Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-06-04-040
ISBN : 978-955-1857-39-4
EPABNo : EPAB/02/18589
Author Name (எழுதியவர் பெயர்) : சு.சுசீந்திரராஜா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 224
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 560.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

 • முன்னுரை
 • நூலாசிரியர் உரை
 • பதிப்புரை
 • இலங்கைத் தமிழ்மொழி
 • இலங்கைத் தமிழின் ஒலி நிலையில் பழமைக் கூறுகள்
 • இலங்கைத் தமிழின் ஒலி நிலையில் புதிர்வாய்ந்த கூறுகள்
 • இலங்கைத் தமிழின் உருபன் நிலையில் பழமைக் கூறுகள்
 • இலங்கைத்தமிழ் உருபன் நிலையில் புதிர்வாய்ந்த கூறுகள்
 • இலங்கைத் தமிழில் மட்டும் வழங்கும் சொல்லும் சொற்பொருளும்
 • யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சொற்கள்
 • இலங்கைத் தமிழில் சட்டமொழி
 • இலங்கைத் தமிழும் மலையாளமும்
 • ஒலித்துணை உகரம்
 • முருங்கை சிங்களச் சொல்லா?
 • இலங்கையில் இல்லாத தமிழ்ச் சொல் வழக்கு சிங்களத்தில்
 • தமிழில் இழிவழக்கு சிங்களத்தில் ஏற்ற வழக்கு
 • எழுத்தின் பெயர்
 • தமிழ் எழுத்துக்களின் உறுப்புப் பெயர்கள் 
 • தமிழில் சின்ன ளகரம் பெரிய ளகரம் என இரண்டா?
 • ரகரத்தின் கால்
 • சொற் தூய்மை பற்றிப் பேசுதல்
 • விசித்திரமான முறைப்பெயர்கள்
 • உறவுப் பெயரமைப்பில் ஓர் உறவு
 • ஒலி ஒப்புமையால் எழுந்த நம்பிக்கைகளா?
 • பழைய சொல்லைத் துரத்தும் புதிய சொல்
 • தமிழ் உச்சரிப்பு
 • தமிழ் அகராதியின் ஆக்கமும் அமைப்பும்
 • வழக்காற்று மரபில் தமிழ்ச் சொற்களின் தகுநிலை
 • தமிழர் என்ற சொல் தரும் கவலை
 • பேரகராதியில் பேராசிரியர்
 • குடும்பி
 • ஈ-கொடு-தா
 • பேசு-பறை-கதை
 • தப்பிலி யார்? கெட்டவனா? நல்லவனா?
 • ஆனை வாழையும் பன்றிவாழையும் பச்சை நாடானும் ஒரே மரத்தின் பெயரா?
 • நண்பன் உண்டு நண்பியும் உண்டா?
 • ஓமும் ஆமும்
 • இரு மொழிகளில் ஒரே சொல் சொல்லின் பொருள் வௌ;வேறு
 • பிரச்சனை பிரச்சினை
 • தொன்று,தொண்டு ஆகியதா?
 • மினைக்கெடு
 • ஆய்த எழுத்துடன் அமைந்த அஃறிணை ஒருமைச் சுட்டுப் பெயர்கள்
 • சோதனை உண்டு சோதினை இல்லையா?
 • சொல்லின் பொருள் அன்றாட வழக்கில் இல்லாததால் நகைப்பு
 • ஒரு சொல் பதின்மூன்று சொற்கள் ஆனமை
 • தொழிற்றிறமை என்னும் சொல்லில் ஏன் இந்தப் பாடு?
 • தமிழ்ச் சொற்களின் வகை பகுப்பும் பயன்பாடும்
 • தமிழ்ச் சொல்லில் தோன்றிய திரிபு
 • சொல்லில் ஆக்கவளமற்ற திரிபு வகைகள்
 • தன்மைப் பெயர்களும் அவற்றின் பயன்பாடும்
 • முப்பெரும் பழம் பதிகள் பற்றிய ஆய்வின் தேவை
 • பேராசிரியர் பத்மநாதனின் சமயம் சார்ந்த வரலாற்று ஆய்வுகள்
 • இலங்கையில் இந்துசமயம் என்னும் நூல் பற்றிய ஆய்வுரை
Full Description (முழுவிபரம்):

நமது மொழியை  à®¨à®¾à®®à¯‡ அறிந்துகொள்ள...
பேராசிரியர் சு.சுசீந்திரராஜாவின் தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்
தொகுதி ஐ க்கான பாயிரக்குறிப்பு.
புலமைநிறை தோழமையுணர்வுடன்.

