Book Type (புத்தக வகை) : கவிதை
Title (தலைப்பு) : சாடிகள் கேட்கும் விருட்சங்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-04-01-073
ISBN : 978-955-1857-72-1
EPABNo : EPAB/2/00000
Author Name (எழுதியவர் பெயர்) : முகிலன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 124
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 290.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

    நெடுந்தீவு புலவர்கோன்
    இளவாலை செவாலியர்    
    சொல்லின் செல்வன்
    புலவர் மணி
    செந்தமிழ் தென்றல் 
    முப்பணி வேந்தன்
    கவியரசர்
    தமிழ்க்கங்கை
    பாவேந்தர்
    மதுரகவி
    கலாபூஷணம்
    கௌரவ கலாநிதி
    தமிழ்ச்சுரங்கம்
    அறிஞர் திலகம்
    ஈழத்துக் கம்பன்
    தமிழ்க்கடல்
    மரபுக்கவி இமயம்
    சொல்லரசன் - எனும் 
    பட்டங்களைப் பெற்ற...
    அமரர்
    அமுது ஐயாவுக்கு
    இது 
    எனது படையல் 

 

 

உணர்வுகளின் வலிகளும் வசந்தங்களும் கவிதைகளாக மலரும். ஈழத்தமிழ் வரலாற்றில் உணர்வுகளில் வலிகளை சுமந்த இளைஞர்களே அதிகம். அவை சொந்த சுமைகளின் வரிகள் அல்ல சமூகத்தின் இருப்பில் முனைப்புற்று நின்ற வாழ்வின் வலிகள். அது நெடுந்தீவு முகிலனையும் விட்டுவைக்கவில்லை. 

வறுமை தீயில்
எரியும்
சின்னப் பூக்களின்
வரலாறு
வருங்கால
அகராதியில்
எழுதப்படாமல் 
போகப்போகிறது
       à®Žà®©à¯à®±à¯ சொல்வதிலும்
திரும்பவும் 
இந்த தேசம் என்றால்
வேண்டாம் எனக்கு
மறுபிறவி
       à®Žà®©à¯à®ªà®¤à®¿à®²à¯à®®à¯ சமூகத்தின் காயத்தின் வலிகளை உணரும் ஒரு கவிஞன் தெரிகிறான். சொல்வதினூடாக சொல்லாதவற்றையும் உணர வைக்கும் கவிதை வரிகளுக்காக நெடுந்தீவு முகிலனுக்கு பாராட்டுக்கள். à®®à®°à®ªà®¾à®°à¯à®¨à¯à®¤ சிந்தனைகளில் இருந்து விலகி மனிதம் தேடும் இந்தக் கவிஞன் பெண்ணின் படிமத்தை மட்டும் மரபார்ந்து சித்திரிப்பது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது. 
Full Description (முழுவிபரம்):

