Book Type (புத்தக வகை) : புவியியல்
Title (தலைப்பு) : பூகோளக் காலநிலை மாற்றம்: பிரச்சிகைகளும் எதிர்காலப் போக்குகளும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2016-08-02-145
ISBN : 978-955-685-044-4
EPABNo : EPAB/02/18808
Author Name (எழுதியவர் பெயர்) : எஸ்.அன்ரனி நோர்பேட்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 190
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 460.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

(1)     à®ªà¯‚கோளத்தின் சூழலை விளங்கிக் கொள்ளல்     01
(2)     à®ªà¯‚கோளக் காலநிலை மாற்றம்: ஓர் அறிமுகம்    10
(3)     à®ªà¯à®µà®¿à®¯à®¿à®©à¯ கடந்த காலக் காலநிலை மாற்றங்கள்    22
(4)     à®µà®³à®¿à®®à®£à¯à®Ÿà®²à®¤à¯à®¤à®¿à®©à¯ பச்சைவீட்டு வாயுக்களும் தாக்கங்களும்    39
(5)     à®µà®³à®¿à®®à®£à¯à®Ÿà®²à®¤à¯à®¤à®¿à®²à¯ காபனீரொட்சைட் அதிகரிப்பும் காலநிலை மாற்றங்களும்    61
(6)  பூகோளம் வெப்பமடைதலும் கடல்மட்ட மாற்றங்களும்    71
(7)     à®ªà¯‚கோளக் காலநிலை மாற்றமும் தொலைநுணர்வும்     86
(8)     à®Žà®²à¯à®¨à®¿à®©à¯‹ நிகழ்வுகள்: காலநிலை மாற்றமும் அதன் சமூகத் தாக்கங்களும்    107
(9)    à®ªà¯‚கோளக் காலநிலை மாற்றமும் சுதேசிய மக்களும்    146
(10) காலநிலை மாற்றம் பற்றிய சர்வதேச மாநாடுகள்     159
    à®†à®¯à¯à®µà¯à®¤à¯à®¤à¯à®£à¯ˆà®•à®³à¯                    187

 

Full Description (முழுவிபரம்):

நூலாசிரியர் உரை

பூகோளக் காலநிலை மாற்றம் என்பது பூகோளரீதியாக ஒரு பிரதான பிரச்சினையாக இன்று மாறி வருவதுடன் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் அதனால் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியும் வருகின்றனர். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் பல்வேறு மகாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பல வருடங்களாக முயற்சி செய்து வருகின்றது. எனவே காலநிலை மாற்றத்தின் சிக்கலான விடயங்கள் பற்றியும் பாதிப்புக்கள், எல்நினோ மற்றும் சர்வதேச மகாநாடுகள் பற்றியும் மிக விரிவாக இந்நூலில் ஆராயப்படுகின்றது.
    à®µà®¿à®žà¯à®žà®¾à®© தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட பொருத்தமான கருவிகளும், தொழில்நுட்பமும், சான்றுகளும் பூகோளம் பற்றிய எமது விளங்கிக் கொள்ளலை மேலும் அதிகரித்துள்ளது. புவியியல் பாடத்தினைப் பரீட்சை நோக்கிலன்றி, அதனை ஆழமாகப் பல்வேறு உதாரணங்கள் மற்றும் விளக்கப் படங்களுடன் மாணவர்கள் விளங்கிக் கொள்ளும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குத் தரமான நூல்களின் பற்றாக்குறை முக்கியமானதொரு குறைபாடாகக் காணப்படுகின்றது. இலங்கையின் பாடசாலை முறைமையைப் பொறுத்தவரை வகுப்பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப்படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினூடாகப் புவியியலைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இன்றைய கல்விமுறையின் புதிய நோக்கங்களுக்கமைய மாணவர்கள் சுய கற்போராக விருத்தி பெற வேண்டும் என்னும் குறிக்கோள் ஓர் உயர்தரமான கல்வியின் நோக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைக் காணலாம்.
    புவியியலின் பாட ஏற்பாடு சார்ந்த பல விஞ்ஞான ரீதியான புதிய துறைகளில் துணைப் பாட நூல்களின் பற்றாக்குறையானது புவியியல் மாணவர்களினால் இன்று நன்கு உணரப்பட்டுள்ளது.  à®…த்துடன் பல்கலைக்கழகங்களில் புவியியலைக் கற்ற பட்டதரி ஆசிரியர்களும் புவியியல் துறையில் விருத்தி பெற்று வரும் புதிய அறிவுத்தொகுதியை தமிழ் வழியினூடாகப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஓர் அவசியத் தேவையையும் கொண்டுள்ளனர். இப்பின்புலத்திலேயே புவியியலின் ஒரு பகுதியாகக் காணப்படும் காலநிலை விஞ்ஞானத்தின் முக்கியமான சில அம்சங்களை விரிவாக இந்நூலில் எழுதியுள்ளோம். பூகோளக் காலநிலை மாற்றத்தின் பல்பரிமாண அம்சங்களைப் பலரும் விளங்கிக் கொள்வதற்கான ஒரு தேவையை இந்நூல் ஓரளவாவது நிறைவு செய்யும் எனக் கருதுகின்றோம். புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் உயர்தர மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஏனையோரின்  à®•à®²à¯à®µà®¿à®¤à¯ தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 'பூகோளக் காலநிலை மாற்றம்: பிரச்சினைகளும் எதிர்காலப் போக்குகளும்'  à®Žà®©à¯à®©à¯à®®à¯ தலைப்பில் இந்நூலை எழுத முற்பட்டோம்.  à®…வர்கள் தொடர்ந்தும் தமது ஆதரவை எமக்கு நல்குவார்கள் என்பது எமது நம்பிக்கை.
    à®‡à®¨à¯à®¨à¯‚லை அழகிய முறையில் அச்சேற்றி உதவிய சேமமடு பதிப்பக உரிமையாளர் சதபூ.பத்மசீலன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். 

எஸ். அன்ரனி நோர்பேட்
சிரேஷ்ட பேராசிரியர்
புவியியல் துறை
கொழும்புப் பல்கலைக்கழகம்
கொழும்பு - 03