Book Type (புத்தக வகை) : கல்வியியல் Educational
Title (தலைப்பு) : கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-08-02-099
ISBN : 978-955-1857-89-9
Author Name (எழுதியவர் பெயர்) : சு.பராமானந்தம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2017
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 136
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 400.00
Edition (பதிப்பு): 2ம், திருத்திய பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • பாடசாலையின் விளைதிறன் விருத்தியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஓர்நோக்கு
  • ஆசிரியர் திறன் விருத்தியில் தொழில்நுட்பக் கருவிசார் வளங்கள்
  • விளைத்திறனுடைய ஆசிரியரும் கல்வித் தொழில்நுட்பம்
  • ஆசிரியரின் வாண்மைவிருத்திக்கான சாதனமாக கணினி
  • கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் 
  • தொழில்நுட்பம்-முறையியல்-பாடவிடயம்
  • கற்பித்தல் நுட்பங்கள்
  • கற்றல் வட்டம்
  • பன்முக நுண்மதி கற்றல் கற்பித்தல் அணுகுமுறையில் வன்பொருள் மென்பொருள் பிரயோகம்
  • நவீன கற்றல் செயன்முறையில் கணினி
  • இணைப்புவாதம் கற்பித்தல் அணுகுமுறை 
  • பல்லூடகம் மூலம் கற்றல்
     
Full Description (முழுவிபரம்):

