Book Type (புத்தக வகை) : புவியியல்
Title (தலைப்பு) : புவியியல் : சூழலியல் முகாமைத்துவம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-12-03-030
ISBN : 978-955-1857-29-5
EPABNo : EPAB/02/18582
Author Name (எழுதியவர் பெயர்) : எஸ்.அன்ரனி நோர்பேட்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 164
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 400.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

 • சூழலியலுக்கு ஓர் அறிமுகம்
 • வளங்களின் நிலைபேண் அபிவிருத்தி
 • நகராக்க மற்றும் கைத்தொழில்; சூழல் பிரச்சினைகள்
 • விவசாய வளங்களும் பயன்பாட்டுப் பிரச்சினைகளும்
 • மண் வளமும் பேணுகையும்
 • காட்டு வளங்களின் பயன்பாடும் பேணுகையும்
 • பாலைவனமாகுதலும் நிலச்சீரழிவுகளும்
 • வளிமண்டலத்தின் பச்சைவீட்டு வாயுக்களும் தாக்கமும்
 • வளிமண்டலத்தில் ஓசோன் சிதைவும் தாக்கங்களும்
 • பூகோள வெப்பமடைதலும் கடல்மட்ட மாற்றமும்
 • முருகைக் கற்பார் அகழ்வும் சூழல் பிரச்சினைகளும்
 • இலங்கையில் நிலச்சரிவுகள்
 • வனவிலங்குகளின் பாதுகாப்பும் முகாமைத்துவமும்
 • இலங்கையின் கரையோர வலயத்தின் முகாமைத்துவம்
 • இலங்கையின் ஈரநிலங்களின் முகாமைத்துவம்
 • உயிரினப் பல்வகைமையும் பேணிப் பாதுகாத்தலும்
 • சூழல் முகாமைத்துவம் நோக்கிய சர்வதேச மகாநாடுகள் 
Full Description (முழுவிபரம்):

இலங்கையின் பாடசாலை முறைமையில் வகுப்பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப்படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினூடாகக் கற்பதற்கான தகுதி வாய்ந்த நூல்களின் பற்றாக்குறை க.பொ.த. உயர்தர மாணவர்களைப் பொறுத்த வரையில் ஒரு குறைபாடாகக் கூறப்பட்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இலவச பாடநூல் விநியோகமானது உயர்தர வகுப்புக்களைச் சென்றடைவ-தில்லை. இன்றைய கல்வி முறைமையின் புதிய நோக்கங்களுக்கமைய மாணவர்கள் சுயகற்போராக விருத்திபெறல் வேண்டும் என்னும் குறிக்கோள் ஓர் உயர்தரமான கல்வியின் நோக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 
தமிழ்மொழி வழி மாணவர்கள் இவ்வாறான நோக்கத்திற்கமைய விருத்தி பெறுவதற்கு அம்மொழி வழியிலான பாடநூல்களும், இணையச் சஞ்சிகைகளும், இணையத்தளங்களும் தேவை. குறிப்பாக, புவியியல் பாடத்தினை அதிலும் குறிப்பாக, புவியியல் பாட ஏற்பாடு சார்ந்த பல விஞ்ஞான ரீதியான புதிய துறைகளில் துணைப்பாட நூல்களின் பற்றாக் குறையானது புவியியல் மாணவர்களால் இன்று நன்கு உணரப்பட்-டுள்ளது. அத்துடன் சிலகாலத்துக்கு முன்னர் பல்கலைக்கழகங்களில் புவியியலைக் கற்ற பட்டதாரி ஆசிரியர்களும் புவியியல் துறையில் விருத்தி பெற்றுவரும் புதிய அறிவுத் தொகுதியை தமிழ் வழியினூடாகப் பெற்றுக்-கொள்ள வேண்டிய ஓர் அவசியமும் உள்ளது. இப்பின்புலத்திலேயே க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் புவியியல்: சூழலியல் முகாமைத்துவம் என்னும் தலைப்பில் ஒரு புதிய நூலை எழுத முற்பட்டோம். 
கலைத்துறைப் பாடங்களுள் ஒன்றான புவியியலில் விஞ்ஞான ரீதியான அம்சங்கள் அதிகம். முழுமையான விஞ்ஞானமாக இப்பாடம் இன்று விருத்தி பெற்றுள்ளதாகவும் கூறமுடியும். அடிப்படை விஞ்ஞான அறிவின்றி இப்பாடத்தினைக் கற்றுக்கொள்வதிலும் சில சிரமங்கள் உள்ளன. வரன்முறையாக வெளிவந்த பெரும்பாலான புவியியல் நூல்கள், புவியியலை ஒரு சமூக அறிவியல் பாங்கிலேயே நோக்கியிருந்தன. இந்நிலை யில் புவியியலின் விஞ்ஞானம் சார்ந்த உள்ளடக்கத்தை மாணவர்கள் சுயமாகக் கற்று விளங்கிக் கொள்வதற்கான எளிய தமிழ் நடையிலான நூல்களின் தேவையை எமது இந்நூல் பெரிதும் நிறைவு செய்யும் எனக் கருதுகின்றோம்.
இந்நூலில் புவியியல் சார்ந்த வௌ;வேறு முக்கியமான பதினேழு தலைப்புக்களில் மாணவர்களுக்கு விளங்கும் முறையில் சில முறையி யலைப் பின்பற்றி அவர்களுடைய கல்வித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில்  இந்நூலை நாம் வடிவமைத்துள்ளோம். இந்நூலுக்கு புவியியல் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி இத்துறையில் படிக்கும் ஆர்வமிக்க வாசகர்கள் அனைவரும் தமது ஆதரவை நல்குவார்கள் என்பது எமது நம்பிக்கை.
இந்நூலை அழகிய முறையில் அச்சேற்றி உதவிய சேமமடு பதிப்பக உரிமையாளர் சதபூ.பத்மசீலன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட்

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : புவியியல் : சூழலியல் முகாமைத்துவம்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2017
Edition (பதிப்பு): 2ம் பதிப்பு 2017