அமெரிக்க, ஐக்கிய அரசிலும், இங்கிலாந்திலும் ஆங்கிலமே பொது மொழியாகவிருப்பினும், அது இவ்விரண்டு இடங்களிலும் பேசப்பெறும், எழுதப்பெறும் முறைமை காரணமாக நாம் ஒரே மொழியால் பிரிக் கப்பட்டுள்ளவர்கள் (றுந யசந னiஎனைநன டில வாந ளயஅந டுயபெரயபந) என்று மிக ஆழமான மனத்திருப்தியுடன் கூறப்படுவது வழக்கம்.
பேராசிரியர் சுசீந்திரராஜாவின் இக்கட்டுரைத் தொகுதியை வாசிக்கும் பொழுது அத்தகைய ஓர் சிந்தனை நமது மனங்களிலே வந்து போவதை மறுதலிக்க முடியாதுள்ளது. தமிழகத்துப் பேச்சுத் தமிழுக்கும் நமது பேச்சுத் தமிழுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளன. தமிழகத்தை யும் நம்மையும் (ஈழத்தையும்) பொறுத்தவரையில் மேலதிக விசேடப் பண்பு ஒன்று உள்ளது. அதாவது, ஏறத்தாழ இரண்டாயிரம் வருடப்  à®ªà®´à¯ˆà®®à¯ˆà®¯à¯à®®à¯ தொடர்ச்சியுமுள்ள தமிழ்மொழியின் புராதன சொல் வழக்குகளும் வடிவங்களும் இலங்கையிலேயே பெரிதும் பேணப்படு கின்றன என்பதாகும். 
மொழியியலை இலக்கணத்திலிருந்து வேறுபடுத்தி நோக்குவதிலே இன்னுந்தான் ஆசிரிய மட்டங்களிலே கூட புலமைத் தெளிவு காணப் படவில்லையென்று கூறப்படுமின்றைய வேளையில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கின் இயல்புகளையும் அப்பேச்சு வழக்கில் இடம்பெறும் சொற் பயன்பாடுகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறும் இக்கட்டுரைத் தொகுதி நமது அத்தியாவசிய வாசிப்புக்குரியதாகிறது.
ஒட்டுமொத்தமான தமிழ்ச் செழுமைக்கு ஈழத்தவர்களின் பங்க ளிப்பு யாவை என்பன பற்றி ஆறுமுகநாவலர் காலம் முதலே வற்புறுத் தப்பட்டு வந்துள்ளதெனினும், இவ்விடயத்தை மொழியியல் நிலையில் ஆராயும் பண்பு, சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை யுடன் தொடங்கி, பேராசிரியர் வேலுப்பிள்ளையிடத்து வளரத்தொடங்கி,  à®ªà¯‡à®°à®¾à®šà®¿à®°à®¿à®¯à®°à¯ சுசீந்திரராஜாவிடத்து ஒரு முக்கிய நிறைவை எய்தி அவரது மாணவர்களான பேராசிரியர் நுஃமான், திருமதி சுபதினி ரமேஷ் போன்றவர்களால் மேற்கொண்டு செல்லப்படுகின்றதென்பது மகிழ்ச்சி யுடன் பதிவு செய்யப்படவேண்டிய உண்மையாகும். 
கற்றறிபுலமை (யஉயனநஅiஉ) நிலைநின்று நோக்கும்பொழுது இவ்விட யம் உள்ளார்ந்த சிக்கற்பாடுகள் பலவற்றைக் கொண்ட பொருளாகும் என்பது தெரியவரும். 
இந்திய உபகண்டத்தின் தென்கிழக்கு முனையிலுள்ள தமிழ்நாடு தக்காணக் குன்றுகளினால் ஓரளவு காவல் செய்யப்பட்டிருப்பினும் கங்கைப் பள்ளத்தாக்கில் தொடங்கும் வரலாற்று முன்னெடுப்புக்கள் தமிழகம் வரையும் வரும், வந்துள்ளன. அசோகன் முதல் ஒளரங்கசீப் வரை இந்தியப் பெருமன்னர்களின் ஆட்சித்தாக்கங்கள் தமிழகத்தை இந்திய மயப்படுத்தியுள்ளன. 
