Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-12-01-028
ISBN : 978-955-1857-27-1
EPABNo : EPAB/02/18595
Author Name (எழுதியவர் பெயர்) : சோ.சந்திரசேகரன் மா.கருணாநிதி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 136
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 440.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • அறிவுசார் பொருளாதாரம் பற்றிய வரையறை
  • அறிவுசார் பொருளாதார முறையின் சில பரிமாணங்கள்
  • பல்வேறு நாடுகளின் அறிவுசார் பொருளாதாரம்
  1. தென்கொரியா
  2. சிங்கப்பூர்
  3. டுபாய்
  4. இலங்கை
  5. தாய்லாந்து
  6. பின்லாந்து
  • ஐக்கிய அமெரிக்கா
  • முடிவுரை
Full Description (முழுவிபரம்):

தமிழில் 'அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்' என்னும் இந்தநூல் முற்றிலும் புதிது. 'அறிவுசார் பொருளாதாரம்', 'அறிவுசார் சமூகம்' போன்ற எண்ணக்கருக்கள் புதிய அறிகை மரபை தோற்றுவிக்கிறது. 
அதாவது, நிகழ்ந்து வந்த யுகமாறுதல்களில் சமூகத்தின் இயக்க விசையாக பல்வேறு சக்திகள் அவ்வக் காலங்களில் கோலோச்சி வந்துள்ளன. இதனை வரலாறு தெளிவாகக் காட்டுகிறது. 19ஆம் நூற்றாண்டுச் சமூகத்தில் அல்லது பொருளாதாரத்தில் 'செல்வமே' ஆட்சி செலுத்தியது. 20ஆம் நூற்றாண்டில் இதன் இடத்தினை 'கணினி' பிடித்துக்கொண்டது. 21ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தினை 'அறிவு' பிடித்துக்கொண்டது. ஆக அறிவினைப் பெற்றுக்கொள்ளுதல், அறிவினைப் பாதுகாத்தல், அறிவினைப் பிரயோகித்தல் என்பன 21ஆம் நூற்றாண்டின் தாரக மந்திரமாகும். 
அறிவு என்பது ஒன்றும் நமக்;கு புதிதானது அல்ல. ஆனால் சமூகம் முழுமையும் அறிவுடைய சமூகமாகவும், சமூகத்தின் மூலதனம் அறிவாகவும் கொள்ளப்படும் ஒரு யுக மாற்றத்தின் வாசற்படியில் 21ஆம் நூற்றாண்டுச் சமூகம் வந்துள்ளது. 
அறிவு என்பது இங்கு வெறுமனே கடந்த நூற்றாண்டில் கருதப்-பட்ட பொருளில் அது கருதப்படவில்லை. உற்பத்திச் சாதனங்களும் செல்வமும் கடந்த காலத்தில் முதன்மையான வளமாகக் கருதப்-பட்டது. 21ஆம் நூற்றாண்டில் அதனிடத்தினை அறிவு கவர்ந்துள்ளது. அறிவு ஒரு சொத்தாக வளமாக கருதப்படும் நூற்றாண்டாக 21ஆம் நூற்றாண்டு கருதப்படுகின்றது. இதனால் 'அறிவு' என்பது
அபிவிருத்திக்காக அறிவை உள்வாங்குதும் பயன்படுத்துவதும் ஒரு புதிய சிந்தனையல்ல. வரலாற்றுக்காலம் முழுவதும் அறிவானது அபிவிருத்தியின் மையமாக விளங்கி வந்துள்ளது. ஒவ்வொரு நாடும் அடைந்துள்ள அறிவு மட்டங் களை வைத்தே வறுமைக்கும் செல்வத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை விளங்கிக் கொள்ள முடியும். அறிவுசார் பொருளாதாரம் என்பது உயர்தொழில்நுட்ப (ர்iபா வுநஉh) கைத்தொழில்களையும் புதிய புத்தாக்க கலா சாரத்தையும் மட்டும் கருதாது அண்மைக்கால ஆய்வுகளின்படி வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது காணப்படும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியே பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக்கொள்ள முடியும். யப்பான், தென்கொரியா, தைவான், மலேசியா முதலிய நாடுகள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
