Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : தாய்மொழிக் கல்வியும் கற்பிக்கும் கலையும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-09-01-047
ISBN : 978-955-1857-46-2
EPABNo : EPAB/02/18849
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 140
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • மொழியின் கோலங்கள்
  • மெய்யியல் நோக்கில் மொழி
  • கல்விக் கோட்பாட்டு நிலைகளில் தாய்மொழி
  • மொழித்திரட்டல் முயற்சிகள்
  • தாய்மொழியின் தனித்துவம்
  • உளமொழியியல்
  • கல்வியும் சமூக மொழியியலும்
  • மொழி கற்பித்தலும் சீர்மிய நுட்பங்களும்
  • மொழிக்கலைகளும் கற்பித்தல் அணுகுமுறைகளும்
  • வாய்மொழி அணுகுமுறையும் சந்தர்ப்பநிலை மொழி கற்பித்தலும்
  • தொடர்பாடல் நிலைப்பட்ட மொழி கற்பித்தல்
  • கற்பித்தலில் ஒலி மொழி முறை
  • கருத்தேற்றக் கற்பித்தல்
  • மொழிக் கற்பித்தலில் இயற்கை அணுகுமுறை
  • மொழியும் முழுநிலை உடற் கூற்றுத் துலங்கலும்
  • வாசிப்பும் கற்றலும்
  • எழுத்துக் கற்பித்தல்
  • கட்டுரை கற்பித்தல்
  • கவிதையும் கற்பித்தலும்
  • தமிழ் இலக்கிய வரலாறு கற்பித்தல்
  • மொழிவளமும் மொழி பெயர்ப்பும் 
Full Description (முழுவிபரம்):

கோளமயமாக்கலின் எதிர்விளைவுகள் தாய்மொழிகள் மீதான சந்தேகங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. கல்வியியல் நோக்கில் தாய்மொழியின் விசைப்பாடுகளை அறியத் தவறிவிடுமளவுக்கு கோளமயமாக்கல் எதிர்விசையின் அழுத்தங்கள் எழுகை கொண்டுள் ளன. இந்நிலையில் தாய்மொழி பற்றிய தெளிவான புலக்காட்சியைத் தருக்க நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் வெளிப்படுத்துமாறு நண்பர் கள் நீர்வைப் பொன்னையன், தம்பு சிவசுப்பிரமணியம், தெ.மதுசூதனன், உலகநாதர் நவரத்தினம் ஆகியோர்  à®µà¯‡à®£à¯à®Ÿà®¿à®•à¯à®•à¯Šà®£à¯à®Ÿà®©à®°à¯. 
தாய்மொழி வழிக்கல்வி என்பது உலக மொழிகளையோ, பிராந் திய மொழிகளையோ கற்றுக்கொள்வதற்குத் தடையான செயற்பாடு அன்று என்பதனை முதற்கண் நினைவு கொள்ளல் வேண்டும். உலகின் பெரும்பாலான மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பரிச்சியமுடையவர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர். 
மனித மூளையின் ஆற்றல்களை ஆராய்ந்து வரும் நவீன உளவி யலாளர்கள் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடிய திறனும், கொள்ளக்கூடிய ஆற்றலும் அதற்கு உண்டு என்பதை வலியுறுத்தியுள் ளனர். நவீன கற்பித்தல் முறையியல்களைப் பயன்படுத்தி மொழிக ளைக் கற்பிக்கும் செயற்பாடுகள் வளர்ச்சியடையும் பொழுது பாட சாலைகள் 'மொழித் தொழிற்சாலைகளாக' மேலெழுகை கொள் ளும். நிதானமாக நோக்கும்பொழுது, தாய்மொழியின் நிராகரிப்பு கல்வியின் நிராகரிப்பு ஆகின்றது. 
நூலாசிரியர்