Book Type (புத்தக வகை) : சூழலியல்
Title (தலைப்பு) : ஏழாவது ஊழி
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-08-01-079
ISBN : 978-955-1857-78-3
EPABNo : EPAB/02/18827
Author Name (எழுதியவர் பெயர்) : பொ.ஐங்கரநேசன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 432
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 1200.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை
  • செய் நன்றி மறவாமல்...
  • கொதிக்கும் பூகோளம்
  • அனல் கக்கும் அமெரிக்காவும் புனல் தின்ற ஆர்லியன்சும்
  • ஓசோன் குடையில் ஓட்டை
  • பிளாஸ்ரிக்கின் பிடியில் பூமி !
  • அச்சுறுத்தும் அஸ்பெஸ்ரஸ்
  • கொலைக்களமாகும்  à®…டுக்களைகள் !
  • நீல நஞ்சு
  • காதினுள் பாயும் நஞ்சு
  • செல்லிடப் பேசிகள் வரமா - சாபமா?
  • தள்ளாடும் மினமாட்டா
  • சுவாசமே நஞ்சாக...
  • தாய்ப்பாலிற் சிறந்ததொரு அமிர்தமும் இல்லை
  • மென்பானங்களின் வன்முறைகள்
  • நீரின்றி அமையாது உயிர்
  • பாழாகும் யாழ்ப்பாணக் கிணறுகள்
  • யாழ்ப்பாணம் பாலையாகுமா?
  • நீர்ப் போர் மூளுமா?
  • முற்றுகையில் மழைக்காடுகள்!
  • கண்டல்களைக் காப்போம்
  • படையெடுக்கும் பார்த்தீனியம்
  • வாழை உயிர் வாழுமா?
  • இயற்கை விரித்த வலை
  • சுதந்திரத்தின் சிறகுகள்
  • காணாமற் போகும் கடற்குதிரைகள்
  • கேட்குமா இனித் தவளைச் சத்தம்?
  • ஆசியாவின் கடைசிச் சிங்கங்கள்
  • புலிகள் அழியலாமா?
  • குரங்குகளில் மனிதர்களும் மனிதர்களில் குரங்குகளும்
  • தந்திர விதைகளும் தற்கொலை விவசாயிகளும்
  • பறிபோகும் பாரம்பரிய மருத்துவம்
  • காப்புரிமை என்னும் பொருளாதார ஆயுதம்
  • எதனோல் பெற்றோல்; மாற்றா - ஏமாற்றா?
  • மிதிவிசைப் பயணம்
  • ஊமையாகும் மொழிகளும் மரணிக்கும் உயிர்ச்சூழலும்
  • ஏழாவது ஊழி
  • கோழிகளைக் கொல்ல இராணுவம்
  • அசைவமா?...சைவமா?
  • உலகப் பசிக்கு உருளைக்கிழங்கு
  • தாங்குமா இந்தப் பூமி?
  • தேசிய வாசம் வீசும் கார்த்திகைப் பூ!
  • விடுதலைச் சூழலியல்
Full Description (முழுவிபரம்):

நான் சிறுவயது முதலே இயற்கையை நேசிப்பதிலும், இயற்கையைப் பற்றி அறிந்துக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டவனாக இருந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் எனது கிராமமான திருநெல்வேலியில் பரவைக்குளம் என்ற நீர்த்தேக்கம் இருக்கிறது. அன்று, குழத்தையொட்டிப் பச்சை பசேலென்ற நெல்வயல்கள் இருந்தன. வீட்டுக்குச் சொல்லிக்கொள்ளாமல் குளக்கரையில் வந்தமர்ந்து விடுவேன் காற்றுத் தலைவாரிவிடும் போது நெற்பயிர்களில் ஏற்படும் அசைவு என்னுல் ஆச்சர்யத்தை கிளர்ந்தும் குளக்கரை இலந்தை மரத்தில் குடியேரியிருக்கும் தகதகக்கும் பொன்வண்டுகளும் குளத்தில் மலர்ந்து சிரிக்கும் தாமரைப் பூக்களும், 'மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும்' காட்டும் விலாங்கு மீன்களும், பச்சை தவலைகளும் என்னை பரவசத்தில் ஆழ்த்தும். தாமரைப்பூக்களை பறிக்கச் சென்றச்சிலர் சேற்றில் சிக்கி இறந்ததாக ஊரில் கதைகள் உலாவின. இதனால் குளக்கரைக்கு போய்வந்து வீட்டுக்குத் தெரியவந்த நாட்களில் பெற்றோரால் கண்டிக்கவும் தண்டிக்கவும் பட்டது இன்றும் நினைவில் இருக்கின்றது. 