தகுந்த தொழில் வர்த்தகச் சூழல் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அடிக்கட்டமைப்பு புத்தாக்க முறைமை, கல்வி வளர்ச்சியின் அடிப்படையிலான சிறந்த மனிதவளம் என்பன அறிவுசார் பொருளாதாரத்தின் நான்கு தூண்கள் என்ற விடயமும் அறிவுசார் பொருளாதாரம் என்ற முறையில் உலக நாடுகள் எத்தகைய கட்டங்களை அடைந்துள்ளன் அதனை எவ்வாறு அளவிட்டுக் கொள்ளலாம் என்பது பற்றிய விளக்கங்கள் நூலின் முற்பகுதியில் சொல்லப்பட்டுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட பல உலகநாடுகள் அறிவுசார் பொருளாதாரம் நோக்கிச் செல்வதற்காக அவர்களது முயற்சிகள் பற்றிய ஆய்விலிருந்து பின்வரும் சில முக்கிய விடயங்களைத் தொகுத்துக் கூறுவது பயனுடையதாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமன்றி வளர்முக நாடுகளும் தமது அபிவிருத்திச் செயற்பாடுகளில் மேற்கூறிய நான்கு தூண்களுக்குப் பெரு முக்கியத்துவம் வழங்குதல் வேண்டும். அதாவது அறிவுசார் பொருளாதாரம் என்ற எண்ணக்கரு இந்த அபிவிருத்தியின் மையப்பொருளாக அமைதல் வேண்டும். இந்நான்கு தூண்களுக்கும் முக்கியத்துவமளித்துச் செயற்படும் நாடுகளே இன்றைய போட்டித்தன்மை வாய்ந்த உலகப் பொருளாதார முறைமையில் பிறநாடுகளைவிடச் சிறப்பாகச் செயலாற்றி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 50 ஆண்டு காலப்பகுதியில் கொரியா, கானா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை நோக்குமிடத்து இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ச்சி வேறுபாடுகளுக்கு அவ்வந் நாட்டின் அறிவு மட்டங்களிலுள்ள வேறுபாடுகளே காரணமாக இருந்தனவென அறியக்கிடக்கின்றது. இவ்வேறுபாடுகளில் 65 சதவீதமானது அறிவு வளர்ச்சியோடு தொடர்பானதென உலக வங்கியின் பொருளியல் அளவீட்டு ஆய்வொன்று (1991) தெரிவிக்கின்றது. வளர்முக நாடுகள் வெற்றிகரமான அறிவுசார் பொருளாதரமாக மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன் அத்துடன் இவ்விடயத்தில் துரிதப் பாய்ச்சலும் சாத்தியமானதொன்றே. சரியான கொள்கைகளைக் கடைப்பிடிக்குமிடத்து வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். புத்தாக்கத் தொழில் நுட்பங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிவகைகள் சாதாரணமாகக் கிடைக்கத்தக்கதே. அத்துடன் இத்தொழில்நுட்பங்களை புத்தாக்க உபாயங்களுடன் கூடிய வகையில் பயன்படுத்தும்போது சிறந்த பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அறிவுசார் பொருளாதாரம் நோக்கிய அபிலாசைகளுடன் கூடிய நாடுகளும் கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்படுத்தும் முதலீடுகள், தனியார்துறை, பொதுத்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை வினைத்திறனுடன் பயன்படுத்துதல் உயர்கல்விசார் வலைத்தொகுதிகளை சர்வதேச மயப்படுத்தல், வாழ்க்கை நீடித்த கல்வியில் தீவிர ஈடுபாடு என்பன அறிவுசார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவும் முக்கிய காரணிகளாகும். தொழில் முயற்சியாளருக்கு வாய்ப்பான சட்டம் ஒழுங்கு நிலைமைகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாக அமையும் என்பது அடிப்படையானதொரு விடயமாகும். மொத்தத்தில் நாடுகளில் கொள்கை வகுப்பாளர்கள் 'அறிவுசார் பொருளாதாரம்' என்ற முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். 
