Book Type (புத்தக வகை) : உளவியல்
Title (தலைப்பு) : சீர்மிய உளவியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-11-01-025
ISBN : 978-955-1857-24-0
EPABNo : EPAB/02/18607
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 116
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 600.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • சீர்மியம் - எண்ணக்கரு விளக்கம்
  • சமூகமும் சீர்மியமும்
  • பண்பாடும் சீர்மியமும்
  • சீர்மியமும் மாயச் செயற்பாடுகளும் சடங்குகளும்
  • ஆசிரியரும் சீர்மியமும்
  • உதவும் செயல்முறையாகச் சீர்மயம்
  • மாணவருக்கு வலுவூட்டல்
  • பாடசாலைகளும் சீர்மிய மாதிரிகையும்
  • செவிமடுத்தல்
  • ஊடுதலையீட்டு நுட்பங்கள்
  • இறப்புக்களும் உறுதழுவலும்
  • நெருக்கீடும் வெளியெரிகையும் - ஆசிரியரும்
  • உளச்சோர்வு
  • மனவெழுச்சி மேம்பாட்டுக் கலைத்திட்டம்
  • பெற்றாருக்கும் குடும்பத்துக்கும் வலுவூட்டல்
  • பாடசாலை அரங்கைப் பயன்படுத்துதல்
  • சீர்மிய நடவடிக்கையாக ஓவியம்
  • நேர்த்தெறிப்புக்குழு
  • உசாவிய நூல்கள்
Full Description (முழுவிபரம்):

பாடசாலைச் சீர்மியம் தொடர்பாக தமிழில் வெளிவரும் முதலாவது நூலாக இது அமைகின்றது. சீர்மியம் ஒரு மேலைத்தேயச் செயல்முறை என்றும் அறிமுறையென்றும் கருதப்படும் அறிகை அடிமைத்தனத்தை மாற்றியமைத்தலும் இந்நூலாக்கத்தின் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. எமது மரபு வழிச் சடங்குகளும், கூத்துக்களும், இலக்கிய வழியான எடுத்துரைப்புக்களும் உளச்சுகம் தேடும் நுண் வழிகளைப் பலநிலைகளிலும் முன்னெடுத்து வந்துள்ளன. சீர்மியத்திலே தோழர் தோழியரது வகிபாகம் சங்க இலக்கியங்களிலே பரவலாகப் பேசப்படுகின்றது. மேலும் சீர்மிய நெறியைப் பக்தி நெறியுடன் இணைக்கும் அறிகை முறைமை நாயன்மார் பாடல்களிலும், ஆழ்வார் பாசுரங்களிலும் காணப்படுகின்றன. எமது சித்தர் மரபுகளில் இடம்பெற்று வந்த உள-நலக்காப்பு நடவடிக்கைகளும், நாட்டார் மரபுகளில் இடம்பெற்று-வரும் உளச்சுகம் காணற் செயற்பாடுகளும் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளன. இவ்வாறான கருத்தெழுகைச் சூழமைவில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது. 
ஆக்கத்துக்கு வேண்டிய உசாத்துணை நூல்களைத் தந்துதவிய தேசிய கல்வி நிறுவக சமூக விஞ்ஞானத் துறைப் பணிப்பாளர் கலாநிதி உ.நவரத்தினம் மற்றும் கல்வி அமைச்சின் மதியுரையாளர் கலாநிதி கமலநாதன் அவர்களும் தொடர்ந்து எழுதுமாறு உற்சாக தரும் நண்பர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் நண்பர் தெ.மதுசூதனன் அவர்களும் சேமமடு வெளியீட்டு நிறுவனத்தினரும் நன்றிக்குரியவர்கள். 
சபா.ஜெயராசா
கோயில் முன்றல், இணுவில்