Book Type (புத்தக வகை) : குழந்தை இலக்கியம்
Title (தலைப்பு) : சின்னச் சிட்டுக்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-07-03-010
ISBN : 978-955-0367-09-2
Author Name (எழுதியவர் பெயர்) : அகளங்கன்
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 29 cm 21 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 20
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 160.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

சிட்டுக் குருவி
சிட்டுக் குருவியே
சிட்டுக் குருவியே
கிட்ட இங்கே வாராய் 
சிறகை தொட்டுப் 
பார்க்க போறேன் 
சீக்கிரம் வாராய்.

பட்டுத் துணிப்போல 
பள பளக்கிறாய்
பக்கத்திலே வாராய்;
பறந்து செல்லச்
சிறகடிக்கிறாய்
பக்கத்திலே வாராய் 

எனக்கு சிறகு 
முளைத்து விட்டால் 
நானும் வருவேன் 
இனிக்கும் இந்த 
உலகைச் சுற்றி
இன்பம் அடைவேன் 

Full Description (முழுவிபரம்):

நாய்க்குட்டி 
சம்பளம் இல்லாக் 
காவல்க் காரன்
எங்கள் நாய்க்குட்டி
சாப்பாடு போட்டால் 
போதும் காவல் 
காத்திடுவானே.
கல்வன் வந்தால் 
குரைத்துக் குரைத்துக்
கலைத்து விடுவான். 
காலை நக்கி 
அன்பு காட்டி 
வாலை ஆட்டிடுவான்.