இரண்டாவதாக, ஒவ்வொரு நாடும் தனது தனித்துவமான இயல்புகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ற முறையில் நடைமுறைச் சாத்தியமான அறிவுசார் பொருளாதாரக் கொள்கைகளைத் தன்னார்வத்துடன் செயற்படுத்த வேண்டும். சில சந்தப்பங்களில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுமிடத்து அதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அறிவுசார் பொருளாதாரம் தொடர்பான உபாயங்களைக் கையாளுதல் வேண்டும். அவ்வாறான நெருக்கடிகள் இல்லாதவிடத்து ஒவ்வொரு தூண்களையும் பொறுத்து விரிவான தொலைநோக்குடன் இந்நாடுகள் செயற்படுதல் வேண்டும்.  
அறிவுசார் பொருளாதாரம் தொடர்பான குறிகாட்டிகள் நான்கு தூண்களைப் பொறுத்தவரையில் ஒரு நாட்டின் பலம், பலவீனம் பற்றி விபரமாக எடுத்துச்சொல்லும். இக்குறிகாட்டிகளின் அடிப்படையில் உலக நாடுகளின் அரசாங்கங்கள் சகல நான்கு தூண்கள் தொடர்பான சிறந்த நடைமுறைகளைத் தெரிவுசெய்து கொள்ளலாம். நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவற்றின் தற்போதைய அபிவிருத்தி நிலையைக் கருத்திற் கொண்டதாக அமைதல் வேண்டும். உதாரணமாக குறைந்த வருமானங்களைக் கொண்ட நாடுகள் அடிப்படைக் கல்வி வளர்ச்சிக்கும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான கட்டமைப்பை விருத்தி செய்தல் முதலிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறே நடுத்தர வருமானங்களைக் கொண்ட நாடுகள் புத்தாக்கத் துறையில் ஈடுபாடு காட்ட வேண்டியிருக்கும். 
மூன்றாவதாக, உலகநாடுகள் சொல்லப்பட்ட நான்கு தூண்கள் தொடர்பாக தீவிரமாகச் செயற்படுதல் வேண்டும். சாதகமான தொழில் வளர்ச்சிச் சூழல், அறிவுத் தொகுதியைத் திறம்படப் பயன்படுத்துதல் என்பவற்றுக்கிடையிலான பயனுள்ள இடைத்தாக்கத்தின் விளைவாக அறிவுசார் பொருளாதாரம் வளர்ச்சிபெற முடியும். இச்சாதகமான தொழிற் சூழலை ஏற்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகள் தேவை. மிதமிஞ்சிக் காணப்படும் ஒழுங்குக் கட்டுப்பாடுகளும் அதிகார வர்க்கத்தினர் ஏற்படுத்தியிருக்கும் தடைகளும் நீக்கப்படுதல் வேண்டும். வர்த்தகத் துறைக்கும் வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் துறைக்கும் சாதகமான திறந்த பொருளாதார முறை நிறுவப்படுதல் வேண்டும். சிறு முயற்சியாளருக்கான கடன்வசதிகள் ஏற்படுத்தப்படுதல் வேண்டும். உலக நாடுகளின் அனுபவங்களை நோக்குமிடத்து தொழிற்சூழலை மேம்படுத்துவது சில ஆண்டுகளில் செய்து முடிக்கக் கூடியதொன்று.  à®’ரு குறிப்பிட்ட சமூகத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பரப்புவது புத்தாக்கம் எனப்படும். புத்தாக்கமானது தனிப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சமூகக் குழுக்களுக்கும் உதவி வழங்குவதிலிருந்து  à®¤à¯Šà®Ÿà®™à¯à®•à¯à®®à¯. அத்துடன் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமானது அறிவுசார் பொருளாதார முறைகளின் அடிக்கட்டமைப்பாக அமையும். தொலைபேசிப் பயன்பாடு மிகவும் அசாதாரணமான முறையில் பெருகி வருவது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வளர்முக நாடுகளிலும் விரிவடைந்து வருதைச் சுட்டிக்காட்டுகிறது. மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் அதேவேளையில் அரசாங்கம் வர்க்கம் மற்றும் கல்வித்துறைகளிலும் இலத்திரன் பிரயோகம் அதிகரிக்கப்படுதல் வேண்டும். வறிய நாடுகளில்கூட மக்களை தகவல் தொழில்நுட்பப் புரட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கான தேசிய செயற்திட்டங்கள் வெற்றி கண்டுள்ளன. 
