Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : சிரிக்க விடுங்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-07-02-009
ISBN : 978-955-0367-08-5
EPABNo : EPAB/2/19239
Author Name (எழுதியவர் பெயர்) : அகளங்கன்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): இரண்டாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : சிரிக்க விடுங்கள்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 20
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 160.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

சிரிக்க விடுங்கள் - எங்களை 
சிரிக்க விடுங்கள்.

சிறுவர் நாங்கள் பேதம் இன்றிச்
சேர்ந்து மகிழ்ந்து பாடி ஆடிச் 
சிரிக்க விடுங்கள் - எங்களை 
சிரிக்க விடுங்கள்.

அடிமைகளாய் வீட்டுக் கூலி 
ஆளாய் எம்மை அனுப்ப வேண்டாம்.
அடிதடிக்குள் எம்மைச் சேர்த்து 
ஆயுதத்தால் அழிக்க வேண்டாம். 

சாதி பேதச் சாக்கடைக்குள் 
தள்ளி எம்மை வீழ்த்த வேண்டாம்.
சமய பேதப் போர்க்களத்தில்
தலையுடைக்க அனுப்ப வேண்டாம் 

Full Description (முழுவிபரம்):

யுத்தம் என்னும் அரக்கன் இல்லா 
யுகம் ஒன்று வருகுது
யுகம் யுகமாய் வந்த துன்ப 
யுகம் மறைந்து போகுது.

ஆயுதங்கள் வன்முறைகள் 
அடிதடிகள் இனி இல்லை
அழிவு சேதம் அகதி துன்பம்
அகிலம் எங்கும் இனி இல்லை

கொலை கலவு கொடுமை தீமை 
குத்து வெட்டு இனி இல்லை. 
குரோதம் பகைமை போட்டி பொறாமை
குவலயத்தில் இனி இல்லை. 

அன்பு நட்பு அமைதி பொறுமை 
அகிலம் எங்கும் பெருகியே 
அரிய மனிதப் பண்பு ஓங்கும் 
அவனி எங்கும் விரைவிலே