Ariyanayakam, V

திரு வி.அரியநாயகம் அவரகள் சுண்ணாகம் விரியப்பாலத்தில் பிறந்தவர். சுண்ணாகம் திருஞான சம்பந்த வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வி, மல்லாகம் மகா வித்தியாலயம், சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வி கற்று, ச்ன்னப் பல்கலைக்கழகப் பட்டதாரியானார்.

ஆசிரியத் தொழிலில் அனலைதீவு சதாசிவ ஆங்கிலப்பாடசாலை உதவி ஆசிரியர், மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, அடம்பன் மகா வித்தியாலயம், உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், செங்குந்தா இந்துக்கல்லூரி ஆகியவற்றில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது அவுஸ்திரைலியாவில் வாழ்கிறார்.   

வி.அரியநாயகம் புத்தகங்கள்
2009 - குழந்தை இலக்கியம் - கதைக் கோலங்கள்
2011 - குழந்தை இலக்கியம் - கதைக் கனிகள்
- குழந்தை இலக்கியம் - கதைக் கனிகள்