Book Type (புத்தக வகை) : சமய நூல்
Title (தலைப்பு) : ஜோதியும் சுடரும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-02-02-006
ISBN : 978-955-1857-05-9
EPABNo : EPAB/2/19262
Author Name (எழுதியவர் பெயர்) : க.ஐயம்பிள்ளை
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 152
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 200.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இது ஒரு மொழிபெயர்ப்பு நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

 1. சீரார் பெருந்துறை நம் தேவன்
 2. புறம் புறந் திரிந்த செல்வமே
 3. மாசிலாத் தொண்டனும் வாதவூரடிகளும்
 4. ஒன்றும் நீயல்லை அன்றியொன்றில்லை
 5. பஞ்சப்புலனின் வஞ்சனை யறுப்பான்!
 6. ஜோதியும் சுடரும்
 7. பக்தனை வாங்கிய பரமனா?  à®ªà®°à®®à®©à¯ˆ வாங்கிய பக்தனா? யார் சதுரர்.
 8. உள்ளும் புறத்தும் உளன்;
 9. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா”
 10. உள்ளுறை பகைவர்.
 11. அழுதால் பெறலாம்
 12. நன்றே செய்வாய், பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே
 13. நினைப்பற நினைந்தேன்
 14. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ்சக்தி
 15. பக்தி வலையிற் படுவோன்
Full Description (முழுவிபரம்):

நல்ல எழுத்தாளனுடைய எண்ணக்கருக்களைச் சுமந்து சென்று வாசகனுடைய சிந்தனையிலே தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஆற்றல் அவரால் எடுத்தாளப்படுகின்ற சொற்களுக்குள்ளன் அவனுடைய ஏவலுக்குக் காத்திருப்பனபோன்று அவன் எழுதத்-தொடங்கும்போது பேனாவழியாக காகிதத்தில் சொற்கள் தவழ்-கின்றன் குறுநடை போடுகின்றன் நடமாடுகின்றன் நல்ல வேகமாக ஓடவுஞ் செய்கின்றன. 
காலத்துக்கேற்ப, சொல்லவரும் கருத்துக்கேற்பச் சொற்கள் கீழ்ப்படிந்து செயலாற்றுகின்றன. அவன் சொல்லவந்த கருத்து, ஆற்றலும் அழகுணர்வும் கொண்ட சொற்றொடர்களாக விளங்கி வாசகனுடைய சிந்தைக்கு விருந்து படைக்கின்றன. சொல்-வாகனத்திலே கருத்தைப் பயணிக்க வைத்து அடையுமிடத்தில் உரிய வரவேற்பையும் மனப்பாங்கிலே நன்மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய வலிமை சிறந்த எழுத்தாளனது தேர்ந்தெடுத்த சொற்களுக்குண்டு.
ஆரம்பத்தில் பேரறிஞர் அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி, ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோரது அடுக்கு மொழியினால் கவரப்பட்டும், அதன்பின்னர் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள், டாக்டர் மு.வ, திரு.வி.க, திரு.கி.வா.ஜகந்நாதன், சென்னைப் பல்கலைக்கழக துணை-வேந்தராகவிருந்து இளைப்பாறிய உயர்திரு. நெ.து. சுந்தரவடிவேல் பேராசிரியர் கல்கி போன்றோரது எழுத்து நடையிலே மகிழ்வு கண்டவன் நான். 
ஓரிரு சிறுகதைகள், சில இலக்கிய, சமய கட்டுரைகள், வானொலி மெல்லிசைப் பாடல்கள் சில எழுதியதோடு இரண்டு கவியரங்குகளிற் கலந்திருக்கின்றேன். இவை தவிர மிகுதியாக எதையுஞ் செய்யவும் இல்லை. செய்ய வேண்டுமென்ற எண்ணமும் என்னுள்ளத்தில் எழுந்ததில்லை. பலருக்கும் பயன்-படக்கூடிய வகையில் நல்ல கருத்துக்களை எடுத்து, சுவையாக விளக்கும் ஆற்றல் என்னிடத்தில் இல்லை என்ற திடமான எண்ணம் என்னுள் ஆழவேர் விட்டிருந்தது. 