அறிவுசார் பொருளாதாரமானது கல்வித்துறையில் அடிப்படையான மாற்றங்களை வேண்டி நிற்கின்றது. வளர்முக நாடுகளில் எழுத்தறிவின்மையைத் துரிதமாகக் குறைத்தல் கல்வித் தராதரங்களை மேம்படுத்துதல், தொழில்வாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை வழங்குதல், சுயகற்றல் ஆற்றல்களை வழங்குதல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இடைநிலை மற்றும் தொழில்சார் கல்வியில் எழுத்தறிவுடன் அடிப்படைக் கணிதம், காரணங்காணும் திறன் போன்ற தேர்ச்சிகள் பெரிதும் வலியுறுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகங்கள் தமது கற்கை நெறிகளை உலகத் தராதரங்களுக்கு ஏற்றவகையில் திருத்தியமைக்க வேண்டியுள்ளது. தொழில் முயற்சியாளர் மற்றும் சமூக தேவைகளுக்கேற்ப பல்கலைக்கழகங்கள் கல்வியை வழங்க வேண்டியுள்ளது; தனியார்துறை, பொதுத்துறைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது சகல வளர்ச்சியடைந்த நாடுகளின் உயர்கல்வி முறைமைகளும் வாழ்க்கை நீடித்த கல்வியேற்பாடுகளைச் செய்து வருவதை வளர்முக நாடுகள் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.
இறுதியாக, அரசும் ஏனைய நிறுவனங்களும் அறிவுசார் பொருளாதார முறையின் தேவைகளையும் வாய்ப்புகளையும் கருத்திற் கொண்டு இயங்க வேண்டிய அவசியம் உண்டு. அரசாங்கமானது இவ்விடயத்தில் தீவிரமாகச் செயற்பட்டு அபிவிருத்தி உபாயங்களுக்கு ஊக்கமளித்து வழிகாட்டுதல் வேண்டும். மரபுவழியாகத் தனித்தியங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி கொள்கையை ஒன்றிணைக்கும் பணியில் அரசாங்கம் முனைப்புடன் செயற்படல் வேண்டும். தனியார் துறைக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குவது அரசாங்கத்தின் பணியாகும். 
அறிவுசார் பொருளாதாரமானது மக்கள் மற்றும் குழுக்களுக்கு இடையே பயனுள்ள இடைத் தொடர்புகளை ஏற்படுத்த செயற்திறன்மிக்க நிறுவனங்களில் தங்கியிருக்க வேண்டி நேரிடுகிறது. அறிவுசார் பொருளாதாரங்களை ஏற்படுத்த உள்ளூர் சார்ந்த முயற்சிகள் தேவை. இத்தகைய முயற்சிகளில் இருந்தே மாற்றங்கள் உருவாகின்றன. ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவை அறிவுசார் பொருளாதாரச் சூழமைவில் உலகளாவிய தொடர்புகளையும் உள்ளூர்த் தொடர்புகளையுங் கொண்டு பணியாற்றுபவை. உலகளாவிய தொடர்புகளினூடாக சர்வதேச அறிவும் நிபுணத்துவமும் நாட்டிற்குள் நுழைய இவ்வமைப்புகள் காரணமாகின்றன் உள்ளூர்த் தொடர்புகள் காரணமாக உள்வாங்கப்பட்ட அறிவு நாடு முழுவதும் பரவுகின்றது; பயன்படுத்தப்படுகின்றது. 
சுருங்கக் கூறின், மனித சமூகங்கள் கொண்டிருக்கும் அறிவானது அறிவுசார் பொருளாதாரங்களின் விருத்திக்கான திறவுகோலாகும்;. மக்களும் சமுதாயங்களும் புதிய பொருளாதார முறையைக் கட்டியெழுப்பத் தமது அறிவு விருத்தியில் சுயமாக இயங்குதல் வேண்டும். இவை யாவும் புதிய அறிவுசார் பொருளாதார முறை வேண்டி நிற்கும் புதிய தேவைகளாகும். 
