Book Type (புத்தக வகை) : சமூகவியல்
Title (தலைப்பு) : அபிவிருத்தியின் சமூகவியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-05-03-076
ISBN : 978-955-1857-75-2
EPABNo : EPAB/02/18811
Author Name (எழுதியவர் பெயர்) : க.சண்முகலிங்கம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 132
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • அபிவிருத்தியின் சமூகவியல்
  • இலங்கைப் பொருளியலில் இரட்டைத்துவம்
  • குறைவிருத்தியின் விருத்தி அந்தரே குந்தர் பிராங்கின் சார்புக் கோட்பாடு ஓர் அறிமுகம்
  • உலக முதலாளித்துவ அமைப்பின் சமத்துவமற்றவிருத்தி - சமிர் அமீன் கோட்பாடு பற்றிய ஓர் அறிமுகம்
  • முதலாளித்துவ உலகமுறைமை - இம்மானுவல் வலர்ஸ்ரீன் கோட்பாடு
  • குடியான் சமூகமும் பொருளியலிலும்
  • குறைவிருத்தியின் விருத்தி - வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரம் பற்றிய சார்புக் கோட்பாடு நோக்கிலான சில குறிப்புக்கள்
  • பால் நிலையும் அபிவிருத்தியும் 
Full Description (முழுவிபரம்):

பொருளியல் என்னும் கல்வித்துறையில் இருந்து கிளைத்த கல்வித்துறையாக 'அபிவிருத்திக் கல்வி' (னுநஎநடழிஅநவெ ளுவரனநைள) என்னும் துறை விளங்குகிறது. இது ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலவரலாற்றை உடையது; பொருளியல், புவியியல், சமூகவியல், அரசியல் ஆகிய துறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 'அபிவிருத்தியின் சமூகவியல்' அபிவிருத்தி பற்றிய பொருளியல் கோட்பாடுகளின் சமூகவியல் அம்சங்களிற்கு அழுத்தம் தரும் வகையில் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலின் தலைப்பு தமிழிற்குப் புதியது. முதலாவது கட்டுரை அபிவிருத்தி சிந்தனையின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைப்பது. அபிவிருத்திச் சிந்தனையை பின்வரும் மூன்று முக்கிய செல்நெறிகளாக அல்லது நோக்கு முறைகளாக இக்கட்டுரை பிரித்துக் காட்டி விளக்கம் தருகிறது. 
1. நவீனமாதல் கோட்பாடு
2. லத்தீன் அமெரிக்க அமைப்பியல் வாதம்
3. சார்புக் கோட்பாடு
நூலில் எல்லாமாக எட்டுக் கட்டுரைகள் உள்ளன. நூலின்  à®‡à®±à¯à®¤à®¿ இருகட்டுரைகள் அபிவிருத்தியின் மாற்றுச் சிந்தனைகளை விளக்குவன, மேற்குறித்த மூன்று வகைச் செல்நெறிகளில் இருந்து வேறுபட்ட சிந்தனைகளைக் கூறுவன. 
கட்டுரைகள் கோட்பாட்டு ஆய்வுகளாக அமைகின்றன. அபிவிருத்திச் சிந்தனை தொடர்பான கோட்பாடுகள், முக்கிய எண்ணக்கருக்கள் விளக்கப்பட்டுள்ளன. 