கேரளம், தமிழகம் என்ற பிரிவு நிச்சயமாவதற்கு முன்னரேயே அப்பிரதேசத்திலுள்ளோர் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களுக்கு வந்து குடியேறினரென்று கொள்வதில் வரலாற்றுத் தவறிருக்க முடியாது. இதன் காரணமாகத் தமிழகத்திலே காணப்படாத மொழிநிலைத் தொடர்ச்சி இங்கு காணப்படுகின்றதெனலாம். (தமிழகத்தைப் போன்று இலங்கை நிலையில் உருது, ஹிந்தி மொழிகளின் செல்வாக்கு இல்லை யெனலாம்). அதேவேளையில் தமிழகத்திலே ஏற்படாத, ஆனால்  à®‡à®²à®™à¯ கையின் வடகிழக்குப் பிரதேசங்களிலே பாரிய தாக்கங்களை ஏற்படுத்திய போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிகள் தமிழகத்திலே இல்லாமையினால் இலங்கைத் தமிழ் வழக்கில் இம்மொழிகளின் செல்வாக்கும் காணப்படு கிறதென்பதனையும் மறந்துவிடக்கூடாது. 
ஏறத்தாழ சோழப் பெருமன்னர் காலத்திலிருந்து கி.பி.1565 வரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் தமிழகத்தின் அரசியல், சமூக - பண்பாட்டு மொழிநிலை விடயங்களிலே பெருத்த மாறுதல்களை ஏற்படுத்த, இலங்கையிலோ வடகிழக்குப் பகுதியில் குடியேறிய தமிழர் களது வாழ்க்கையிலே பிரதேச செல்வாக்குகளுக்கு உட்பட்ட பண்பாட் டுத் தொடர்ச்சி நிலவுவதைக் காணலாம்.
இலங்கையின் தனித்துவமான, ஆனால் தமிழகத் தொடர்பறாத இந்த வரலாறு நமது மொழிப் பயன்பாட்டில் எவ்வாறு காணப்படுகின்ற தென்பதனை நண்பர் சுசீந்திரராஜாவின் கட்டுரைகள், சிறுச்சிறு அளவின தாகவிருப்பினும் நன்கு எடுத்துக்காட்டுகின்றன. 
தமிழகத்தோடு ஒப்புநோக்கும் பொழுது இலங்கையில் வாழுகின்ற தமிழர்களின் தொகை மிகக் குறைவெனினும் (இந்தியாவில் ஏறத்தாழ 6 ½ க் கோடி தமிழ் மக்கள் உள்ளனர் என்பர்; இலங்கையில் ஏறத்தாழ 15 லட்சம் மாத்திரமே உள்ளனர்) தமிழகத்திலில்லாத தமிழ் பற்றிய சில அம்சங்கள் இலங்கையில் தமிழின் ஸ்திரப்பாட்டுக்கும் நிலைபேறு டைமைக்கும் காரணமாகவுள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.
இலங்கையில் தமிழ், சிங்கள மொழிகள் மூலம் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி கற்பிக்கப்படுகின்றது. தமிழகத் திலே இடைநிலைக் கல்விக்கு மேலே பெரும்பாலும் ஆங்கிலமே பிர தான கல்வி மொழியாகவுள்ளது. இதைவிட, சட்ட நிர்வாகத் துறைகளி லும் தமிழுக்கு உறுதிப்படுத்தப்பட்ட இடம் இலங்கையில் உண்டு. 
யாழ்ப்பாணத்தின் தேசவழமைச் சட்டம் என்ற பாரம்பரிய சொத் துரிமைச் சட்டம் ஓரளவிற்குத் தொடர்ந்து வழங்கி வருவது மாத்திரமல் லாமல் வடக்குக் கிழக்குப் பகுதிகளினதும் மலையகத்தின் சில பகுதிகளி னதும் பொது நிர்வாகம் தமிழிலேயே நடைபெறுவதற்கான வசதிகளும் உள்ளன. இலங்கையின் குடித்தொகையியல் (னநஅழபசயிhல) காரணமாகத் தமிழ்ப் பிரதேசங்களிலே தமிழின் தொடர்ச்சி பேணப்படுகின்றதென லாம். பேசப்படும் விடயத்திற்கு நேரடியான இயைபற்றதெனினும் இலங்கை பற்றியதான தமிழ் நிலைப்பட்ட இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிடுதல் வேண்டும். 
தமிழகத்து முஸ்லிம்கள் தங்களைத் தமிழ் முஸ்லிம்கள் என்றே அடையாளம் காண்கின்றனரெனினும் இலங்கையிலே முஸ்லிம்கள் தங்களைத் தனியொரு இனக்குழுமமாகவே (நவாniஉ பசழரி) கொள்கின் றனர். இதனால் தமிழகத்திலில்லாததான தமிழ்பேசும் மக்கள் (வுயஅடை ளிநயமiபெ pநழிடந) எனும் அரசியல் எண்ணக்கரு இலங்கையிலேயே உள்ளது. 