    à®¯à®¾à®´à¯à®ªà®¾à®£à®®à¯ இந்துக்கல்லூரியில் உயர் வகுப்புப் பயின்றப் போது எனக்கு உயிரியல் ஆசானாக வாய்த்தவர் க.சி. குகதாசன் அவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே மாணவர்களை அழைத்துச்சென்று இயற்கையை அதன் முழு அர்த்தப் பரிமாணத்தில் புரியவைப்பதில் வல்லவர் அவர். யால்பாணத்தில் தொண்டைமானாருக்கும் அது போசிக்கும் கண்டற்காடுகளுக்கும் பல தடவைகள் எங்களை அழைத்துச் சென்றார். இவரால், யாழ்பாணத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடமாகக்கண்டற்சூழல் ஆகிப்போனதில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அங்கு போய்வர ஆரம்பித்தேன். பின்நாலில் பட்டப்படிப்புக்காக சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பயிலக்கிடைத்தமையையும் ஒரு பேராகவே நான் கருதுகிறேன். கல்லூரியின் கானகச் சூழல் என்னை புதிய அனுபவங்களுக்கு இட்டுச்சென்றது. இரவில் காற்று சுமந்துவரும் காட்டமல்லி பூவின் வாசத்தை நுகர்ந்துக்கொண்டு மின்மினிப் பூச்சிக்களை பார்க்க விடுதி நண்பர்களுடன் கிளம்பிவிடுவேன். வகுப்பறையின் நுழைவாசலில் 'இன்றைய தாவரம்' என்று தலைப்பிட்டு தினமும் ஒவ்வொரு தாவரத்தை காட்சிப்படுத்தி அது பற்றிய குறிப்புக்களையும் எழுதி வைப்பார்கள். இப்படி மூன்று வருட கிறித்தவ கல்லூரி வாழ்க்கை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரம் செடி கொடிகளை எனக்கு அடையாளம் காட்டித் தந்தது. 
    à®ªà®Ÿà¯à®Ÿ, மற்றும் பட்டப்பின் படிப்புகளுக்கான கற்கை நெறியாக நான் தாவரவியலையே தேர்வு செய்தேன். எனினும் வகுப்பறைக் கல்வியை விட எனக்கு கிடைத்த மேற்குறித்த கள அனுபவங்கள் போதித்தவை தாம் அதிகம். சூழலியல் வெருமனே கல்வி அல்ல: அது வாழ்க்கை. இரத்தமும் சதையும் என்பார்களே அதுபோல. இயற்கையில் தொய்ந்து அதன் ஒரு அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கை தான் சூழலியல். சூழலியல் குறித்து இவ்வாறுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. இதனால் அபிவிருத்தியின் பெயரால் காடுகள் அழிக்கப்படும்போது எனக்கு வலிக்கிறது. காற்றில் குவியும் கரிப்புகை எனக்குச் சுடுகிறது. உயிர்ப்பல் வகைமையில் அழியும் ஒவ்வொரு உயிரினமும் என்னை அழவகை;கிறது. உடையில், உணவில், அருந்தும் பானத்தில் மொழியில் பல்லினத்துவத்தை நிராகரிக்கும் உலகமயமாக்களின் போக்கு என்னை கோபப்படுத்துகின்றது. பெரும்பான்மையின் பெயரால் எனது நிலம், இயற்;கை சூழல் அபகரிக்கப்படும் போது என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இவற்றின் தெறிவினையாகவே சுற்றுச்சூழல் இயக்கங்களில் என்னை இணைத்துக் கொண்டதோடு சுற்றுச் சூழல் குறித்து எழுதவும் ஆரம்பித்தேன். 
எனது கிராமமான திருநெல்வேலியில் முன்பிருந்த நெல்வயல்களையெல்லாம் மேடுறுத்தி குடிமனைகள் ஆக்கிரமித்து விட்டன. எனது குழந்தைகளுக்கு மாதிரிக்காகவேனும் காட்டுவதற்கு ஒரு பொன்வண்டைக்கூடக் காணக் கிடைக்கவில்லை. பரவைக்குளம் பாதி தூர்ந்துவிட்டது. தவளைகள் ஐந்து ஆறு கால்களோடு தோன்றிப் பயமுறுத்துகின்றன. தாமரைகளை விடவும் அதிகமாக, காணப்படாத ஆகாயத்தாமரைகள் பச்சைப் புற்றுநோயாகக்குளத்தில் பறவியுள்ளன. இந்திய இராணுவம் கொண்டு வந்து சேர்த்த பார்த்தீனியம் களைகள் உள்ளூர் தாவரங்களை மிரட்ட ஆரம்பித்துள்ளன. பல கிணறுகளில் நீர்மட்டம் கீழ் இறங்கிச் சென்றுவிட்டது. இது எனது கிராமத்தின் சோகம் மாத்திரமல்ல: பூவுலகு அடுத்த ஊழிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றதோ என நினைக்கும் அளவுக்கு உலகப் பொதுவான அனுபவமாகவும் இருக்கிறது. இவை குறித்தே எனது கட்டுரைகள் பேச விழைகின்றன. 
