Book Type (புத்தக வகை) : உளவியல்
Title (தலைப்பு) : அடிப்படை உளவியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-10-04-054
ISBN : 978-955-1857-53-0
EPABNo : EPAB/02/18810
Author Name (எழுதியவர் பெயர்) : மணியம் சிவகுமார்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 276
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 760.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

1. உளவியல் ஓர் அறிமுகம்
  • 1.1 உளவியல் முறைகள்
  • 1.2 உளவியல் வகைகள்ஃ கருத்துப் பள்ளிகள்
2. உளவியல் பிரிவுகள்
  • 2.1 கல்வி உளவியல் ஓர் அறிமுகம்
  • 2.1.1 கல்வி உளவியலைக் கையாளும் முறைகள்
  • 2.1.2 கல்வி உளவியலின் வகைகள்
  • 2.1.2.1 கற்றல் உளவியல்;
  • 2.1.2.2 மறதி
  • 2.1.2.3 மறதியும் மனவெழுச்சி நசுங்குதலும்
  • 2.1.2.4 மறதிக்கான காரணங்கள்
  • 2.1.2.5 மறத்தலும் கற்றலும்
  • 2.1.2.6 மறதிக் கோட்பாடு
  • 2.1.2.7 ஞாபகத்தை ஊக்கப்படுத்துவதற்கான சிலவழிகள் 
  • 2.1.2.8 செயல் - எதிர - செயல் மாதிரி
  • 2.1.2.9 திட்டமிட்டுக் கற்றல் 
  • 2.1.2.10 அறிவு மடக்கமும் உளவியல் கூறுகளும்
  • 2.1.2.11 உளவியல் வழிக் கற்பித்தல்
  • 2.1.2.12 பொருத்தப்பாட்டு உளவியல்
  • 2.1.2.13 குழுநடத்தை உளவியல் 
  • 2.1.2.14 தனியாள் வேற்றுமை உளவியல்
  • 2.1.2.15 வளர்ச்சி உளவியல் 
  • 2.1.2.16 மனவெழுச்சி
  • 2.1.2.17 மனவெழுச்சி குன்றியமை
  • 2.2 சமூக உளவியல் 
  • 2.3 குழந்தை உளவியல் 
  • 2.4 இளையோர் உளவியல்
  • 2.5 முதுமை நிலை உளவியல் 
  • 2.6 இல் வாழ்வியல் உளவியல் 
  • 2.7 சிற்றின்ப உளவியல் 
  • 2.8 பிறழ்வு உளவியல் 
  • 2.9 குற்ற உளவியல்
  • 2.10 அழகியல் உளவியல்
  • 2.11 அறிதல்சார் உளவியல் 
  • 2.12 விலங்கு உளவியல் 
  • 2.13 உடலியல்சார் உளவியல்
  • 2.14 உணர்ச்சி நிலை உளவியல் 
  • 1.15 மொழி உளவியல் 
  • 1.16 இலக்கியப் படைப்பாக்க உளவியல்
  • 1.17 நாட்டார் உளவியல்
  • 1.18 இராணுவ உளவியல்
  • 1.19 கைத்தொழில் உளவியல் 
  • 1.20 சமய உளவியல் 
  • 2.20.1 பக்தி மனமும் இச்சை உணர்வும்
  • 2.21 ஆன்மீக உளவியல் 
  • 2.22 இருத்தல் நிலை உளவியல் 
  • 2.23 வளர்ச்சி உளவியல்
  • 2.24 அசைவியக்க உளவியல் 
  • 2.25 இசைவழி உளவியல்
  • 2.26 தனியாள் உளவியல்
  • 2.27 தற்காதல் உளவியல் 
  • 2.28 தற்காம உளவியல்
  • 2.29 தன்னைத் தானே வருத்தும் பிறழ்நிலை உளவியல்
  • 2.30 வசிய நிலை உளவியல்
  • 2.31 பார்வை நிலை உளவியல்
  • 2.32 ஒப்புமுறை உளவியல் 
  • 2.33 நடைமுறை உளவியல் 
  • 2.34 இந்திய தரிசனங்களில் உளவியல் 
  • 2.35 இந்திய தத்துவங்களில் உளவியல்
  • 2.36 சோதனை உளவியல் 
Full Description (முழுவிபரம்):

