Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : ஆத்திசூடி
Author Name (எழுதியவர் பெயர்) : ந.மு.வேங்கடசாமி நாட்டார் நாவலர் மு.வேங்கடசாமி நாட்டார்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 36
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 60.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

நூல்
1. அறஞ்செய்ய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண்ணெழுத் திகழேல்
8. ஏற்ப திகழ்ச்சி
9. ஐயமிட்டுண்
10. ஒப்புர வொழுகு
11. ஓதுவ தொழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அஃகஞ் சுருக்கேல்
14. கண்டொன்று சொல்லேல்
15. ஙப்போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட வுரை
18. இடம்பட வீடெடேல்
19. இணக்கமறிந் திணங்கு
20. தந்தைதாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர்செய்
23. மன்றுபறித் துண்ணேல்
24. இயல்பலா தனசெயேல்
25. அரவ மாட்டேல்
26. இலவம்பஞ்சிற் றுயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகலா தனசெயேல்
29. இளமையிற் கல்
30. அறனை மறவேல்
31. அனந்த லாடேல்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப் படவாழ்
35. கீழ்மை யகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்ப தொழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல் 
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட் டொழி
43. சக்கர நெறிநில்
44. சான்றோ ரினத்திரு
45. சித்திரம் பேசேல்
46. சீர்மை மறவேல்
47. சுளிக்கச் சொல்லேல்
48. சூது விரும்பேல்
49. செய்வன திருந்தச் செய்
50. சேரிட மறிந்து சேர்
51. சையெனத் திரியேல்
52. சொற்சோர்வு படேல்
53. சோம்பித் திரியேல் 
54. தக்கோ னெனத்திரி
55. தானமது விரும்பு
56. திருமாலுக் கடிமைசெய்
57. தீவினை யகற்று
58. துன்பத்திற் கிடங்கொடேல்
59. தூக்கி வினைசெய்
60. தெய்வ மிகழேல்
61. தேசத்தோ டொத்துவாழ்
62. தையல்சொற் கேளேல்
63. தொன்மை மறவேல்
64. தோற்பன தொடரேல்
65. நன்மை கடைப்பிடி
66. நாடொப் பனசெய்
67. நிலையிற் பிரியேல்
68. நீர்விளை யாடேல்
69. நுண்மை நுகரேல்
70. நூற்பல கல்
71. நெற்பயிர் விளை
72. நேர்பட வொழுகு
73. நைவினை நணுகேல்
74. நொய்ய வுரையேல்
75. நோய்க்கிடங் கொடேல்
76. பழிப்பன பகரேல்
77. பாம்பொடு பழகேல்
78. பிழைபடச் சொல்லேல்
79. பீடு பெறநில்
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்
81. பூமி திருத்தியுண்
82. பெரியாரைத் துணைக்கொள்
83. பேதைமை யகற்று
84. பையலோ டிணங்கேல்
85. பொருடனைப் போற்றிவாழ்
86. போர்த்தொழில் புரியேல்
87. மனந்தடு மாறேல்
88. மாற்றானுக் கிடங்கொடேல்
89. மிகைபடச் சொல்லேல்
90. மீதூண் விரும்பேல்
91. முனைமுகத்து நில்லேல்
92. மூர்க்கரோ டிணங்கேல்
93. மெல்லினல்லாள் தோள்சேர்
94. மேன்மக்கள் சொற்கேள்
95. மைவிழியார் மனையகல் 
96. மொழிவ தறமொழி
97. மோகத்தை முனி
98. வல்லமை பேசேல்
99. வாதுமுற் கூறேல்
100. வித்தை விரும்பு
101. வீடு பெறநில்
102. உத்தம னாயிரு
103. ஊருடன் கூடிவாழ்
104. வெட்டெனப் பேசேல்
105. வேண்டி வினைசெயேல்
106. வைகறைத் துயிலெழு
107. ஒன்னாரைத் தேறேல்
108. ஓரஞ் சொல்லேல்

 

Full Description (முழுவிபரம்):

ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த 'ஒளவையார்'  à®Žà®©à¯à®©à¯à®®à¯ மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்தனையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுகள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அதியமான்  à®Žà®©à¯à®©à¯à®®à¯ வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்கால உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சங்ககாலத்து ஒளவையாரும் வேறு; கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும். 
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவையென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்ககுக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையாரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடியிலும், கொன்றைவேந்தனிலும் சிறுசிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. 
இளம்பருவத்தினர் எளிதாய்ப் பாடஞ் செய்து நினைவில் வைத்துக்கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக, இவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மிகச் சிறிய சொற்றொடர்களாலும், கொன்றை வேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும், ஆக்கப் பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்னும் கருத்துப் பற்றியேயாகும். மிக்க இளம் பருவத்தினராயிருக்கும் பொழுதே, பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதிய வைக்க வேண்டுமென்னும் பெருங் கருணையுடனும், பேரறிவுடனும் 'அறஞ்செய விரும்பு' என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடியின் மாண்பு அளவிடற் பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண்மக்களுள் ஒருவரென்னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது.
ஆத்திசூடி உரைப்பதிப்புகள் வேறு பல இருப்பினும், இப்பதிப்பு மூலபாடம் தனியே சேர்க்கப்பெற்றும், பதவுரையும் பொழிப்புரையும் திருத்தமாக எழுதப்பெற்றும் சிறந்து விளங்குவது காணலாம். 
இங்ஙணம்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்