இதனை நன்குணர்ந்த எனது மூத்த மகளும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக விவசாயபீட சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி அன்பரசி கஜமுகன் அவர்கள் சமயம், இலக்கியம் தொடர்-பாக நல்லவிடயங்களை நான் எழுத வேண்டுமென அடிக்கடி தென்பூட்டி உற்சாகப்படுத்தியமையால் மெல்ல மெல்ல எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு கட்டுரையும் எழுதி முடிந்ததும் திருப்பி வாசிக்கும்போது 'சப்'பென்று இருக்கும். திருப்தியே வரவில்லை. 
எனது நண்பர்கள் சிலர் இவற்றைப்படித்துப் பாராட்-டியதாலும் தமிழறிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்கள் படித்துப் பார்த்துத் தேவையான திருத்தங்களை மேற்கொண்டதோடு மொழி நடையை இலகுபடுத்துமாறும் ஆலோசனை வழங்கி நூலாக்கஞ் செய்யுமாறு தூண்டினார். இவர்கள் தந்த உற்சாகத்தில் 15 கட்டு-ரைகளை எழுதிமுடித்த பின் புத்தகமாக வெளியிடும் எண்ணத்தில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த பெரிய சுவாமி ஆத்மகணானந்த சுவாமியவர்களிடம் கட்டுரைகளைக் காட்டி ஆசியுரை வேண்டி நின்றேன்; சுவாமிகள் அருள்கூர்ந்து அவற்றை வாசித்துப் பார்த்து வாழ்த்துரை வழங்கியருளினார்கள். 
சுவாமிகளது வாழ்;த்துரை, நூலை வெளியிடுவதற்கான அங்கீகாரமெனவே எனது உள்ளம் ஏற்றுக்கொண்டது. ஆரம்பக்-கல்வியுடன் படிப்பை முடித்துக் கொண்ட என்னை எமது பாடசா-லைக்குப் புதிய அதிபராக வந்த யாழ். மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற குருமணி பண்டிதர் சிவலிங்கம் ஐயா அவர்கள் மீண்டும் பாடசாலையில் சேர வைத்து வகுப்புக்களையும் எமக்காக வைத்து எம்மை ஆளாக்கி வைத்தவர். அவரூட்டிய தமிழறிவும் சமய உணர்வுமே எனது உயர்கல்விக்கும் ஆன்மிகத் தேடலுக்கும் வித்தாயமைந்தவை எனலாம். இறைவனுடைய திருவருளே குருவடிவாக வருமென்று பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில், இறைவனுடைய பெயரைத்தாங்கியவரே எனக்கு குருவாக வந்து நல்லுணர்வை ஊட்டினார் என நான் நினைக்-கின்றேன். ஆகவே, எனது முதலாக்கத்தை அவர் திருவடிகளுக்குச் சமர்ப்பிப்பதில் ஆத்ம திருப்தியடைகின்றேன்.
நிறைவாக, வாழ்த்துரை வழங்கிய வணக்கத்துக்குரிய சுவாமிஜி அவர்களுக்கும் அணிந்துரை வழங்கிய இந்துகலாசார அலுவல்கள் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களுக்-கும் என்னை அறிமுகம் செய்துதவிய பெருமதிப்புக்குரிய கல்வியமைச்சின் மேலதிக செயலாளரும் சிறந்த எழுத்தாளருமான உடுவை எஸ்.தில்லை நடராசா அவர்களுக்கும் வேண்டிய திருத்தங்களைச் செய்துதவிய தமிழறிஞர், காவியமாமணி, தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கும், இம்முயற்சியில் என்னை ஈடுபடுத்திய கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி அன்பரசி கஜமுகன் அவர்களுக்கும் என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்.  
எந்தப் பதிப்பகத்தில் நூலாக்கஞ் செய்வோமெனத் தீர்மானமெடுக்க முடியாதிருந்தபோது கொழும்பு புறக்கோட்-டையிலமைந்துள்ள சேமமடு பொத்தகசாலையின் அதிபரும் உரிமையாளருமான அன்புத்தம்பி திரு.சதபூ.பத்மசீலன் அவர்கள் தாமாகவே முன்வந்து தமது பதிப்பகத்தின் மூலமாகவே நூலாக்கஞ் செய்து வெளியிடலாமெனக் கூறியதோடு சகல-விதமான உதவிகளையுஞ் செய்து நூலினைச் செப்பமுற அமைத்து அச்சிட்டுதவினார்.
அவரது காலத்தினாற் செய்த உதவி என்றும் உள்ளத்தில் பசுமையாக இருக்கும். அவருக்கும் அவரது வெளியீட்டகத்-தினருக்கும் நன்றி கூறி மகிழ்கின்றேன்.