Book Type (புத்தக வகை) : பின்நவீனத்துவம்
Title (தலைப்பு) : பின்னவீனத்துவ உரையாடல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-04-01-035
ISBN : 978-955-1857-34-9
EPABNo : EPAB/02/18581
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 119
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • பின்னவீனத்துவச் சொல்லாட்சியைப் புரிந்து கொள்ளல்
  • பின்னவீனத்துவம் - தோற்றம் வளர்ச்சி மற்றும் தேக்கம்
  • பின்னவீனத்துவத்தின் வரலாறு
  • பின்னவீனத்துவ எண்ணக்கரு விளக்கம்
  • மீள் நோக்கலிற் பின்னவீனத்துவம்
  • பின்புலமாக அமையும் விசைகள்
  • தெரிதாவை விளங்கிக் கொள்ளல்
  • இபாப் ஹசனின் பின்னவீனத்துவ முன்னோடி விளக்கம்
  • கட்டடக் கலை நோக்கிற் பின்னவீனத்துவம்
  • லியோதாத் வழங்கிய பின்னவீனத்துவ நிலவரம்
  • றோலண்ட் பார்த்தின் கருத்துக்கள்
  • மிசேல் பூக்கோவின் அறிகை முறைமை
  • பூக்கோவும் பெண்ணியமும் பின்னவீனத்துவமும்
  • பின்னவீனத்துவ அழகியல்
  • பின்னவீனத்துவ ஆசிரியம்
  • கல்விச் செயல்முறைகளில் பின்னவீனத்துவத்தின் செல்வாக்கு
  • பின்னவீனத்துவமும் இறையியலும்
  • பரதநாட்டியமும் பின்னவீனத்துவமும்
  • இலக்கியவுலகின் புதிய அறிகை வடிவங்கள்
  • பின்னவீனத்துவம் மறுமதிப்பீடு
  • பின்னவீனத்துவமும் மார்க்சியமும்
  • உசாத்துணை 
Full Description (முழுவிபரம்):

பின்னவீனத்துவத்தைப் பல பரிமாணங்களினூடாக நோக்கல் இந்நூலாக்கத்திலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு தேவையை நண்பர்கள் நீர்வை பொன்னையன், தெ.மதுசூதனன், த.சிவசுப்பிரமணியம் ஆகியோர் வற்புறுத்தியதுடன், பல மூலநூல்களையும் வாசிப்பதற்குத் தந்து உற்சாகமளித்தனர். 
பின்னவீனத்துவத்தை அறிவு நேர்மையுடன் நோக்க வேண்டியுள்ளது. சுய விருப்பின் காரணமாக அதனை மிகைப்படுத்திக் கூறுதலோ அல்லது தாழ்த்தி மதிப்பீடு செய்தலோ பொருத்தமற்றது. 
பல புதிய சொற்களஞ்சியங்களைப் பின்னவீனத்துவம் உலகின் அறிவுத் தேட்டத்துக்குத் தந்துள்ளது. அவை தமிழ் மொழிக்கும் வளம் தந்துள்ளன. சமகாலக் கருத்து வினைப்பாடுகளை மேலெழச் செய்வதில் பின்னவீனத்துவத்தின் பங்கு நிதானத்துடன் நோக்குதற்குரியது. 
1960ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஐரோப்பாவின் அறிகை விசையாக மேலெழத் தொடங்கிய பின்னவீனத்துவச் சிந்தனைகள் கடந்த நூற்றாண்டின் பிற்கூற்றிலிருந்து தமிழில் வேகமாகப் பரவத் தொடங்கின. ஒவ்வொருவரும் தத்தமது அகவயப் பாங்கோடு பின்னவீனத்துவத்தை அணுகுதல் தமிழிற் பழக்கமான பாடமாகியும் விட்டது. இந்நூலை வெளியிடும் சேமமடு வெளியீட்டாளர் நன்றிக்குரியவர். 
சபா.ஜெயராசா
தலைவர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்