Book Type (புத்தக வகை) : தொகுப்பு
Title (தலைப்பு) : நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-08-04-082
ISBN : 978-955-1857-81-3
EPABNo : EPAB/02/18807
Author Name (எழுதியவர் பெயர்) : நா.சு.சிதம்பரம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 50
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 130.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

1. வில்ஹெல்ம் கார்னாட் ராண்ட்ஜன்
          ( Wilhelm Conrad Rontgen )
2. ஹென்ட்ரிக் ஆன்டூன் லாரன்ட்ஸ்
          ( Hendrik Antoon Lorentz )
3.  à®ªà¯ˆà®Ÿà®°à¯ சீமன் 
           ( Fyder Zeeman )
4.  à®†à®©à¯à®Ÿà®¾à®¯à¯à®©à¯ ஹென்றி பெக்குரல் 
            ( Antoine Henri Becquerel )
5.  à®®à®°à®¿à®¯à®¾ ஸ்க்வோடோன்ஸ்கி என்ற மேரி கியூரி
           ( Maria Skboedowska Manya - Marie Curie )
6.  à®ªà®¿à®¯à®°à¯ கியூரி
            ( Pierre Curie )
7.  à®œà®¾à®©à¯ வில்லியம் ஸ்ட்ரட், 3-வது பரன் ராலே
                ( John William Strutt 3rd Baron Rayleigh )
8.  à®ªà®¿à®²à®¿à®ªà¯ எட்வர்ட் ஆன்டன் லெனார்ட்
            ( Philipp Edward Anton Von Lenard )
9.  à®œà¯‹à®šà®ªà¯ ஜான் தாம்சன்  
               ( Joseph John Thomson
10. ஆல்பர்ட் அப்ரகாம் மைக்கல்சன்
                ( Albert Abraham Michelson )
Full Description (முழுவிபரம்):

மனித குலத்தின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுக்கும் அடிப்படையாக விளங்குவது அறிவியல். அறிவியல் என்பது அறிவைத் தேடுவது. அவ்வாறு தேடியதை மேம்படுத்துவது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நாடுகள்தான் இன்று பலதுறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளாக விளங்குகின்றன. 
அறிவியல் மனப்பாங்குள்ள சமூகம் பல்துறையில் முன்னேற்றங்கண்டு வருகிறது. தொடர்ந்து அறிவியல் வளர்வதற்கும் புதிய துறைகள் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கும் அறிவியல் புதுவிசையாக  à®…மைகிறது. இந்த விசைப்படுத்தலில் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் தொழிற்பட்டு வருகிறார்கள். இந்த ஆளுமைகள் தமது சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளால் புத்தாக்கமான புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்குகின்றார்கள். 
உலகளவு அறிவியல் அறிஞர்கள் பாராட்டப்பட வேண்டும். கௌரவிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்கள் வாழும் காலத்தில் இது சாத்தியப்பட வேண்டும். இந்த உயரிய நோக்கத்தில் 'நோபல் பரிசு' வழங்கப்படுகின்றது. இந்தப் பரிசுக்கு உரித்தானவர்களை இளந்தலைமுறையினர் அடையாளம் காண வேண்டும். அவர்களது சிறப்புகள் ஆய்வுகள் யாவும் கல்வியாக வாசிக்கப்பட வேண்டும். இந்தப் பண்பு மாற்றத்துக்கான ஆற்றுப்படையாக இந்நூல் அமைகின்றது. 
நோபல் பரிசு இயற்பியல், பேரியல், மருந்தியல் - உடலியல் ஆகிய அறிவியல் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. இதைவிட இலக்கியம், பொருளாதாரம், சமாதானம் போன்றவற்றுக்கும் வழங்கப்படுகின்றது. இந்நூல் இயற்பியல் அறிஞர்கள் வரிசையில் முதலாவது தொகுதியாக வெளிவருகின்றது. இதில் 10 அறிஞர்கள் இடம்பெறுகிறார்கள். இந்த நூல் வரிசை இன்னும் தொடரும். மாணவர்களிடையில் அறிவியல் நோக்கு, அறிவியல் மனப்பாங்கு யாவும் விருத்திபெற இந்நூல் துணை செய்யும். 
இந்நூலை வெளியிடுவதற்கு சந்தர்ப்பம் நல்கிய தமிழ்மண் பதிப்பகத்தாருக்கும் இதுபோன்ற அறிவியல் நூல்களை வழங்கும் ஆசிரியர் நா.சு.சிதம்பரம்  à®…வர்களுக்கும் எமது நன்றிகள். 
பதிப்பாளர்
சதபூ.பத்மசீலன்