Book Type (புத்தக வகை) : நூலகவியல்
Title (தலைப்பு) : கருத்தூண் சிறப்புமலர் 2005-2015
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2016-04-01-141
ISBN : 978-955-685-039-0
EPABNo : EPAB/2/19299
Author Name (எழுதியவர் பெயர்) : நூலகவிழிப்புணர்வு நிறுவகம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 25 cm 17.6 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 358
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 1000.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

அறிமுகம்
அறிவு மூலவளமாகி, அனைத்து மூல வளங்களையும் இயக்கும் உந்துசக்தியாகத் தொழிற்படும் இன்றைய தகவல் தொழினுட்ப யுகத்தில், மனித சமூகமானது,  à®¤à®©à®¤à¯ தேடல்களைப் பல முனைகளிலிருந்தும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சமூக முன்னேற்றம் என்பது அச்சூழலில் அமைந்துள்ள  à®¤à¯‡à®Ÿà®²à¯à®•à¯à®•à®¾à®© வாய்ப்புகளையும் வசதிகளையும்; பயன்படுத்தும் நிலையிலேயே சாத்தியப்படும். இத்தகைய பயன்பாடு; என்பது சுயசிந்தனையின்பாற்பட்டது. சுயசிந்தனைக்குக் களமாக இருப்பது பரந்துபட்ட வாசிப்பே ஆகும்;. 
எழுத்தறிவு மட்டம் மிக உயர்நிலையிலுள்ள எமது சமூகத்தில் வாசிப்புத்திறன் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. கல்வியானது,  à®µà®°à¯à®®à®¾à®©à®¤à¯à®¤à¯à®•à¯à®•à¯à®°à®¿à®¯ முதலீடாகக் கருதப்படும் இன்றைய சூழலில், கல்வி நிறுவனங்கள் கடுகதியில் சான்றிதழ்களை உற்பத்தி செய்து வழங்கிக் கொண்டிருக்கின்றன. கல்வியானது அறிவைப் பெருக்குவது என்ற நிலை மாறி, கல்வியும் அறிவும் சமாந்தரமாகிவிட்ட சமூக  à®¯à®¤à®¾à®°à¯à®¤à¯à®¤à®®à¯  à®šà®¿à®¨à¯à®¤à®¿à®•à¯à®• வைத்ததன் விளைவே இந்த நூலக விழிப்புணர்வு நிறுவகமாகும்.
உலகின் முன்னணி நாடுகளுக்கு இணையான அளவு எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு வீதத்தைக் கொண்டது இலங்கைத் தமிழ்ச் சமூகம். பொதுவாக கல்வியை தொழிலுக்குரிய மூலதனமாகப் பார்க்கும் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய வாழ்க்கையின் பொதுப் பண்பாக அடையாளப்படுத்தப்படுவது,  'கசடு அறக் கற்க' விரும்பாத அசாதாரண சூழலும், கல்வியைத் தனியே பரீட்சைக்காக மட்டும் 'அவசர அவசர'மாகக் கற்று அதிலிருந்து மீண்டெழுந்தாற் போதுமென்ற மனநிலையில் அதைத் தேடி ஓடும் மாணவ சமூகமும் ஆகும்;. இச்சூழலைப் புறந்தள்ளி விட்டுக் கற்றலோடு கூடிய அறிவுத் தேடலை நம் இளஞ் சமூகம் பெற வழிகாட்ட வேண்டியதும், கூடவே வாசிப்புப் பழக்கத்தையும் தகவல் தேடலையும் பாடசாலையினருக்குப் பழக்கப்படுத்த வேண்டியதும் நூலகத் துறை சார்ந்த மூத்தவர்களது தலையாய கடமையாகும். இது இன்றைய காலத்தின் தேவை. அத்துடன் பல காரணங்களால் நொந்து நலிந்துபோயிருக்கும் எம் சமூகத்தின் இன்றியமையாத தேவையும் ஆகும். இத்தகைய தேவையை அடிநாதமாகக் கொண்டு தனது ஒவ்வொரு செயற்பாட்டிலும் நூலகம் பற்றிய விழிப்புணர்வை சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் தட்டியெழுப்புவதனை நோக்கமாகக் கொண்டு பல செயற்திட்டங்களை மேற்கொண்டவாறு நூலக விழிப்புணர்வு நிறுவகமானது தனது 10வது ஆண்டில் காலடி வைத்திருக்கின்றது. 
