Book Type (புத்தக வகை) : கல்வியியல் Educational
Title (தலைப்பு) : கல்வியியற் கோவை
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2015-08-02-138
ISBN : 978-955-685-037-6
EPABNo : EPAB/02/18573
Author Name (எழுதியவர் பெயர்) : ப.சந்திரசேகரம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 176
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 560.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1.    à®¤à®®à®¿à®´à¯à®¨à¯†à®±à®¿ காணும் கல்வி மரபு    01
2.    à®®à®£à®¿à®®à¯‡à®•à®²à¯ˆ கற்பிக்கும் அறநெறி    15
3.    à®¤à®¿à®°à¯à®®à®¨à¯à®¤à®¿à®°à®®à¯ தரும் கல்விநெறி    19
4.    à®‡à®¨à¯à®¤à¯ சமயக் கல்வி மரபு    23
5.    à®•à®²à¯à®µà®¿à®¤à¯ தத்துவமும் இலட்சியவாதமும்     28
6.    à®®à®¾à®±à¯à®±à¯ வகைக் கல்வித் தத்துவங்கள்    34
7.    à®®à®•à®¾à®©à¯ அரவிந்தரது அனைத்துலக         
    à®†à®©à¯à®®à¯€à®•à®•à¯ கல்விச் சிந்தனைகள்    39
8.    à®…றிஞர் இராதாகிருஷ்ணன் அளித்த         
பல்கலைக்கழகக் கல்விச் சிந்தனைகள்    49
9.    à®•à®²à®¾à®¨à®¿à®¤à®¿ சொக்கீஸ் கூ சென் தரும்         
    à®ªà®²à¯à®•à®²à¯ˆà®•à®´à®•à®•à¯ கல்விச் சிந்தனைகள்    59
10.    à®…ரிஸ்டோட்டலின் கல்விச் சிந்தனைகள்    63
11.    à®šà®®à®¤à®°à¯à®® சிந்தனையாளர் றொபேட் ஒவென்    70
12.    à®‰à®°à¯‹à®®à®¾à®©à®¿à®¯à®•à¯ கல்வி மரபு    78
13.    à®¤à®¤à¯à®¤à¯à®µà®žà®¾à®©à®¿ பேற்றம் ரசல் கண்ட                     
    à®•à®²à¯à®µà®¿à®šà¯ சிந்தனைகள்    82
14.    à®µà¯‡à®¤à®¾à®¨à¯à®¤à®•à¯ கல்வி நெறியாளர்     89    
    à®µà¯‡à®Ÿà¯à®¸à¯ வேர்த் கண்ட சால்பினன்
15.    à®®à¯à®±à¯ˆà®®à¯ˆ சாராக் கல்வி    95
16.    à®œà®ªà¯à®ªà®¾à®©à¯ நாட்டுக் கல்வி ஒழுக்கம்    101
17.    à®¯à®¾à®´à¯à®ªà¯à®ªà®¾à®£ இளைஞர் சங்கமும் கல்வி எழுச்சியும்     106
18.    à®®à¯‚ன்றாம் மண்டல நாடுகளும்         
    à®•à®²à¯à®µà®¿à®¯à®¿à®²à¯ முதன்மை பெறும் அம்சங்களும்    109
Educational Ideas of Confucius    118
20.    Philosophy, Science and Education    121
21.    Sri Ramakirishna, the ‘Spiritual - Social Educator’    128

Full Description (முழுவிபரம்):

'கல்வியியற் கோவை' எனப் பெயரிய இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கல்விக் கழகத்தாரினது சேவை மனப்பாங்கினாலும் ஆர்வத்தாலும், அறிவாலும் வெளியிடப்படுகின்றது.
உலகளாவிய கல்விக் கோள்களை முதற்கண் உளத்தமைத்து, முறைப்படுத்தி, மேற்புலக் கல்வியாளர்களினதும், கீழ்ப்புலக் கல்வி நெறியாளர்களினதும் சிந்தனைகளை ஒப்புநோக்கி என்பட்டறிவோடு பொருத்திக் கண்டு கல்விக்கலை தமிழ் கூறும் நல்லுலகில் நன்கு விரிந்து வரவ வேண்டும் எனும் குறிக்கோளுடன் எழுதப்பட்ட நூலாகும்.
இற்றைக்காலம் தமிழ் மொழிக்குத் தலையிடமும், தலைமைக்கு தமிழிடமும்; ஓங்கி வரும் காலம். தமிழுணர்வு பொங்கி வருங் காலம் அனைத்து நிலைகளிலும் பயிற்று மொழியாகத் தமிழ் வளர்ந்து வரும் காலம். எனவே மறுமலர்ச்சி நெறி தழுவித் தமிழ் மணம் கமழத் தமிழில் கலை நூல்கள் இல்லையெனும் குறையை ஓரளவு நீக்க இந்நூல் எழுதப்பட்டு வெளிவருகின்றது.
ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலேயே இலங்கைத் திருநாட்டில் மட்டுமே தமிழ்மொழி இளங்கலை மாணவர் நிலை தொடக்கம், கலாநிதிப் பட்ட நிலைவரைக்கும் பயிற்சிமொழியாக விளங்குகின்றது. இதனால் வளம் கொழித்து விளங்கும் தமிழ்மொழி உயர்நிலைக் கல்வி மொழியான காரணத்தினால் கூடிய செழுமை பெற்று வருகின்றது.
கல்வியும், தமிழ்மொழியும் ஒன்றோடொன்றிணைந்தவை. இவ்விரு நெறிகளிலும் காதலும் இவற்றின் வளர்ச்சியில் ஆர்வமும் காட்டிவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்விக் கழகத்தின் எண்ணத்தினை ஓரளவு இந்நூல் மலர்விக்கும் என்பது எனது உள்ளக்கிடக்கையாகும்.
இந்நூலையொட்டியும், தழுவியும் துறை நூல்கள் இன்னும் பெருகிக் கல்வி அன்னையும், தமிழன்னையும் மலர அணி பெறும் எனவும் எண்ணுகின்றேன். கல்விக் கழகம் மூலம் அரும்பிய இந்நூல் பல அறிஞர்களின் கலை மலர்களுக்கு வழிகாட்டியாக, முன்னோடியாக விளங்கவேண்டுமென்பது எனது பிரார்த்தனையாகும்.
இந்நூல் வெளியீட்டுக்கு கல்விக் கழகத்தினருக்கு எனது உள்ளார்ந்த நன்றிகள் உரித்தாகுக. ஆசிரிய மாணவரும், ஆசிரிய குழாத்தாரும் இந்நூலால் பயனெய்துவர் என்பது எனது வேணவா.
ப.சந்திரசேகரம்