Karunanithi, M Prof

முனைவர் மா.கருணாநிதி கொழும்புப் பல்கலைகழகத்தில் கல்வியியற் துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து கல்வியியல் கற்கையின் விரிவும் ஆழமும் மிக்க சிந்தனை செயல் குவிமையத்தின் விசைப்படுத்துனராகவும் உள்ளார். 

வளமானதும் வினைத்திறன் மிக்கதுமான ஆசிரிய தொழில்சார் கல்வியின் தேவையையும் முக்கியத்துவத்தையும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதிலும், அவை சார்ந்த விழிப்பணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் இயங்கிவருகிறார்.
 
தொடர்ந்து மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு ஆசிரியத் தொழில்சார் கல்வி பல்வேறு புத்தாக்கங்களுக்கும் புதுவிசைகளுக்கும் உட்படுத்தப்பட்டு ஆசிரியர்களுக்குக் கையளிக்கப்படவேண்டுமென்பதில் தெளிவாகவும், உறுதியாவும் இருந்து செயற்படுகின்றார். 
மா.கருணாநிதி புத்தகங்கள்
2013 - கல்வியியல் - கற்றல் கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறைகள்
2008 - கல்வியியல் - அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்
2008 - கல்வியியல் - கற்றல் கற்பித்தல் : மேம்பாட்டுக்கான வழிமுறைகள்
- கல்வியியல் Educational - சமகாலக் கல்வித் திரட்டு