நவீனமாதல் கோட்பாடு
மரபுச் சமூகம் ஒன்று அபிவிருத்திப் பாதையில் செல்வதைக் குறிக்கும் பொதுச் சொல்தான் நவீனமாதல் (ஆழனநசnளையவழைn). பொருளாதார, சமூக நிறுவனங்களும், மக்களின் சிந்தனை, வாழ்க்கை முறை விழுமியங்கள் என்பனவும் மரபு வழியில் இருந்து நவீனமுறைகளைத் தழுவும்போது அபிவிருத்தி ஏற்படுகிறது என இக்கோட்பாட்டினர் கூறுவர். கைத்தொழில் புரட்சியின் விளைவால் முன்னேற்றம் அடைந்த மேற்கு நாடுகளின் தொடர்பினால் இந்த நவீனமாதல் உலகின் பிறபகுதிகளுக்கும் பரவுகிறது என்று இவர்கள் கருதுவர். ஏகாதிபத்தியம், காலனித்துவம் என்பவற்றின் நேர்முறை யான தாக்கங்களையும் அவற்றால் கிடைத்த நன்மைகளையும் இக்கோட்பாட்டினர் எடுத்துக்காட்டினர். பின்னடைவுக்கான காரணங்கள் நாடுகளுக்கு உள்ளேயே உள்ளன் மரபுவழி நிறுவனங் கள், மதிப்பீடுகளும், சிந்தனை முறைகளும் முன்னேற்றத்திற்கான தடைகள் என்றும் இத்தடைகளை நீக்குவதுதான் அபிவிருத்தி என்றும் கூறினர். நூலின் முதலாவது கட்டுரை நவீனமாதல் கோட்பாட்டை அறிமுகம் செய்கிறது. அத்தோடு அதனை 1. லத்தின் அமெரிக்க அமைப்பியல் வாதம் 2. சார்புக் கோட்பாடு என்பனவற்றோடு ஒப்பீடு செய்தும் விளக்கம் தருகிறது.
நூலின் இரண்டாவது கட்டுரை இரட்டைப் பொருளியல் என்னும் எண்ணக்கருவை அறிமுகம் செய்வதாயும் இலங்கையின் பொருளாதார வரலாற்றையும் மாற்றங்களையும் இரட்டை பொருளியல் நோக்கு முறையில் விளக்கும் நூல் ஒன்றின் அறிமுகமாகவும் உள்ளது. இரட்டைப் பொருளியல் என்றும் கருத்து நவீனமாதல் கோட்பாட்டின் ஒருவகையே என்பதையும் இக்கட்டுரை விளக்குகிறது. இடதுசாரி மார்க்சிய சிந்தனையாளர் பின்னடைந்த நாடுகளின் தேக்க நிலைக்கும் வளர்ச்சிக் குறைவுக்கும் ஏகாதிபத்தி யமும் காலனித்துவமும் இந்நாடுகளைச் சுரண்டுவதும் கொள்ளை யிடுவதும் தான் காரணம் என்று கூறினர். ஏகாதிபத்திய நாடுகளுக்கு சார்பான முறையில் செயற்படும் சுதேசிய முதலாளிகளும் நிலப்பிர புக்கள் போன்ற பிற சுரண்டல் வர்க்கங்களும் ஏகாதிபத்தியச் சார்புடையனவாய் இருக்கும் நிலைமைகள் தொடர உதவுகின்றனர் என்றும் இவர்கள் கூறுவர். இரட்டை பொருளியல் என்னும் மாதிரி யைப் பயன்படுத்தி பின்னடைந்த நாடுகளின் வளர்ச்சிக்குறைவை போல் பறன் என்னும் மார்க்சிஸ்ட் சிந்தனையாளர் விளக்கியி ருப்பதை இரண்டாவது கட்டுரையின் இறுதிப் பகுதி எடுத்துக் கூறுகிறது.