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்று பாரதி பாடினான். தமிழில் புதிய அறிவியல் நூல்களுக்கு பாரதி காலத்தில் இருந்த தேவையை மனங்கொண்டே அவன் அவ்வாறு கூறினான். பாரதி மறைந்து எண்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பாரதி காலத்தில் கற்பனை பண்ணியிருக்க முடியாத அளவுக்கு புதிய புதிய அறிவுத் துறைகளும் அறிவும் நமது காலத்தில் பன்மடங்காகப் பல்கிப் பெருகியுள்ளன. சமூக வளர்ச்சியும் தனிமனித முன்னேற்றமும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பெரிதும் தங்கியுள்ள இன்றைய காலத்தில் இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவருவது  à®®à¯à®©à¯ எப்போதையும் விட இன்று அவசியமாகியுள்ளது. 
உளவியல் அத்தகைய ஒரு புதிய அறிவுத்துறையாகும். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்ததை விட இன்று உளவியல் பெருவளர்ச்சி கண்டுள்ளது. சமூக வன்முறைகளாலும், யுத்தங்களாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சமூகமும், குடும்பமும், தனிமனிதரும் பெருமளவு சிதைவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகும் இன்றைய காலகட்டத்தில் உளவியல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் தமிழில் உளவியல் நூல்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அந்த வகையில் நவீன உளவியலுக்கு ஒரு அறிமுகமாக அமைகின்ற மணியம் சிவகுமாரின் அடிப்படை உளவியல் என்னும் இந்நூல் வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும்.
திரு.சிவகுமார் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர். தமிழை சிறப்புப் பாடமாகப் பயில்கிறார். தன் பட்டப்படிப்புக்கு மத்தியில் உளவியல், சுகாதார வைத்திய முகாமைத்துவம் ஆகிய கற்கைத் துறைகளிலும் டிப்ளோமா பட்டம் பெற்றவர். அறிவுத்துறையில் அவரது ஆர்வத்தையும் அக்கறையையும் இது காட்டுகின்றது.
உளவியல் ஆழ்ந்த புலமையையும் பல்துறை அறிவையும் வேண்டி நிற்கும் ஒரு அறிவுத் துறை சிவகுமாரோ இன்னும் தன் மாணவப் பருவத்தைத் தாண்டாதவர். ஆழம் அறியாது காலை விடுகிறாரோ என்று முதலில் தயங்கினேன் என்றாலும் தான் கற்ற அறிவை பிறருடன் பகிர்ந்துகொள்ள விரும்பும் அவருடைய ஆர்வம் பாராட்டுக்குரியது என்றே கருதுகிறேன். தான் வகுப்பில் கற்றவற்றையும், பலநூல்களைப் படித்துத் திரட்டியவற்றையும் ஒரு நூலாகத் தொகுத்து நமக்குத் தந்திருக்கிறார். அவ்வகையில் இது ஒரு பயனுடைய முயற்சி என்றே கொள்ள வேண்டும். இத்துறையில் ஆர்வம் உடைய மாணவர்களுக்கும், பொதுவாசகர்களுக்கும் இந்நூல் பயன்படும் என்று நம்புகின்றேன். சிவகுமாரின் இம்முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

பேராசிரியர்.எம்.ஏ.நுஃமான்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : அடிப்படை உளவியல்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 268