ஆயினும் தமிழ்மொழிப் பயில்வு சம்பந்தமாக தமிழ், முஸ்லிம் இனங்களிடையேயும் வேறுபாடுகள் ஏற்படவில்லை. தமிழர்களும், முஸ்லிம்களும் தமிழ்மொழி மூலமேயே கல்வி பயில்கின்றனர். பேராசிரியர் சு.சுசீந்திரராஜா இக்கட்டுரைத் தொகுதியில் இலங்கைத் தமிழ் வழக்குப் பற்றிய பருப்படிமமான, அதேவேளையில் நுண்ணிய வையான குறிப்புக்களைத் தருகின்றார். 
எனினும், இவ்விடயம் பற்றிக் குறிப்பொன்றினைக் கூறுவது மிக அவசியமாகிறது. இக்கட்டுரைகளிலே பலவிடங்களிலே மொழியியல் துறைக்கேயுரிய சிறப்புப் பதங்கள் பல வருகின்றன. உ-ம்: ஒலிப்பிலா ஒலிகள் (ஏழiஉநடநளள ளுழரனௌ). அப்பதம் விளக்கப்படாத நிலையிலே மொழி யியல் பரிச்சையமற்றவர்களுக்கு அதனை விளங்கிக்கொள்வது சிரமமாக விருக்கும். ஆனால், அதற்காக இலகுவான மாற்றுப் பதங்களைப் பயன் படுத்துவதும் முடியாது. ஏனெனில் சொற்கள், வாக்கியங்கள் சிந்திப்பின் திட்டவட்டமான வெளிப்பாடுகளாகும். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு நூலினிறுதியில் மொழியியற் கலைச்சொற்களைத் தந்து அவற்றுக்கான சிறு விளக்கங்களைத் தருவது உதவியாகவிருக்கும்.
இவ்வாறு சொல்லும் பொழுது இந்நூலின் வாசிப்பு வட்டம் இலங் கைக்குள்ளேயே அடங்கிவிடுவதாகாது. தமிழகத்திலும் இவ்விடயம் எடுத்துக்கூறப்படுவது அவசியம். முன்னரெக்காலத்திலும் பார்க்க இப்பொழுது இலங்கைத் தமிழர்கள் அதிக தொகையினராக, குழுமங் குழுமங்களாக, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளிலே வாழுகின்ற நிலை மையில் இத்தகைய ஒரு நூல் தமிழக வாசகர்களுக்கும் அத்தியாவசிய மானதொன்றே ஆகும். அவ்வாறு ஒரு பதிப்பு வெளியிடப்படும் பொழுது அது அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கும் பெரிதும் உதவியாகவிருக் கும். இவ்விடயத்தினை நூலாசிரியரும் பிரசுரிப்பாளரும் கவனத்திற் கொள்ள வேண்டுகின்றேன். 
இவ்விடயம் பற்றிச் சிந்திக்கும்பொழுது ஏற்கெனவே கூறியது போன்று நேரடி இயைபில்லையெனினும் இன்னுமொரு முக்கிய விட யத்தை அழுத்திக்கூற வேண்டுவது அத்தியாவசியமாகிறது. 
சிங்கள மக்கள் பலரிடையே இலங்கைத் தமிழர்களாகிய நாம் இந் தியத் தமிழர்களின் மாற்றுப் படிமமே என்ற எண்ணமே உண்டு. நமக் கென நாம் பண்பாட்டுத் துறையிலும் மொழி நிலையிலும் பல தனித்துவ அம்சங்களைக் கொண்டவர்கள் என்பதும் அவர்கள் பலருக்குத் தெரி யாது. அத்துடன் சிங்கள, தமிழ்மொழி நிலை ஊடாட்டங்கள் பற்றியும் பெரிதும் தெரியாது.  
தமிழ், மொழியியல் ஆகிய இருதுறைகளிலும் பேராசிரியர் சுசீந்திரராஜாவுக்குள்ள ஆழமான அறிவு இக்கட்டுரைகளிலே பளிச் செனத் தெரிகின்றது. இது அவரது பயில்வுப் பின்புலத்தின் வழியாக வருவது என்றே கருதுகின்றேன். முதலில் பச்சையப்பன் கல்லூரியில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்ற இவர் அக்காலத்தில் பேராசிரியர் வரதராசனின் மாணவராக விளங்கினார். அதன் பின்னர் இலங்கைக்கு வந்து தினகரன் பத்திரிகையின் விவரணத்துறையிலே கடமையாற்றினார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று அங்கு மொழியிய லில் ஆ.யு பட்டம் பெற்றுத் தொடர்ந்து Ph.னு. செய்தார். தமது முனைவர் பட்டத்தின் பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே சிறிது காலம் கற்பித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பொழுது தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மாணவராக விளங்கினார். அதன் பின்னரே இலங்கை வந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற் சேர்ந்தார்.
