Book Type (புத்தக வகை) : திறனாய்வு
Title (தலைப்பு) : இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-07-01-017
ISBN : 978-955-1857-16-5
EPABNo : EPAB/02/18555
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 124
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 460.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளக்கம்

  • முன்னுரை
  • நூலாசிரியர் உரை
  • பதிப்புரை
  • திறனாய்வுக் கலையின் வளர்ச்சி
  • மார்க்சியத் திறனாய்வு
  • இருப்பியத் திறனாய்வு
  • உளப்பகுப்புத் திறனாய்வு
  • தொல் வடிவத் திறனாய்வு
  • அமைப்பியலும் பின்அமைப்பியலும்
  • பெண்ணியத் திறனாய்வு
  • பின்னவீனத்துவம் 
  • சூழலியல் திறனாய்வு
  • கதை உரைப்பியல்
  • எழுநடையியல்
  • குறியியல்
  • பின் காலனியத் திறனாய்வு
  • புதிய வரலாற்றியலும் பண்பாட்டுப் பொருண்மிய வாதமும்
  • தாராண்மை மானிடவாதம்
  • பெண்பால் இணைவு மற்றும் மகிழ்விலகல் திறனாய்வு
  • உரையாசிரியரும் திறனாய்வும்
  • மரபுவழி இந்தியத் திறனாய்வு
  • திறனாய்வும் மத்தியதர வகுப்பினரும்
  • திறனாய்வுக் கலைச்சொற்கள்
  • உசாத்துணைகள்
Full Description (முழுவிபரம்):

இலக்கியத் திறனாய்வின் பன்முகப் பரிமாணங்களைக் கண்டறியும் ஆக்கமாக இந்நூல் மேலெழுந்துள்ளது. பழைமையின் இயல்புகளையும் புதுமையின் வகைப்பாடுகளையும் அறிதல் திறனாய்வின் புலக்காட்சியை வளம்படுத்திக் கொள்வதற்கும், திறனாய்வு அறிகையை வலுப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புத் தருகின்றது. 
'திறனாய்வு எங்கும் தலை நீட்டுகின்றது' (ஊசவைiஉளைஅ ளை நுஎநசல றூநசந) என்ற கருத்து அது பற்றி அறியும் தேவையை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. இத்துறையின் இற்றைப்படுத்தலை முன்னெடுக்கும் நூலாக்கத்தின் தேவையை நண்பர் தெ.மதுசூதனன் அவர்களும் சேமமடு பதிப்பகத்தின் இயக்குநர் பூ.பத்மசீலன் அவர்களும் குறித்துரைத்தனர். அவர்களின் விருப்பம் இந்நூலாக வரைவு பெற்றுள்ளது. 
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இந்நூலை எழுதுவதற்குத் தொடர்ந்து உற்சாகம் தந்தனர். சிறப்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்து முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்களும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்து முதுநிலை விரிவுரையாளர் திரு.கே.இரகுபரன் அவர்களும் உற்சாகத்துக்கு விசை தொடுத்தனர். இவர்கள் அனைவரும் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். 

சபா.ஜெயராசா
நாம் தமிழ்ப் பதிப்புத்துறைக்குள்  à®•à¯à®±à¯à®•à®¿à®¯ காலத்துள் நுழைந்து இன்றைய கல்வித் தேவைக்கருதி மிகவும் பயனுள்ள நூல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளோம். இந்த ரீதியில் எமது பதிப்பாக்க முயற்சிகளுக்கு ஆரம்பம் முதல் ஆலோசனைகள், அறிவுரைகள் தந்து, தமது காத்திரமான நூல்களை வெளியிடவும் தொடர்ந்து சந்தர்ப்பம் வழங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 
இதுவரை பேராசிரியரது கல்வியியல் நூல்களை வெளியிட்ட நாம் 'இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்' எனும் நூலை வெளியிடுகின்றோம். இதன் மூலம்  à®ªà¯‡à®°à®¾à®šà®¿à®°à®¿à®¯à®°à®¤à¯ பிறிதொரு பரிமாணத்தை சமூகத்துக்கு புலமை மரபுக்கு கொண்டு செல்வதையிட்டு நாம் பெருமிதம் கொள்கிறோம். பேராசிரியரும் எம்மீது நம்பிக்கை கொண்டு எம்முடன் இணைந்து பணியாற்றும் அவரது விரிந்த உள்ளத்துக்கு முன் சரணடைகின்றோம். 
தமிழ்ச் சூழலில் இத்தகு நூலின் தேவையை நமக்கு பலரும் சுட்டிக்காட்டி வந்தார்கள். நாமும் பேராசிரியர் சபா.ஜெயராசா மூலம் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளோம். வழமைபோல் எமது நூலாக்கப் பணியில் இணைந்துள்ள மதுசூதனாருக்கும் நன்றி. 
தொடர்ந்து எமது நூல்களுக்கு வாசகர்களாக இருக்கும் ஆசிரிய நண்பர்களுக்கும், அதிபர் முதலானோருக்கும் என்றும் எமது நன்றிகளுடன்.

அன்புடன் 
பதிப்பாளர்