பல்வேறு இதழ்களிலும் நான் எழுதி வந்த கட்டுரைகளில் இருந்து நாற்பத்தியொரு கட்டுரைகளை தேர்ந்து 'ஏழாவது ஊழி' என்னும் தொகுப்பாக உங்கள் முன் சமர்பித்துள்ளேன் இக்கட்டுரைகள் யாவும் பிந்திய தரவுகளைச் சேர்க்கும் விதமாக இற்றைப்படுத்திப் புதிக்கி எழுதப்பட்டுள்ளன. இதனால் கட்ரைகளின் அடிக்குறிப்புக்களாக அவை முன்னர் வெளியான இதழ், காலம் போன்றவற்றைக் குறிப்பிடுவதை தவிர்த்துள்ளேன். மேலும் கட்டுரைகள் வெளியான கால ஒழுங்கில் அல்லாமல் கட்டரைகளுக்கிடையேயான தொடர்புகளின் அடிப்படையிலேயே இயன்ற அளவுக்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வாசிப்பின் படிநிலைக்கு இது உதவும் என்பது என் அபிப்பிராயம். 
இலங்கை தமிழகம் என்ற இரண்டு தமிழ்ச் சூழலிலும் எனது ஆக்கங்கள் பிரசுரமாவதால் இரண்டுக்கும் பொதுவான அறிவியல் சுற்றுச்சூழலியல் கலைச்சொற்களைத் தேடுவது. எனக்கு சிரமமாக உள்ளது. கலைச்சொற்களின் ஒலிப்பெயர்புகளிலும் வித்தியாசங்கள் உள்ளன. இந்த இடைவெளி கடக்க முடியாத ஒன்றல்ல. இதற்கு இலங்கையையும், தமிழகத்தையும் சேர்ந்த தமிழறிஞர்களினதும் அறிவியலாளர்களதும் ஒருங்கிணைக்கப்பட்ட பணி அவசியம் கலைச் சொற்களை புரிந்து கொள்வதில் உள்ளச் சிரமங்களைத் தவிர்ப்பதற்கா அவற்றின் அருகில் பொறுத்தமான ஆங்கிலச் சொற்கள் அடைப்புக்குள் தரப்பட்டுள்ளன. புள்ளி விபரங்களும் பொது வாசகர்களுக்குச் சில சமயங்களில் சலிப்பூட்டக் கூடியதாம். ஆனால் முதலாலித்துவ உலகு தனக்குச் சாதகமான தரவுகளை மட்டுமே எடுத்தியம்பி சூழற் சீர்கேடுகளின் உண்மையான பரிமாணங்களை மறைத்தவாறு இயற்கையைத் தொடர்ந்தும் சூரையாடி வருகிறது. இந்த இருட்டடிப்பை எதிர்க்கொள்வதற்குச் சூழலியலாளர்கள் தரப்பில் புள்ளிவிபரங்கள் அவசியமாகின்றன. எனினும் இந்த கலைச்சொற்களும் புள்ளி விபரங்களும் தேடல் மிகுந்த வாசகர்களுக்கு ஒருபோதும் இடையூறாக அமையாது என்று நம்புகிறேன். 
'ஏழாவது ஊழி' என்னும் இந்நூலானது, பூவுலகு எதிர்நோக்கியுள்ள பேரபாயத்தில் இருந்து அதனை மீட்டெடுப்பதற்கு வாசகர்களின் சிந்தனை மாற்றத்தையே பெரிதும் வேண்டி நிற்கிறது. இதனை படித்து முடிக்கும் ஒருவர் தனது பெருநுகர்வை குறைக்கம் விதமாக தேவையற்ற நேரத்தில் சுழலும்   மின்விசிரியை நிறுத்தி வைக்க, சொட்டு நீரையேனும் வீணாகச் சிந்தவிடாது நீரக்குழாயை இருக்கமாக மூடிவைக்க எரிப்பொருளை மிதப்படுத்தும் விதமாகக் குறைந்தப்பட்சத் தூரத்தையேனும் மிதிவண்டியில் கடக்க தெருவில் ஓணான் மீது கல்லெறிந்து குண்புறுத்தும் வக்கிரபுத்தியுள்ளவரை தடுக்க அல்லது இவை போன்ற இன்ன பிற சிறிய, ஆனால் அரிய முயற்சிகளில் இறங்குவாரெனின் மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் பூமி அன்னையை கொஞ்சமேனும் ஆசுவாசப்படுத்துவதாக அமையும். அதுவே இந்நூலாக்க முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாகவும் இருக்கும். 
பூமி அனுபவித்து வரும் இன்னோரன்ன சீரழிவுகளுக்கு மத்தியில் மனிதன் பூமியின் மீது மேலாண்மை செய்வதை விடுத்துக் கட்டாண்மை உறவுக்குத் திரும்புவான் என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் மீதமிருக்கிறது.
பொ. ஐங்கரநேசன்.