சில நாட்களின் முன்னர் கனடாவில் வாழும் எனது ஊரவரும் நண்பருமான மோகன் இலங்கையில் இருந்து என்னைத் தொலைபேசியில் அழைத்துக் கவிஞர் முகிலனை அறிமுகம் செய்து வைத்தார்.
நான் சிலகாலமே அனுபவித்த நெடுந்தீவின் காவிய வாழ்வை முழுமழியாக வாழக் கொடுத்து வைத்தவர். அவர் சில வருடங்கள் நான் படித்த நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் படித்திருக்கிறார். நானும் என்னுடைய தோழர்களும் தோழியர்களும் ஆடியும் பாடியும் கூடியும் திரிந்த வீதிகளிலும் புல்வெளிகளிலும் கடற்கரைகளிலும் தனது தோழ தோழியருடன் என்னைவிட அதிக காலம் செளித்திருக்கிறார். நான் படிக்க விரும்பி வாய்க்காதுபோன ஊடகத்துறை பயில்கிறார். 
போரின் மத்தியிலும் வாழ்வு முகிலனுக்கு என்னைவிட அதிக வாய்ப்புக்களைக் கொடுத்திருக்கிறது. 
எனக்கு கவிதை தந்த மண்ணில் நிரந்தரமாக வாழும் முகிலன் மீது எனக்கு ஒருவகையில் பொறாமை ஏற்படுகிறது. அது ஏனென்று கேட்டால் நான் என்ன சொல்லக்கூடும்?
எனது தீவகத்துக்கு முதன் முதலில் வந்தபோது எனக்கு பாலப் பருவம் முடியவில்லை. எனது தந்தையார் நெடுந்தீவு என் தாயாரின் தந்தையாரும் நெடுந்தீவு, என் தாய்வழிப் பாட்டிக்கு தாய் நெடுந்தீவு தந்தையார் உடுவில், உடுவில் எனக்கு குருவிக்கூடுபோல. அப்பதான் சிறகுவிரித்த பறவைக் குஞ்சைப்போல சின்னஞ்சிறு வயதில் நான் நெடுந்தீவுக்கு வந்து சேர்ந்தேன். முதற்காதலின் காவிய வாழ்வு எனக்கு அங்குதான் வாய்த்தது. அங்கு என்னை அரவணைத்த நீலக் கடலும் நீல வானமும் வரட்சிக்கு அடங்காது பசும்கொடி தூக்கும் மண்ணும் ஒன்றில் காதலில் சா அல்லது மோதலில் சா என்று (எங்கள் ஊரில் இதை கொஞ்சம் கொச்சையாகச் சொல்வார்கள்) வாழும் எனது மக்களும் சேர்ந்துதான் எனது இளைய நெஞ்சில் கவிதையையும் கிளர்ச்சியையும் விதைத்தார்கள். அதீத அன்பும் அதீத காதலும் அதீத கோபமும் அதீத கிளர்ச்சியும் அதீத ஆளுமையும் மிக்க எனது தீவின் ஆண்களதும் பெண்களதும் அரவணைப்பில் கழிந்த  à®Žà®©à¯ பாலப் பருவம்தான் என்னுள் எல்லாமானது. என்னுடைய எழுத்துக்களின் உயிர்ப்பான போர்க்குணம் அந்த தீவின் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுடனான சினேகிதத்தின் கொடையாகத்தான் எனக்குக் கிட்டியது. பின்னர் மீண்டும் செங்கால் நாரைபோல சிறகு விரிக்க நேர்ந்து விட்டாலும் அதற்குள் எனது தீவின் அதீத காதலையும் கிளர்ச்சியையும் பணியாமையையும் நான் வரித்துக் கொண்டுவிட்டேன். 
முகிலனது தொகுப்பில் இருந்து இரண்டு கவிதைகள் மட்டுமே எனக்கு வாசிக்கக் கிடைத்தது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக இருந்தாலே போதும் அல்லவா. எனக்குக் கிடைத்த இரண்டு கவிதைகளுமே வாழ்வு அதன் உயிர்போடும் கிளர்ச்சியோடும் சோகத்தோடும் நிகழ்கிற கவிதைகள். முதல் கவிதையில் இரண்;டாவது பந்தி எனக்கு  à®®à¯à®•à®¿à®²à®©à¯ˆ வாழம் கவிஞனாக அறிமுகம் செய்து வைத்துவிட்டுத்தான் ஓய்ந்தது. அந்த கவிதை வரிகள் இப்படி நிகழ்கிறது.
'இடம் பெயர்ந்த பறவைகளின்
ஈரக்கனவுகள்.....
வறுமையின் வெப்பத்திற்கு 
ஆவியாகிவிட்டன
இருட்டுக்கு பழகிய கறையான்
வெளிச்சத்தை......
இரை என்று
அரித்துக்கொண்டிருக்கிறது.
.....................
சிலர் அழுக்கு சமூகம் என 
வாய்கூசாமல் பேசுகிறார்கள்
முதலில் - அவர்களை
சலவை செய்யவேண்டும்'
நான் வாசித்த முகிலனது இரண்டாவது கவிதை இப்படி அதிர்ச்சி தரும் வகையில் இன்றைய யதார்த்தத்தைப் பதிவு செய்கிறது. 
'ஒரு குருட்டுக் குருவி
இரை என.....
கொத்துகிறது
தன் குஞ்சின்
இரைபையை 
போரும் புலப்பெயர்வும் இடுக்கண்களும் என்று சூறாவளியில் அடிப்பட்ட இலவம்பஞ்சாக நம்வாழ்வு சிதறாமல் இருந்திருந்தால் நான் எப்பவோ முகிலனையும் அவரது கவிதைகளையும் அறிந்திருப்பேன். 
அது உண்மையில் என்னுடைய துரதிர்ஸ்டம்தான். கிழக்கே அறுகம்குடாவில் இருந்து வடக்கே நெடுந்தீவு வரைக்கும் கோவில்களும் மசூதிகளும் தேவாலயங்களுமாக விரிகிற என் தாய்மண் தமிழ் முஸ்லிம் கவிஞர்களதும் கலைஞர்களதும் பூமியாகும். இளைய தலைமுறை கவிஞர் கவிதாயினிகளிடம் இருந்தும் வீரர் வீராங்கனைகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ளாத கவிஞர்கள் காவியங்களை கண்டடைவதில்லை என்பதை நான் அறிவேன். அந்தப் பாக்கியத்தைப் பெற நான் மீண்டும் என் தாய் மண்ணுக்கும் என் தீவுக்கும் வருவேன். சோலைக்கிழி, அனார், பாகீமாஜெகான் கருணாகரனில் இருந்து தீபச்செல்வன் தேஜஸ்வனி முகிலன் வரைக்குமான நான் அறிந்த கவிஞர்களையும் இன்னும் நான் அறியாத இளைய கவிஞர் கவிதாயினிகளையும் சந்தித்துக் கலந்துரையாடுகிற பாக்கியம் விரைவில்  à®Žà®©à®•à¯à®•à¯à®•à¯ கிடைக்கும் என இன்றும் நம்புகிறேன்.
ஈழத்தில் ஜாதி பேதங்கள் ஒழிந்த முதல் ஊராக எனது தீவு மாறவேண்டும் என்று நான் சின்ன வயதுகளில் கண்ட கனவை நனவாக்கக்கூடிய கவிஞன்
முகிலனின் தலைமுறையை வாழ்த்துகிறது பாக்கியமாகும்.

ஆசியுடன்
கவிஞர் - வ.ஜ.ச.ஜெயபாலன்
லண்டன்