அங்கும், முதலில் தமிழ்த்துறைக்கே வந்த இவர் பின்னர் மொழியி யல் துறையை ஒழுங்கமைத்து அதன் தலைவர், பேராசிரியரானார். இந்தப் பின்புலம் இவருக்குத் தமிழிலும், மொழியியலிலும் ஆழ்ந்த புலமையைத் தந்துள்ளது.
பேராசிரியர் சுசீந்திரராஜாவின் இக்கட்டுரைத் தொகுதியின் வழியாக மேற்கிளம்பும் தமிழகத் தமிழ் வழக்கு, யாழ்ப்பாணத் தமிழ் வழக்கு பற்றிய இவ்ஆய்வு, இலங்கையில் நிலவும் தமிழ்ப்பேச்சு வழக்குகளின் வளம், வேறுபாடுகள் பற்றிய ஆய்வையும் அவரே தரவேண்டுமென்ற எமது அவாவை அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்புத் தமிழ்ப்பேச்சு வழக்குகளின் வேறுபாட்டு வெளிப்பாடு களையும் அடிநிலையான ஒற்றுமைகளையும் எடுத்தாராயும் சிறப்பு மொழியியலாய்வுகள் மிக அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன. இத்துறையிலே பேராசிரியர் சுசீந்திரராஜாவின் பங்களிப்பை மேலும் எதிர்பார்க்கின்றோம். 
இந்நூலின் சிறப்பு, அது பொதுவாசகரையும் முன்நிறுத்தி அமைக் கப்பட்டுள்ளமையாகும். இவ்விடயத்தில் வெளியீட்டாளர் மிகுந்த கவனம் செலுத்துவர் என்பது எனக்குத் தெரியும். 
ஈழத்தவர்களாகிய நமது தமிழ் வழக்கை நாமே, அடிநிலையினர் முதல் அறிஞர் வரை அறிந்துகொள்வதற்கு இந்நூல் உதவுகின்றது. இவ்விடயம் பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளவை பெரும்பாலும் கற்றறி புலமையினரையே இலக்கு வாசகர்களாகக் கொண்டிருந்தன வெனலாம். 
இது போன்ற ஒரு நூல் சிங்களத்திலே கொண்டுவரப்படுமெனில் அது இலங்கைத் தமிழர்களாகிய நம்மைப் பற்றி சிங்கள மக்களிடையே மேலும் ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்துமென்று கருதுகின்றேன்.
தமிழகத்திலும் இலங்கையிலும் இத்தகைய நூல்கள் இயன்றள வுக்குப் பொது நூல்நிலையங்களிலும் பாடசாலை நூல்நிலையங்களிலும் இடம்பெறுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வது சம்பந்தப்பட்ட கல்வித்துறை உயர்அதிகாரிகளின் கடமையாகும். 
இலங்கைத் தமிழ் நிலையில் குறிப்பாக யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் வரும் ஒலிகள் பற்றிய குறிப்புக்கள் மிக முக்கியமானவை என்று கருதுகின்றேன். குறிப்பாக இன்று யாழ்ப்பாணத் தமிழ் உச்சரிப்பிலேயே அதிகம் காணப்படும்     ஒலி பற்றியது. உ-ம்: யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் அரி, அலை, கலை என்பவை உச்சரிக்கப்படும் முறைமையாகும். 
à®…,    à®‡à®¨à¯à®¤ ஒலி வேறுபாட்டைக் காட்டுவதற்கு சிங்களத்தில்                           à®‰à®£à¯à®Ÿà¯. தமிழில் அதற்கான குறியீடு இல்லை. தமிழின் மொழிநிலை செல்வாக்கு சிங்களத்திற் காணப்படுகின்றளவுக்கு சிங்களத்தின் மொழி நிலைச் செல்வாக்கு தமிழிலே பெரிதும்  à®•à®¾à®£à®ªà¯à®ªà®Ÿà®µà®¿à®²à¯à®²à¯ˆ யென்பது உண்மையே.
நண்பர் சுசீந்திரராஜாவின் அடுத்த கட்டுரைத் தொகுதியை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

அன்புடன்
கார்த்திகேசு சிவத்தம்பி
தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்