இலங்கையைப் பொறுத்தவரையில் அறிவுசார் பொருளாதார முறைநோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த இது ஒரு சரியான சந்தர்ப்பமாகும். அதற்கு இந்நான்கு தூண்களின் முதலீட்டை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உண்டு. தேசிய புத்தாக்க முறைமையொன்றை ஏற்படுத்துவதற்குக் கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பினூடாக ஆய்வுச் சமூகங்கள் விருத்தி செய்யப்படுதல் வேண்டும். வெளிநாட்டு மூலதனத்தை வரவுகாட்டப்படுவதனூடாக மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மேம்படுவதோடு தொழில்நுட்பத் திறன்களும் இடமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எவ்வாறாயினும் வெளிநாட்டு மூலதன வருகைக்கான தொழிற் சூழலை முன்னேற்ற வேண்டிய தேவை இலங்கைக்கு உண்டு. புத்தாக்கம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏனைய மூன்று தூண்களில் முன்னேற்றங்கான இத்தொழிற் சூழல் அடிப்படையானது. இத்துறையில் முன்னேற்றங்காணாவிடில் கல்வி, ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம் என்பவற்றின் மீதான பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான தொழிற்சூழல் தனியார் துறையானது புத்தாக்கத்துறையில் ஈடுபட அத்தியாவசியமானது. 
கல்வித்துறையைப் பொறுத்தவரையில் கேள்வியினால் உந்தப்பட்ட முறையில் கல்விமுறை திருத்தியமைக்கப்பட்டு வாழ்க்கை நீடித்த கல்வியில் அதிக அக்கறையைச் செலுத்தவதால் அறிவுசார்  à®ªà¯Šà®°à¯à®³à®¾à®¤à®¾à®° முறையின் நன்மைகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும். கல்வித் தராதரங்களை மேம்படுத்தல் மூன்றாம் நிலைக்கல்வி, மற்றும் தொழில்சார் கல்வி வாய்ப்புகளை விரிவுசெய்தல் என்பன பயனுள்ள முயற்சிகளாகும். பொதுத்துறைக்கல்வி நிலையங்களுக்குக் கூடிய சுயாதீனமும் வகை கூறும் தன்மையும் தேவை.
உயர்கல்வியை மேலும் விரிவு செய்யவும் அதன் தராதரங்களையும் பொருத்தப்பாட்டையும் அதிகரிக்கவும் தனியார் துறையின் ஈடுபாட்டை விரிவு செய்வது அவசியமானது என்பது உலகவங்கி ஆய்வாளர்களின் கருத்தாகும். இதனால் இளைஞர்கள் அதிக செலவில் வெளிநாட்டுக் கல்வியை நாடுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும். 
இலங்கை தனது அறிவுசார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிக்கொள்ள அரசாங்கத்துறை, பல்கலைக் கழகத்துறை, தனியார்துறை சார்ந்த தலைவர்களைக் கொண்ட ஒரு அறிவுசார் பொருளாதாரச் செயலணியை உருவாக்குதல் வேண்டும். 
இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் கொரியா, சிங்கப்பூர், சீனா முதலிய நாடுகளின் அனுபவங்களிலிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும். அறிவை வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் கொரியா தலைமைத்துவத்தை வகிக்கின்றது. சிங்கப்பூர் தனது நான்கு தூண்களை விருத்தி செய்து கொள்வதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரத்தின் புதிய நோக்கு புத்தாக்கங்களை முன்னெடுத்துச் செல்வதாகும். வளர்ச்சிக்கான புதிய உபாயங்களைக் கண்டறிவதில் சீனா இன்னும் ஆரம்பக் கட்டங்களிலேயே இருந்து வருகிறது. அறிவுத்துறை மீதான முதலீட்டுப் பணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இவ்வாறு அறிவுசார் பொருளாதாரம் நோக்கிய பாதையில் இம்மூன்று நாடுகளும் வௌ;வேறு கட்டங்களில் உள்ளன. 
எவ்வாறாயினும் இம்மூன்று நாடுகளை ஆராயும்பொழுது சில பொது அம்சங்களையும் இனங்காண முடியும். எடுத்துக்காட்டாக இம்மூன்று நாடுகளும் கல்வித் துறைமீது அதிகளவில் முதலீட்டைச் செய்து வருகின்றன. கொரியா நாட்டு மக்கள் பண்பாட்டு கல்வியின் மீது ஒரு வலுவான கலாசார ரீதியான ஈடுபாடு கொண்டவர்கள்; 1980களில் கல்வித்துறை மீதான கட்டுப்பாடு அரசாங்கம் தளர்த்தியமை காரணமாக இன்று 50 சதவீதமான கொரியா இளைஞர்கள் ஏதேனுமொரு உயர்கல்வி நிலையத்தில் பயில முடிகின்றது. சீனாவில் 50 சதவீதமான பல்கலைக்கழக மாணவர்கள் விஞ்ஞானத்தை அல்லது தொழில்நுட்பத்தைப் பயில்கின்றனர். சிங்கப்பூர் தனது மனித வளத்தைப் பெருக்கிக்கொள்ள வெளிநாட்டு அறிவுசார் ஊழியர்களின் வருகைக்கு பெரும் ஊக்கம் வழங்குகின்றது. 