நூலகங்கள், தகவல் நிறுவனங்கள், ஆவணவாக்க நிலையங்கள் போன்றவற்றைச் சமூகப் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய அறிவு ஆற்றல், அனுபவம் என்பவற்றை வளர்த்தெடுக்கக்கூடிய தகவல் மையங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே நூலக விழிப்புணர்வு நிறுவகம். இவ்வுச்சப் பயன்பாட்டினை எய்துவதற்கு, ஒருமுகப்படுத்தப்பட்ட, ஒன்றிணைந்த, செயலூக்க அணியாகச் செயற்பட விரும்புகின்ற அனைவரையும் இணைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதம நூலகர் ஸ்ரீ அருளானந்தம் அவர்களால் 2005ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் இந் நிறுவகம் தோற்றுவிக்கப்பட்டது. நிறுவகத்திற்கு ஸ்ரீ அருளானந்தம் அவர்களைத் தலைவராகவும், திரு.க.சௌந்தராஜன், திரு.ச.தனபாலசிங்கம் ஆகியோரை இணைச் செயலாளராகவும் திரு.மு.சின்னராசா அவர்களைப் பொருளாளராகவும் திரு.à®®.வின்சன் குணாளன் அவர்களை உபதலைவராகவும் மேலும் பத்து நிர்வாக உறுப்பினர்களையும் கொண்ட நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டிருந்தது.  à®¨à®¿à®±à¯ˆà®µà¯‡à®±à¯à®±à¯à®•à¯ குழுவிற்கு மேலாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வாசிப்பு மேம்பாட்டுக் குழு, வள அபிவிருத்திக் குழு, நூலக ஒழுங்கமைப்புக் குழு, ஆளணி அபிவிருத்திக் குழு, வெளியீட்டுக் குழு ஆகிய செயலணிகளைக் கொண்ட இந்நிறுவகம் அகலத் திறக்கும் தகவற் சேவைகளின் நுழைவாயில்களை மூடிவிடாமல் பலதரப்பட்ட செயற்திட்டங்களின் வழியாக அவற்றைச் சமூகமயப்படுத்தி வந்திருக்கிறது. 
தொலை நோக்கு
அறிவின் எல்லையைத் தாண்டிய சுயசிந்தனைக்கும் தேடலுக்கும் ஆதார சுருதியாக அமையக்கூடிய வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கும் விருத்தி செய்வதற்கும் தேவையான அனைத்து வளங்களையும் ஒன்றிணைப்பதனூடாக உயிர்ப்புடைய 'மனித' சமூகத்தைத் தோற்றுவிக்க  à®’ன்றிணைதல்;.
இலக்குகள்
·    à®šà®®à¯‚கப் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய அறிவு, ஆற்றல், அனுபவம் என்பனவற்றை வளர்த்தெடுக்கக்கூடிய தகவல் மையங்களை உருவாக்குதலும், சுய கற்கை நிலையங்களாகத் தொழிற்படுவதன் மூலம் அவற்றைச் சுயசிந்தனைக் களமாக மாற்றுவதற்கு வகை செய்த

Full Description (முழுவிபரம்):

முப்பரிமாணமா? அதுவும் நூலகமா? அதெப்படி? கேள்விகள் துளைக்க காட்சியகத்துள் நுழைந்த எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.  
1982ல் யாழ். தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய காலத்தில் இது பற்றிக் கேள்விப்படவில்லை. 
சுவிஸ் நொவாற்றிஸ் ழேஎயசவளை பன்னாட்டு நிறுவனத்தில் 25 வருடங்களாக கணணி விஞ்ஞானியாகப் பணிபுரிந்த காலத்தில் பலநாடுகளைச் சுற்றி வந்தபோதும் இந்தமுப்பரிமாண நூலகம் எனக்குத் தன்னைக் காட்டித் தரவில்லை.
