Book Type (புத்தக வகை) : தமிழ்மொழிக்கல்வி நூல்
Title (தலைப்பு) : நாட்டாரியற் கல்வி
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : 2017-06-01-151
ISBN : 978-955-685-050-5
EPABNo : EPAB/2/19295
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2017
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 114
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 360.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):
 
1. மீள்நோக்கில் நாட்டார் வழக்காறுகள் 01
2. நாட்டார் கலைகளும் அமைப்பியலும் கல்வியும் 07
3. நாட்டார் அறிவுப் பரவலிற் குறிகள் 14
4. நாட்டார் விழாக்களும் கல்வியும் 21
5. நாட்டார் கதைகள் மற்றும் கதைப் பாடல்கள்
வாயிலான அறிவுக் கையளிப்பு 27
6. நாட்டார் பாடல்களும் அறிவுப் பரவலும் 33
7. பொம்மலாட்டமும் தோற்பாவை நிழற் கூத்தும் 40
8. வில்லுப்பாட்டும் இசைக்கதையுரைப்பும் 46
9. விடுகதைகள் வாயிலாக அறிவேற்றம் செய்தல் 53
10. இசைக்கருவிகள் வாயிலான அறிவுத் தொடர்பாடல் 59
11. வழிபாட்டு முறையாக ஆடல் 65
12. கல்விச் செயற்பாடாக நாட்டார் அரங்கு 73
13. புழங்கு பொருள்களும் அறிவுக் கையளிப்பும் 80
14. நாட்டார் விளையாட்டுக்களின்
கல்விப் பெறுமானங்கள் 86
15. சடங்குகள் வாயிலான அறிவுக் கையளிப்பு 92
16. கல்விச் சாதனமாகும் மாயவித்தை 98
17. நோக்கிய நூல்கள் 104
Full Description (முழுவிபரம்):

நாட்டார் வழக்காறுகள் வழியாகக் கல்விக் கையளிப்பு எவ்வாறு நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது என்பது தமிழ்ச் சூழலில் இன்னமும் விரிவாக ஆராயப்படவில்லை.
அவ்வகையில் இந்நூல் ஒரு முன்னோடி ஆக்கமாகும். நாட்டாரியல் ஆய்வரங்குகள் பல்கலைக்கழகங்களிலே இடம்பெற்று வந்தாலும் நாட்டாரியலையும் கல்வியியலையும் தொடர்புபடுத்திப் பார்க்கப்படாத விசாலித்த இடைவெளி காணப்பட்டது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கு ஒன்றிலே அத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவம் உரத்து முன்வைக்கப்பட்டது.
பேராசிரியர் நா.வானமாமலையும் பேராசிரியர் தே.லூர்தும் தமிழ் நாட்டாரியல் ஆய்வுகளின் வழியாகப் புதிய புலக்காட்சிகளைத் தோற்றுவித்தனர்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வுத் தளங்களில் நின்று, ஆராயப்படாத புதியதொரு துறையை நோக்கி இந்த ஆக்கம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆழ்ந்து நோக்கும் பொழுது நாட்டார் வழக்காறுகள் அனைத்தும் கல்விப் பெறுமானங்களையே சுமந்து நிற்றல் தெளிவாகப் புலப்படும்.
சபா.ஜெயராசா