் கிறித்தவர்கள் இம்முயற்சியில் அறிவியல் பூர்வமான அணுகுமுறைமையையே மேற்கொண்டனர். இவர்களுள்ளும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கப் புறப்பட்ட மிசனரிமார்-கள் தொடக்கத்திலிருந்தே அகராதி முயற்சியில் ஈடுபட்டனர். ஜோஸப் நைற் (முniபாவ) பற்றி பேராயர் ஜெபனேசன் தந்துள்ள செய்திகளை நோக்குக. ஜோசப் நைற் (முniபாவ) மெதடிஸ்ட் மிசன் பாதிரியாராகிய பர்சிவலுடன் இணைந்து தொழிற்பட்டார் என்பது மிக முக்கியமான செய்தியாகும். இந்த பர்சிவல்தான் ஆறுமுகநாவலரின் ஆரம்பகால உந்து ஆற்றலாக விளங்கியவர். 
இந்த அகராதி முயற்சிகளை இன்னொரு முறையிலும் எடுத்துக் கூறலாம். அதாவது, தமிழின் எழுத்தறிவுப் பாரம்பரியத்தைப் பாதிரிமார் தமதாக்கிக் கொள்ள எடுத்த முயற்சிகளுள் ஒன்று இது ஆகும்.  தொடக்கத்திலே கைந்நூலாகத் (ஆயரெயட) தொடங்கிப் பின்னர் 'வழக்கும் செய்யுளுமாகிய' இரண்டையும் ஒன்றிணைத்துப் பார்க்கின்ற வின்சுலோ அகராதி வரை தொடர்கின்றது. 
அகராதி முறைமையின் வருகை மூலம் தமிழின் நவீன மயப்பாடு நிச்சயமாக்கப்படுகின்றது. முதலிற் பிற பண்பாட்டாளர்களுக்குப் பயன்பட்ட அகராதிகள் பின்னர் தமிழரின் தமிழ்ப் பயில்வுக்கே இன்றியமையாதனவாகின்றன.
இப்பொழுது மீளச்சுப் பெறும் இக்கையகராதிக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தறிவுப் பாரம்பரியத்தின் நிலைமையை இது நமக்குக் காட்டுகின்றது. அந்த அளவில் தமிழ்மொழி, இலக்கியம் பயில்வோருக்கு இது ஒரு முக்கியமான நூலாகும். திரு.கோ.இளவழகனார் தமிழ்க் கல்வியுலகின் வாழ்த்துக்குரியவராகின்-றார். இம்மீளச்சுப் பதிவினை அது தோன்றிய ஈழத்தில் மீட்டும் பரப்புவதற்கு காரணராகவுள்ள திரு.பத்மசீலனுக்கு நமது நன்றி உரித்து.

கார்த்திக்கேசு சிவத்தம்பி ஆ.யு.Phனுஇனு.டுவைவ
தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
01-12-2005