Book Type (புத்தக வகை) : தொகுப்பு
Title (தலைப்பு) : சர்வதேச தாபனங்களும் ஒப்பந்தங்களும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-08-02-046
ISBN : 978-955-1857-45-5
EPABNo : EPAB/02/18847
Author Name (எழுதியவர் பெயர்) : ஏ.சி.ஜோர்ச்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 124
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 260.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • GATT  à®…மைப்பும் சர்வதேச ஒப்பந்தங்களும்
  • இலங்கை - பாகிஸ்தான் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
  • இந்தியா - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
  • தென்னாசிய முன்னுரிமை வர்த்தக உடன்பாடும் தென்னாசிய சுதந்திர வர்த்தக உடன்பாடும்
  • பொதுநலவாய சுதந்திர நாடுகள் ( CIS )
  • ஆபிரிக்க ஐக்கியத்திற்கான அமைப்பு ( OAU )
  • குழு -8 ( G-8 )
  • பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்திக்கான தாபனம் ( OECD )
  • குழு 77 ( G-77 
  • ஐரோப்பிய சமூகம் ( EU )
  • அணிசேரா இயக்கம் ( NAM )
  • சர்வதேச இஸ்லாமிய  à®®à®¨à®¾à®Ÿà¯à®Ÿà¯ நாடுகள் 
  • தென்கிழக்காசிய ஒப்பந்த அமைப்பு ( SEATO )
  • வட அமெரிக்க சுதந்திர ஒப்பந்தம் ( NAFTA )
  • குவாம் குழு ( G.C )
  • மத்திய ஐரோப்பிய சுதந்திர வர்த்தக உடன்பாடு ( CEFTA )
  • குழு -11 ( G-11 )
  • பிம்ஸ்டெக் நாடுகளின் அமைப்பு ( BC )
  • இந்து சமுத்திர கரையோர நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு
  • போவா போரம் ( BF )
  • மத்திய ஆசிய கூட்டுறவு அமைப்பு ( OCAC )
  • யூரேறிசியன் பொருளாதார சமூகம் ( EAEC )
  • ஆபிரிக்க ஒன்றியம் ( AU )
  • சார்க் அமைப்பு (SAARC )
  • தெற்கு பொதுச் சந்தை ( MERCOSUR )
  • குழு -20 ( G.20 )
  • விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை
  • ரியோ குழு ( Ria Group )
  • சிறிய நாடுகளின் கூட்டமைப்பு ( AOSIS )
  • சங்காய் கூட்டுறவு அமைப்பு ( SCO )
  • ஆசியான் அமைப்பு ( ASEAN )
  • ஆசிய - பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மநாடு ( APEC )
  • தென் ஆபிரிக்க அபிவிருத்தி சமூகம் ( SADC )
  • ஒபெக் அமைப்பு ( OPEC )
  • பொது நலவாயம் ( CC )
  • நேட்டோ ( NATO
  • கொழும்புத் திட்டம் ( COLOMBO PLAN )
  • G5 நாடுகளின் அமைப்பு
Full Description (முழுவிபரம்):

சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவும் அதனை தீர்த்துக்கொள்ளுவதற்கும் நாடுகளிற்கிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. இதற்காக உலகில் பல்வேறு வகைப்பட்ட சர்வதேச தாபனங்கள், சர்வதேச உடன்படிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 
ஐக்கிய நாடுகள் தாபனமும் அதனுடன் இணைந்த நிறுவனங் களும் மேற்படி பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கு வெளியேயும் உலகப் பிரச்சினைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கான சர்வதேச தாபனங்களும் சர்வதேச ஒப்பந்தங்களும் காணப்படுகின்றன. இந்நூ  à®²à®¾à®©à®¤à¯ அத்தகைய தாபனங்கள் ஒப்பந்தங்கள் பற்றி சுருக்கமான தகவல்களை முன்வைக்கின்றது.
இத்தாபனங்களின் தோற்றம் அவற்றின் ஒழுங்கமைப்பு, அங்கத்துவ நாடுகள் பற்றிய விபரங்கள் இந்நூலில் முன்வைக்கப்படுகின்றது. 
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரும், தற்போதைய உலகமய மாதல் பின்னணியிலும் பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பல்வேறு சர்வதேச தாபனங்களும், ஒப்பந்தங்களும் தோன்றியுள்ளன. அது மட்டுமல்ல இன்னும் பலதரப்பட்ட ஒப்பந்தங் களும், தாபனங்களும் தோன்றிக்கொண்டு இருப்பதுடன் தோன்றி யுள்ள தாபனங்களின் உறுப்புரிமைகளும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றன. இவை பற்றிய ஒரு தகவல்களை ஒரே பார்வையில் பெற்றுக்கொள்ளவும், ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுப் பரீட்சை கள், போட்டிப் பரீட்சைகளில் தோற்றுவோர்களும் அவர்களின் நன்மை கருதியும் இந்நூல் வெளிவருகின்றது. குறிப்பாக யுஃடு உயர்தரத்தில் பயிலும் பல்கலைக்கழக பொருளியல் மாணவ ஆசிரியர் களுக்கும் இந்நூலில் உள்ள தகவல்கள் பயன் தரும். 
இந்நூலிலுள்ள தகவல்களை வாசித்து அறிந்துகொள்வதற்கு முன்னர் அதில் அடங்கியுள்ள விடயங்களைப் பற்றிய சுருக்கமான முகவுரையொன்றினை இங்கு குறிப்பிடுவதன் மூலம் நூலின் தகவல் களை சுலபமாக உசாவ முடியும்.
