Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : சமகாலக் கல்வி முறைகள் ஒரு விரிநிலை நோக்கு
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-08-01-045
ISBN : 978-955-1857-44-8
EPABNo : EPAB/2/19270
Author Name (எழுதியவர் பெயர்) : சோ.சந்திரசேகரன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 128
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 380.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • உலகளாவிய கல்வித்துறை ஊழல்கள்
  • பிள்ளை நேயப் பாடசாலைகளை நோக்கி...
  • இலங்கையின் உயர்கல்வியின் எதிர்காலம்:
  • ஐக்கிய அமெரிக்காவின் காந்தப் பாடசாலைகளும் பட்டயப் பாடசாலைகளும்
  • மெய்நிகர் பல்கலைக்கழகம்
  • ஜப்பானியர்களைக் கவர்ந்திழுக்கும் இந்தியப் பாடசாலைகள்
  • வளர்முக நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு நிபுணர்களின் எச்சரிக்கை
  • ஜப்பான் ஜுக்கு (துரமர) கல்வி நிலையங்கள்
  • அமெரிக்க கல்வியும் ஜப்பானியக் கல்வியும்
  • புதிய கல்விச் செல்நெறிகள் சர்வதேச மதிப்பீட்டுப் பரீட்சைகள்
  • புதிய அறிவுப் பிரவாகமும் வாசிப்புப் பண்பாடும்
  • தனியார் உயர்கல்வி - உலகளாவிய செல்நெறிகள்
  • வளர் ச்சியடைந்த நாடுகளில் ‘வீட்டுப் பாடசாலைகள்
  • முன்பள்ளிக் கல்வியின் உலகளாவிய முக்கியத்துவம்
  • அறிவுசார் பொருளாதாரமும், வாழ்க்கை நீடித்த கல்வியும்
  • பொதுப் பரீட்சைகளும் தேசியப் பரீட்சைகளும்
Full Description (முழுவிபரம்):

ஆசிரியர் பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமன்றிக் கல்வித்துறை யில் பணியாற்றும் சகலரும் - உதவிப் பணிப்பாளர்கள், பணிப்பாளர் கள்  à®‰à®²à®•à®³à®¾à®µà®¿à®¯ ரீதியில் கல்விமுறையின் செல்நெறிகள், புத்தாக்கச் செயற்பாடுகள் என்பவற்றை அறிந்துகொள்வதால், உலகளாவிய கல்விமுறைகள் பற்றிய அவர்தம் அறிவும் புரிந்துணர்வும் பெரிதும் விரிவடைய வாய்ப்புண்டு. கற்கைநெறி  à®Žà®©à¯à®± முறையில், இத்துறை யானது ஒப்பியல் கல்வி, சர்வதேசக் கல்வி என அழைக்கப்படு கின்றது. ஆங்கிலத்தில் இத்துறை சார்ந்த சஞ்சிகைகளும் நூல்களும் ஆய்வுகளும் ஏராளமுண்டு. அவற்றால் தமிழ்மட்டும் தெரிந்தவர்க ளுக்கு எதுவித பயனுமில்லை. 
உலகளாவிய ரீதியில் கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் முன் னேற்றங்கள், புத்தாக்கங்கள், புதுமைகள் என்பவற்றைக் கற்பதனால் கல்வியியல் துறைசார்ந்த எமது அறிவு வளர்ச்சியடைவதோடு, கல்வித்துறையின் உலகளாவிய செல்நெறிகளைப் புரிந்துகொள்ள முடியும். இச்செல்நெறிகள் என்னும் பின்புலத்தில் எமது நாட்டின் கல்விமுறை பற்றியும் ஒப்பியல் ரீதியாக நுணுகி நோக்க முடியும். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்காவும் ஜப்பானுங் கூட வெளிநாடுகளின் கல்விமுறைகளின் சிறப்பு அம்சங்கள் பற்றிய கற்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகின்றன. 
19ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டுக்கல்வி முறை பல நாடு களாலும் விரிவாக ஆராயப்பட்டது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஜப்பானும் ஜெர்மனியின் (அப்போதைய பிரஷ்யா) பாடசாலைக் கல்விமுறை, பல்கலைக்கழகக் கல்வி முறையின் சிறந்த அம்சங்களை ஆராய்ந்து, பொருத்தமான அம்சங்களைத் தமது நாட்டின் கல்விமுறையில் இணைத்துக் கொண்டன. மிக அண்மைக் காலத்தில் அமெரிக்கக் கல்வியாளர்கள் 
சீன நாட்டுக் கல்வி முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டி யவை  à®ªà®±à¯à®±à®¿à®¯ ஆவணமொன்றைத் தயாரித்தனர். பல்வேறு உலக நாடுகளின் சிறந்த பயனளிக்கும் கல்விச் செயற்பாடுகள், ஏற்பாடுகள் என்னும் விடயத்துக்கு அழுத்தம் வழங்கி எழுதப்பட்ட பல கட்டு ரைகள் இந்நூலில் உண்டு. 
இன்றைய இலங்கையின் கல்வி முறைக்கான சீர்திருத்தங்கள் பற்றிச் சிந்திப்பவர்களும் அவற்றுக்கான கொள்கை வகுப்பாளர்களும் வெளிநாடுகளின் சிறந்த கல்வி ஏற்பாடுகள் பற்றி அறிவதில் ஊக்கங் காட்டுகின்றனர். பாடசாலை மட்டக் கணிப்பீடு, பாடசாலை மட்ட முகாமைத்துவம், 11 ஆண்டுகாலப் பொதுப் பாட ஏற்பாடு, ணு புள்ளி, 5நு முறையியல் போன்ற பல அம்சங்கள் வெளிநாடுகளின் கல்வி முறைகளை ஆராய்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களே!
ஆசிரியர்களும் அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் இவ்வுலக ளாவிய கல்விச் செல்நெறிகள் பற்றிய அறிவதனால் அடையக்கூடிய பயன்கள் ஏராளம்.
இந்நூலை சிறந்த முறையில் பதிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிப் பாளர் திரு.சதபூ.பத்மசீலன், நூற் தயாரிப்பில் பெரும் பங்களிப்புச் செய்த அகவிழி சஞ்சிகை ஆசிரியர் திரு.தெ.மதுசூதனன் அவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள். 

பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
கல்விப்பீடம் கொழும்பு பல்கலைக்கழகம்

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : சமகாலக் கல்வி முறைகள் ஒரு விரிநிலை நோக்கு
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2017
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 125
Edition (பதிப்பு): 2ம் பதிப்பு 2017