Book Type (புத்தக வகை) : அகராதி
Title (தலைப்பு) : CBC-MMC Dictionary Book ( Series-1 )
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2012-07-01-112
ISBN : 97-895-568-501-16
EPABNo : EPAB/2/19297
Author Name (எழுதியவர் பெயர்) : ஐசாக் யேசுதாசன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 148
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 380.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

அகர எழுத்து                   à®ªà®•à¯à®•à®™à¯à®•à®³à¯; 
01. 'à®…' வரிசை...    01
02. 'ஆ' வரிசை...    37
03. 'இ' வரிசை...    55
04. 'ஈ' வரிசை...    77
05. 'உ' வரிசை...    81
06. 'ஊ' வரிசை...    103
07. 'எ' வரிசை...    111
08. 'ஏ' வரிசை...    119
09. 'ஐ' வரிசை...    125
10. 'à®’' வரிசை...    127
11. 'ஓ' வரிசை...    137
வினைச்சொல்லின் 5 பதங்களின் உபயோகம் மற்றும் ஆங்கிலத்திலுள்ள அனைத்துக் காலங்கள் பற்றிய விளக்கத் தொடர் அமைந்துள்ள பக்கங்கள

(i)     Active Voice Part - I     54
(ii)     Active Voice Part - II    76
(iii)     Passive Voice Part - I    110
(iv)      Passive Voice Part - II    118
(v)     Active Voice - Example Sentences    124
(vi)     Passive Voice - Example Sentences    136
(எii)     ஊக்குவிப்புப் போட்டிகள் பற்றிய குறிப்பு    140

Full Description (முழுவிபரம்):

படிக்கின்றவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் ஆங்கில அறிவை மேம்படுத்துவது காலத்தின் தேவையும்  à®šà¯à®¯à®®à¯à®©à¯à®©à¯‡à®±à¯à®±à®¤à¯à®¤à¯à®•à¯à®•à¯ இன்றியமையாததுமாகும். எனவே இந்த முக்கியமான சமூகத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, எனது 25 வருடங்களுக்கு மேலான கற்பித்தல் அனுபவத்தின் மூலம் நீங்கள் கற்கவேண்டியதை நன்கறிந்தவன் என்ற வகையில் மிகவும் முக்கியமான வினைச்சொற்களின் அறிவை நீங்கள் அதிகரித்துக்கொள்வதற்காகவும் அதேவேளை உங்களின் தற்கால தேவையான இரண்டாம் மொழியான சிங்கள அறிவினையும் பெற்றுக்கொள்வதற்காகவும் ஒரு அகராதியைத் தொகுத்து, உதாரண வாக்கியங்களில் பல்துறைகளைச் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கி நீங்கள் ஆவலுடன் படிக்கக்கூடிய வகையில் ஓர் அரிய புத்தகமாக இதனை உருவாக்கியிருக்கின்றேன். இதன் விசேட அம்சங்களாவன:
1.     à®‡à®²à®•à¯à®µà®¾à®© தேடலுக்காக எமது தமிழ் அரிச்சுவடியின் ஒழுங்கு பின்பற்றப்பட்டிருத்தல்.
2. வினைச்சொல்லின் முழுமையான அறிவுக்காக அதனது ஏனைய பதங்களும் தரப்பட்டிருத்தல். 
3. வினைச்சொல்லுக்கான சிங்கள வினைச்சொல் அதன் தமிழ் உச்சரிப்புடன் இடம்பெற்றிருத்தல்.
4.     à®µà®¿à®©à¯ˆà®šà¯à®šà¯Šà®²à¯à®²à¯ˆ விளங்க ஒரு தமிழ் வாக்கியம் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அமைந்திருத்தல்
5.     à®†à®™à¯à®•à®¿à®²à®¤à¯à®¤à®¿à®²à¯à®³à¯à®³ அனைத்துக் காலங்களும் வௌ;வேறு விதமான வாக்கியங்களுள் அடங்கியிருத்தல். 
6. ஆர்வத்துடன் படிப்பதற்காக யதார்த்தமான தற்கால விடயங்கள் வாக்கியங்களில் புகுத்தப்பட்டிருத்தல்.
7. சொல்வளத்தை அதிகரிக்க இவ் வாக்கியங்களில் நடைமுறைச் சொற்கள் பிரயோகிக்கப்பட்டிருத்தல்.
சான்றோர்களின் நல்ல ஆலோசனைகளும், அறிவுரைகளும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும் பட்சத்தில் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் பதிப்புகளில் மாற்றங்கள் செய்யப்படும்.
இந்த அகராதிப் புத்தகம் 2012 இல் வெளியிடப்பட்டதனால், இதில் தரப்பட்டிருக்கும் வாக்கியங்கள் காலத்தோடு ஒத்தனவாகக் காணப்பட்டபோதிலும் காலஞ்செல்லச் செல்ல பழையனவாகின்ற சந்தர்ப்பத்திலும் துன்பியல் சரித்திரத்தை அறிந்துகொள்ள உதவியாகவிருக்கும் என்ற எனது கருத்தோடு நீங்களும் உடன்படுவீர்களென நம்புகின்றேன்.
எனது இம் முயற்சி கைகூடுவதற்கு பல வழிகளிலும் ஒத்தாசை புரிந்தவர்களுள் முதன் முதலில் மன்னார் ஆயர் அதி வந்தனைக்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இப் புத்தகத்தின் தரத்திற்கு அளித்த அங்கீகாரத்திற்கு முதற்கண் மகிழ்ச்சியுடன் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 
அடுத்ததாக எனது ஆக்கங்களைப் பார்வையிட்ட மாத்திரத்திலேயே என்னையும் ஒரு எழுத்தாளனாக அங்கீகரித்து இப் புத்தகத்தினை அச்சேற்றுவதற்குத் தோள் கொடுத்ததுடன் புத்தகத்துறை சம்பந்தமாக அனைத்து விளக்கங்களையும் அளித்து ஆலோசனைகளையும் தந்து பங்காளியாக என்னை ஏற்று சந்தைப்படுத்துவதிலும் கைகோர்த்துள்ள சேமமடு புத்தகசாலை, சேமமடு பதிப்பகம் மற்றும் பத்மம் பதிப்பகம் ஆகியவற்றின் தலைவர் திரு.சதபூ.பத்மசீலன் அவர்கட்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அடுத்ததாக ஓய்வுபெற்ற தபால் அதிபர் திரு.அல்பிரட் அவர்கள் நான் கேட்ட உடனேயே பிழை திருத்தங்கள் செய்வதற்குச் சம்மதித்து தனது பொன்னான நேரத்தைச் செலவழித்து தனது புத்தகத்திற்குச் செய்வது போல மிகச் சிரத்தையுடன் உதவியதற்கு என்றென்றும் எனது நன்றிகள். அடுத்ததாக முதன் முதலில் இப் புத்;தகத்தின் மாதிரியைக் காண்பித்தபோதே மனதாரப் புகழ்ந்து உதவ முன்வந்த திரு.குணாளன், திருமதி.சர்;மிளா குணாளன் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக. இவர்களுடன் இப் புத்தகத்திற்குப் பொருத்தமான அழகான அட்டையை வடிவமைத்த வை. கோமளாவுக்கும் எனது நன்றி. 
இறுதியாக, இப் புத்தகத்தை வாங்கிப் படிக்கின்ற உங்கள் அனைவர்க்கும் நன்றியைத் தெரிவிப்பதுடன் மிகுந்த பயனை அடைவதற்கு எனது நல்வாழ்த்துக்கள்! 

Mr.Isaac Jesuthaason