சுவிசில் எப்பிக்ஸ் (நுPஐஊளு) நுனரஉயவழையெட Pசழதநஉவ in ஊழஅpரவநச ளுஉநைnஉந என்ற கணணிக்கல்லூரியை 1987ல் நிறுவி சுமார் 7 வருடங்களாக எம்மவர்களுக்கு கணனி அறிவை ஊட்டிய காலத்திலும் நான் முப்பரிமாண நூலகம் பற்றிய அறிவிலியாக இருந்துள்ளேன்.
சுவிஸ் பாசல் பிறைபிளாட்ஸ் அக்சியோன் குசநipடயவணயமவழைn எனும் உதவி நிறுவனத்தில் 24 வருடங்களாக உழ-pசநளனைநவெ சக-தலைவராக இயங்கி சேவை செய்தபோதும் நான் முப்பரிமாண நூலகம் பற்றிய அறிவு அற்றவனாகவே இருந்துள்ளேன்.
ஜரோப்பாவில் முதன் முதலாக செய்மதி ஊடாக தமிழ் வானொலி மற்றும் தமிழ்த் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடாத்திய நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவனாக இருந்தகாலத்திலும் நான் முப்பரிமாண நூலகம் பற்றிய அறிவு இல்லாதவனாகவே இருந்துள்ளேன்.
பண்டைக் கால பாரம்பரியப் பொருட்கள் அவற்றின் பரிணாமவளர்ச்சிப் படிகள் அதன் நவீனவடிவங்கள் அவற்றிற்கான விளக்கங்கள் அனைத்தும் முறையாக எழுத்து மூலமும் படவிளக்கங்கள் மூலமும் பொருட்களாகவும் ஒரே இpடத்தில் காட்சிப்படுத்தி எம்மை அதிரவைத்துவிட்டார்கள்.
அட நம்ம யாழ்ப்பாணத்தில் இப்படியொரு முயற்சியாளர்களா? வியந்துபோய் தவித்துவிட்டேன்.
இவர்களால் மட்டும் தனித்து இப்படியொரு பிரமாண்டபத்தை எப்படி உருவாக்கி இயங்கவைக்க முடிகிறது?
ஒரேமாதிரியான பல சிறிய பலகைத் துண்டுகள் ஓரிடத்தில்; என்னைக் கவர்ந்தன. அவற்றில் சிறிய நிறவேறுபாடுகள் தெரிந்ததும் தொட்டுத் தூக்கிப் பார்த்தபோது ஒவ்வொன்றிற்கும் வௌ;வேறு நிறைகள் தெரிந்தது. திருப்பிப் பார்த்தபோது அந்தப் பலகைத் துண்டு எந்தமரத்தினுடையது எனஎழுதியிருந்தது என்னைப் பிரமிக்கவைத்தது. 
பண்டைய உலோக நாணயங்கள் தொடக்கம் அச்சிட்ட பணத் தாள்கள் வரை அந்தத் துறைசார் மக்களுக்கு அளவில்லா மகிழ்ச்சிதரும் விதத்தில்; காட்சிப்படுத்தி முப்பரிமாணத்தில் ;விளக்கம் அளிக்கப் பட்டவிதம் அபாரம்.
நான் படிக்கப் பயன்படுத்திய கைவிளக்கு என்னை 60 வருடங்கள் பின்நோக்கி அழைத்தபோதும் இப்போது தடவும் கையடக்க கணணியும் அதன் பிறப்பும் காணக்கிடைத்தது.
உலகில் உள்ள அனைத்து விடயங்களையும் தெரியப்படுத்தி விடவேண்டும் என்ற அவர்களின் முயற்சி பாராட்டுக்கு உரியது என்று சாதாரணமாகக் கூறிவிடமுடியாது.
நாவிழந்து என்னைநான் இழந்து இந்த முப்பரிமாண நூலகக் கண்காட்சியைப் பார்த்தேன். அன்றைய அவர்களது பார்வையாளர் குறிப்பேட்டில் நான் எழுதியதை மீண்டும் எழுதிட விரும்புகின்றேன்.
எழுதுங்களேன்!
முப்பரிமாணமா? அதுவும் நூலகமா? அதெப்படி?
நா. உருத்திரமூர்த்தி 
அடம்பன் சுயதேவைப் பூர்த்திமாதிரிப் பண்ணை.
வருகைதருவிரிவுரையாளர்யாழ் பல்கலைக்கழகம்