Edition (பதிப்பு): 1ம் பதிப்பு 2009. மறுபதிப்பு 2016
Content (உள்ளடக்கம்):

1.    à®‰à®³à®µà®¿à®¯à®²à¯ ஓர் அறிமுகம்    13
    1.1 உளவியல் முறைகள்    18
    1.2 உளவியல் வகைகள்ஃ கருத்துப் பள்ளிகள்    26
2.     à®‰à®³à®µà®¿à®¯à®²à¯ பிரிவுகள்     37
    2.1 கல்வி உளவியல் ஓர் அறிமுகம்    37
    2.1.1 கல்வி உளவியலைக் கையாளும் முறைகள்    38
    2.1.2 கல்வி உளவியலின் வகைகள்     44
    2.1.2.1 கற்றல் உளவியல்;    44
    2.1.2.2 மறதி    51
    2.1.2.3 மறதியும் மனவெழுச்சி நசுங்குதலும்    52
    2.1.2.4 மறதிக்கான காரணங்கள்    53
    2.1.2.5 மறத்தலும் கற்றலும்    55
    2.1.2.6 மறதிக் கோட்பாடு    61
    2.1.2.7 ஞாபகத்தை ஊக்கப்படுத்துவதற்கான சிலவழிகள்     66
    2.1.2.8 செயல் - எதிர - செயல் மாதிரி    69
    2.1.2.9 திட்டமிட்டுக் கற்றல்     73
    2.1.2.10 அறிவு மடக்கமும் உளவியல் கூறுகளும்    76    2.1.2.11 உளவியல் வழிக் கற்பித்தல்    78
    2.1.2.12 பொருத்தப்பாட்டு உளவியல்    79
    2.1.2.13 குழுநடத்தை உளவியல்     80
    2.1.2.14 தனியாள் வேற்றுமை உளவியல்     80
    2.1.2.15 வளர்ச்சி உளவியல்     81
    2.1.2.16 மனவெழுச்சி    81
    2.1.2.17 மனவெழுச்சி குன்றியமை    84
    2.2 சமூக உளவியல்     87
    2.3 குழந்தை உளவியல்     99
    2.4 இளையோர் உளவியல்     109
    2.5 முதுமை நிலை உளவியல்     116
    2.6 இல் வாழ்வியல் உளவியல்     121
    2.7 சிற்றின்ப உளவியல்     125
    2.8 பிறழ்வு உளவியல்     132
    2.9 குற்ற உளவியல்     136
    2.10 அழகியல் உளவியல்     143
    2.11 அறிதல்சார் உளவியல்     147
    2.12 விலங்கு உளவியல்     150
    2.13 உடலியல்சார் உளவியல்     156
    2.14 உணர்ச்சி நிலை உளவியல்     169
    1.15 மொழி உளவியல்     174
    1.16 இலக்கியப் படைப்பாக்க உளவியல்     180
    1.17 நாட்டார் உளவியல்     182
    1.18 இராணுவ உளவியல்     187
    1.19 கைத்தொழில் உளவியல்     194
    1.20 சமய உளவியல்     203
    2.20.1 பக்தி மனமும் இச்சை உணர்வும்     210
    2.21 ஆன்மீக உளவியல்     215
    2.22 இருத்தல் நிலை உளவியல்     220
    2.23 வளர்ச்சி உளவியல்     226
    2.24 அசைவியக்க உளவியல்     230
    2.25 இசைவழி உளவியல்     233
    2.26 தனியாள் உளவியல்     236
    2.27 தற்காம உளவியல்     239
    2.28 தற்காம உளவியல்     241
    2.29 தன்னைத் தானே வருத்தும் பிறழ்நிலை உளவியல்    245
    2.30 வசிய நிலை உளவியல்     248
    2.31 பார்வை நிலை உளவியல்     252
    2.32 ஒப்புமுறை உளவியல்     254
    2.33 நடைமுறை உளவியல்     255
    2.34 இந்திய தரிசனங்களில் உளவியல்     256
    2.35 இந்திய தத்துவங்களில் உளவியல்    263
    2.36 சோதனை உளவியல்     265