இந்த மூன்று நாடுகளும் வெளிநாட்டு ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் கொள்கையையும் தற்போது கிடைக்கக்கூடிய தொழில்நுட்பங்களைப்  à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯ˆà®¯à¯à®®à¯ தமது ஆரம்ப முயற்சிகளாகக் கொண்டன. ஆரம்பத்திலேயே புத்தாக்கக் கைத்தொழிலில் ஈடுபட அவை விரும்பவில்லை. படிப்படியாக தொழிற் சூழலை மேம்படுத்தி அண்மைக் காலங்களில் சர்வதேசக் குறிகாட்டிகளைப் பொறுத்தவரையில் தமது நிலைகளை முன்னேற்றிக் கொண்டன. சிங்கப்பூரில் இடம்பெற்ற வலுவான சட்டத்தின் ஆட்சி, அதன் காரணமாக உருவாக்கப்பட்ட அதிசிறந்த தொழிற்சூழல் காரணமாக சர்வதேச மூலதனத்தையும் மனித வளங்களையும் அந்நாடு கவரக் கூடியதாக இருந்தது. 
மூன்று நாடுகளிலும் தொலைத் தொடர்புத் துறையைத் தாராளமயப்படுத்தியதனூடாக தகவல் கட்டமைப்பை விருத்திசெய்து கொண்டன. கொரியா 1970களிலேயே தாராளமயக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. சந்தைப் போட்டியின் அடிப்படையான திட்டவட்டமான ஒழுங்குவிதிகள் காரணமாக கொரியாவில்  à®‰à®²à®•à®¿à®²à¯‡à®¯à¯‡ கூடியளவில் அகல அலைவரிசை (டீசழயன டீயனெ) ஊடுருவல் ஏற்பட்டது. பொதுத்துறை தனியார்துறை இரண்டும் ஒன்றிணைந்து ஏற்படுத்திய நிதியமானது இத்துறையின் வளர்ச்சிக்கு மேலும் உதவியது. 
இம்மூன்று நாடுகளின் மாதிரிகள் பெருமளவுக்குத் தனியார் துறையில் தங்கியிருந்த போதிலும் இயைபாக்கப்பணியில் அரசாங்கம் அதிக ஊக்கத்துடன் செயற்பட்டது. நான்கு தூண்கள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தனியார் துறையினர் கையாண்டுவிட முடியாது. மூன்று நாடுகளின் அரசாங்கங்களும் நன்கு தெரிவுசெய்யப்பட்ட துறைகளில் மட்டுமே தலையிட்டன. போட்டி சாத்தியமான துறைகளான கல்வி, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு ஆகிய துறைகளில் தனியார் துறைக்கும் அதிக இடம் அளிக்கப்பட்டது. அத்துடன் சகல பயனாளிகளும் பங்கேற்கும் சூழல் மூன்று நாடுகளிலும் உருவாக்கப்பட்டது. 
இந்நாடுகள் வழங்கும் பிரதானமான செய்தி சகல கல்வித்துறைகளிலும் தனியார் துறையினர் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், குறிப்பாக மூன்றாம் நிலைக் கல்வியில் இந்த ஏற்பாட்டுக்கு இடமளித்தல், ஆராய்ச்சித் துறையிலும் பொதுத்துறைக் கல்வி நிலையங்களிலும் அரசாங்க முதலீட்டை அதிகரித்தல், பல்கலைக்கழகங்களுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான தொடர்புகளை ஊக்குவித்தல் என்பனவாகும். 
எஎஎ சமூகங்கள் அறிவுச் சமூகங்களாக மாற வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
இன்று அறிவு பல்கிப் பெருகி பிரவாகமெடுத்து ஓடுகின்றது. இந்த நூற்றாண்டில்