உலகமயமாதல் பின்னணியும் 2ம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னரான சர்வதேச நிலைமைகள், நாடுகள் ஒன்றில் ஒன்று தங்கி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளன. மேலும் குறித்த ஒரு பிரதேச எல்லைகளுக்குள் வாழும் மக்கள் தமது எல்லைகளுக்குள் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தித் தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடிவதில்லை. அத்துடன் வளங்களின் உச்சப் பயன் பாட்டினையும் அடைந்துகொள்ள முடிவதில்லை. இத்தகையவொரு நிலையில் மேற்படி எண்ணங்களை பூர்த்தியாக்கும் வகையில் சர்வதேச ஒப்பந்தங்களும் அதன் வழியாக சர்வதேச தாபனங்களும் தோன்று கின்றன என்பதினை வாசகர் மனதிலிருத்திக்கொள்ள வேண்டும். 
ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியில் இத்தகைய பல்வேறு அமைப்புக்கள் தோன்றியுள்ளன. அத்தகைய தாபனங்கள் படிமுறை அமைப்பில் ஒரு உறுதியான சர்வதேச அமைப்புகளாக உருமாற்றம் பெறுகின்றன. ஒரே நாளில் இவ்வாறான தாபன வடிவங்கள் தோற்றம் பெற்று விடுவதில்லை என்பதினை வாசகர் கவனத்தில்கொள்ள வேண்டும்.
உலகில் எல்லா நாடுகளுக்கும் உரியதாக உள்ள அமைப்புக் களை அனைத்துலக அமைப்புக்கள் என வரையறை செய்யலாம். அதற்கான சாசனம் (ஊhயசவநச) சர்வதேச ஒப்பந்தங்களாகவும் கொள்ள லாம். உதாரணத்திற்கு வர்த்தகம் சார்ந்து உலக நாடுகள் சில தமக்கி டையில் முன்னுரிமை அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தினை அல்லது உடன்படிக்கையினை செய்யலாம். (Pசநகநசநவெழைn வுசயனந யுபசநநஅநவெ) இவ்வுடன்படிக்கையினை மேலும் மேம்படுத்தி அதனை விரிவுபடுத்தி கட்டற்ற வர்த்தக அமைப்பாக மாற்றலாம். (குசநந வுசயனந யுபசநநஅநவெ) கட்டற்ற வர்த்தக அமைப்பினை சுங்கக் கூட்டுகளாக மாற்றலாம். (ஊரளவழஅள ருnழைn) சுங்கக் கூட்டுக்களை மேலும் மேம்படுத்தி ஒரே பிராந்திய அமைப்பாக (ருnழைn) மாற்றலாம். இவ்வாறான படிமுறை களின் ஊடாக உலகில் பல்வேறு விதமான சர்வதேச தாபனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் மேலே கூறிய வடிவிலேயே எல்லா சர்வதேச தாபனங்களும் தோற்றம் பெற்றுள்ளன என்பதும் இல்லை. ஒரு பொதுவான கட்டமைப்பு இல்லை. ஒரு பொதுவான கட்டமைப்பு மேற்படி படிநிலைகளினூடாக முகிழ்ந்து வந்திருப்பதினை வாசகர் கள் புரிந்து கொள்ளும் இடத்தில் சர்வதேச தாபனங்களின் வகை களை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
பெரும்பாலும் உலகின் குறிக்கப்பட்ட பூகோள பிராந்தியத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ள தாபனங்கள் பிராந்திய சர்வதேச அமைப்புக் கள் எனக் குறிப்பிடலாம். 
இப்பிராந்திய சர்வதேச அமைப்புக்களை மேலும் இருவகையாக வகைப்படுத்தலாம்.
- பிராந்திய சர்வதேச பொருளாதார தாபனங்கள்
- பிராந்திய சர்வதேச பாதுகாப்பு தாபனங்கள்
இவற்றுக்கப்பால் குறித்த சில நாடுகள் ஒன்றிணைந்து தாபித்  à®¤à®µà¯ˆ. எனினும், விஷேட புவியியல் பிராந்தியத்திற்கு வரையறுக்கப் பட்ட (உ10ம் சார்க்) சர்வதேச தாபனங்களும் காணப்படுகின்றன. மேலும் தனி ஒருநாட்டின் நெறிப்படுத்தலில் தாபிக்கப்பட்டு சர்வதேச தொடர்புகளுடன் இயங்கும் தாபனங்களும் காணப்படுகின்றன. இவை தனிநாட்டுத் தாபனங்கள் எனப்படும். உதாரணமாக அபிவிருத்திக் கான நோர்வேயின் உதவித் திட்டம் மேலும் நாடொன்றின் நெறிப் படுத்தல் இன்றி உருவாக்கப்பட்ட சர்வதேச தொடர்புடைய தாபனங் களும் காணப்படுகின்றன. அவற்றை அரசு சார்பற்ற தாபனங்கள் என அழைக்கலாம். உதாரணமாக ஐஊசுஊ இத்தகைய நிறுவனங்கள் பற்றி இந்நூலில் ஆராயப்படவில்லை. சிறிய நாடுகள் சில சேர்ந்து தம்மைப் பாதுகாக்கவும் தமது இருப்பினை வெளிப்படுத்தவும் சில அமைப்புக் களை தோற்றுவித்துள்ளன. இந்நூலில் அத்தகைய தாபனங்கள் அது குறித்த ஒப்பந்தங்கள், சாசனங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட் டுள்ளது.
உலகில் காணப்படும் இத்தகைய அமைப்புக்கள் பற்றி வாசகர்க ளுக்கு அல்லது பயனாளிகளுக்கு தகவல் தருவதே எனது நோக்கமாகும். 
ஏ.சி.ஜோர்ஜ்