காலச் சுழற்சி, நவீன தொழில்நுட்பவியலின் வேகமான பரவல், புதிய உலக வாழ்வியலில் ஒவ்வொரு தனி மனிதனும் ஏதோவொன் றுக்காக பலவற்றை இழந்தும், காலத்தின் பறிப்பும், வழங்கலுமாக வாழ்வுக்கான போராட்டமாக மனிதம் சுழன்றுகொண்டுள்ளது. இதில் தகவல் தொடர்பாடல் nhழில்நுட்பம் என்பது மனித வாழ்விய லுக்குள் முக்கியத்துவம் பெற்றுவருவது தவிர்க்க முடியாததாகி விட்டது. உலகில் எங்கு எனன நிகழ்ந்தாலும் அதனை உடனேயே கைக்குள்ளே கொண்டுவரக்கூடிய வகையில் தகவல்  à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà®¾à®Ÿà®²à¯ தொழில்நுட்பத்துறை வளர்ந்துள்ளது. 
கல்வித்துறையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் தாக்கம் பற்பல கற்பித்தல் முறைகளையும், தகவல் வளங்களையும் தொழில்நுட்பம் மற்றும் அறிவு நுணுக்கத் திட்டமிடல்களையும் உள்வாங்கி தனியே ஒருவர் என்றில்லாமல்,  à®®à®¾à®£à®µà®°à¯, ஆசிரியர், பெற்றோர், குடும்பம், சமூகம், நாடு, சர்வதேசம் என பரந்து விரிந்து காணப்பட்டு இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் வலைப்பின்னலி னூடாக எம்முன்னே கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. 
இந்நிலையில், கற்போருக்கு பயனுள்ள தகவல்களையும் திறன் களையும் கற்பிப்பது மட்டும் நமது ஒரே நோக்கமாக இருக்க முடியாது. அவர்களை பயனுறுதியுள்ள கற்போராக மாற்றுவதும் நமது நோக்க மாக இருக்க வேண்டும். அதாவது அவர்கள் தன்னிச்சையான கற்போராக மாற வேண்டும். தமக்குத் தேவையானவற்றை தாமே தேடிப்பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் கற்றல்-கற்பித்தல் வழிமுறைகள் அமைந்திருக்க வேண்டும்.
கல்வித்தொழில்நுட்பத்தின் மீது எனக்கிருந்த ஆர்வம் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில் நுட்பத்துறையிலும் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. இதன்விளைவாக கற்பித்தல் முறைகளில்  à®¤à¯Šà®´à®¿à®²à¯ நுட்பத்தை இணைத்தல் தொடர்பான தேடல்களையும்  à®ªà®¿à®°à®¯à¯‹à®•à®™à¯ களையும் மேற்கொண்டேன். பெருமளவு ஆங்கிலமயப்படுத்தப்பட்ட நூல்களைக் கொண்ட காலப்பகுதியில் என்னால் ஆக்கப்பட்ட பல கட்டுரைகள் அகவிழி சஞ்சிகையில் கணிசமான இடத்தைப்பெற்றுக் கொண்டன. இதன் விளைவாக இவற்றைத் தொகுத்து நூலாக வெளி யிடுவது பொருத்தமாக அமையுமென கருதி 'அகவிழி', 'ஆசிரியம்' முதலானவற்றின் பிரதம ஆசிரியர் திரு.மதுசூதனனை அணுகிய போது தனது பூரண சம்மதத்தை தெரிவித்து அதற்கான முயற்சிகளி லும் ஈடுபட்டு இந்நூல் வெளிவருவதற்கு பெரிதும் உதவினார்.  'தரமான கல்விக்கு தரமான ஆசிரியர் கல்வி' என்பதுடன் 'தரமான ஆசிரியர் கல்விக்கு தரமான வழிகாட்டல்கள்' அவசியம் என்ற எண்ணத்தில் இந்நூலையும் ஒரு வழிகாட்டியாக அமைத்துள்ளேன்.
எனது தேடல், அந்தத் தேடலின் பயனான கற்றுக்கொள்ளல் களின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்தாலும் தேடலுக்கும் பிரயோ கத்திற்கும் சந்தர்ப்பத்தை தந்து வழிப்படுத்தியோர் பலர். என் ஆற்றல் மேம்பாட்டிற்கும், வெளிப்படுத்தல்களுக்கும் பூரண ஆதரவும் ஆசி களும் எப்போதுமே வழங்கிக்கொண்டிருக்கும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு.க.பேர்ணாட் அவர்கள், இந்நூல் வெளியீட்டுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அகவிழி, ஆசிரியம் பிரதம ஆசிரியர் திரு.தெ.மதுசூதனன் அவர்கள், வளவாளராக அங்கீகரித்த வலயக் கல்விப்பணிப்பாளர்கள், மற்றும் அதிபர்கள், மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவன நிரிவாகிகள் ஆகியோர் நன்றிக் குரியவர்கள். அத்துடன் இந்நூலுக்கு அணிந்துரை தந்துதவிய கலாநிதி.கந்தையா ஸ்ரீகணேசன் அவர்கள், எனது எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் சிறப்புற அச்சாக்கம் செய்த சேமமடு பதிப்பகம், பத்மம் பதிப்பகத்தாருக்கும் உரிமையாளர் திரு.பூலோலசிங்கம் பத்மசீலன் அவர்களுக்கும் நிறைவாக எனது செயலாற்றல்களுக்கு எப்போதும் பக்கபலமாக நின்று உதவிசெய்யும் அன்பு மனைவி மாலதி, மற்றும் பிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

சு.பரமானந்தம்,
ஆசிரிய கல்வியியலாளர்.

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 120
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 560.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • பாடசாலையின் விளைதிறன் விருத்தியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஓர்நோக்கு
  • ஆசிரியர் திறன் விருத்தியில் தொழில்நுட்பக் கருவிசார் வளங்கள்
  • விளைத்திறனுடைய ஆசிரியரும் கல்வித் தொழில்நுட்பம்
  • ஆசிரியரின் வாண்மைவிருத்திக்கான சாதனமாக கணினி
  • கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் 
  • தொழில்நுட்பம்-முறையியல்-பாடவிடயம்
  • கற்பித்தல் நுட்பங்கள்
  • கற்றல் வட்டம்
  • பன்முக நுண்மதி கற்றல் கற்பித்தல் அணுகுமுறையில் வன்பொருள் மென்பொருள் பிரயோகம்
  • நவீன கற்றல் செயன்முறையில் கணினி