நூலின் 3ஆவது கட்டுரை 'குறைவிருத்தியின் விருத்தி' அந்தரே குந்தர் பிராங்கின் சார்புக்கோட்பாடு பற்றிய ஓர் அறிமுகம் என்னும் தலைப்பில் உள்ளது. இது முதலாவது கட்டுரையின் தொடர்ச்சியாக அமைவது. நவீனமாதல் கோட்பாட்டிற்கு எதிராகத் தோன்றய லத்தின் அமெரிக்க அமைப்பியல்வாதம் முன்வைத்த கருத்துக்களும், அமைப்பியல் வாதத்தில் இருந்து கிளைவிடும் சார்புக் கோட்பாடு பற்றியும் முதலாவது கட்டுரையில் விளக்கப்பட்டன. நூலின் 3ஆவது கட்டுரை சார்புக் கோட்பாட்டின் மூலவரான அந்தரே குந்தர் பிராங்கின் கருத்துக்கள் பற்றிய விரிவான விளக்கமாகும். இந்நூலின் 6ஆவது கட்டுரை இலங்கையில் முதலாளித்துவ வளர்ச்சி எவ்வாறு பிராந்திய ரீதியில் சமனற்ற வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது. வடக்குக் கிழக்கு ஒரு சார்பு மண்டலமாக மாற்றப்பட்டதையும் விளக்குகிறது. 
சமிர் அமின்
சார்புக் கோட்பாட்டை மேலும் செழுமைப்படுத்தியவர் சமிர் அமின் ஆவர். அந்தரே குந்தர் பிராங் சார்பு மண்டலத்தின் குறை விருத்திக்கு தடையாக அமையும் காரணங்களை மைய நாடுகளோடு கொள்ளும் வர்த்தகப் பரிவர்த்தனை உறவுகளின் சமத்துவமின்மை மூலம் எடுத்துக்காட்டினார். சமிர் அமின் சார்பு மண்டல நாடுகளுக்கு உள்ளே நிலவும் உற்பத்தி முறைகள் பற்றியும் ஆராய்ந்தார். ஏகாதிபத்தியம் எவ்வாறு முதலாளித்துவத்திற்கு முந்திய சமூக உருவாக்கங்களை பேணிப் பாதுகாக்கின்றது. அவற்றை அழித்துத் துடைக்காமல் தன் சுரண்டல் தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது என்று கூறினார். முதலாளித்துவ முறையுடன் பல்வேறு உற்பத்தி முறைகள் அருகருகே இருப்பதையும் சமிர் அமின் எடுத்துக்காட்டி னார். 4 ஆவது கட்டுரை சமிர் அமின் கோட்பாட்டை விளக்கிக்கூறும் முறையில் உள்ளது.
உலக முறைமை
உலகமுறைமை கோட்பாட்டை (வுhந றழசடன ளலளவநஅ'ள வாநழசல) இம்மானுவல் வலர்ஸ்ரீன் எடுத்துக் கூறினார். உலக முதலாளித்துவ அடுக்கமைவு மூன்று பிரதான பிரிவுகளைக் கொண்டது அவை:
1. மைய நாடுகள்
2. அரைகுறைச் சார்பு மண்டலம்
3. சார்பு மண்டலம்
உலக முதலாளித்துவ முறைமை 1450 முதல் வளர்ச்சி பெற்றது. 1780-90 காலப்பகுதியில் கைத்தொழில் வளர்ச்சி உலக முறைமையின் வளர்ச்சியை விரைவுபடுத்தியது. உலக முறைமைக் கோட்பாட்டின்படி தனித்து ஒரு நாட்டின் வளர்ச்சியை ஆராய்வதால் பயனில்லை; உலக முறைமையின் பகுதியாக ஒரு நாட்டின் வளர்ச்சியை நோக்குதல் வேண்டும். நிலமானியம், முதலாளித்துவம், சோஷலிசம் என்றவாறு நேர்கோட்டு முறையில்  à®’ரு நாட்டின் வளர்ச்சி அமைகிறது என்று கூறுவதையும் உலக முறைமைக் கோட்பாடு ஏற்பதில்லை. சர்வதேச அரசியல் உறவுகள் பற்றிய ஆய்வு தொடர்பாகவும் உலக முறைமை கோட்பாடு சில தெளிவான விளக்கங்களைத் தருகின்றது. இன்று உலகம் அரசியல் அடிப்படையில் தனித்தனி அரசுகளாகக் கூறுபடுத்தப்பட்டுள்ளது; ஆனால் முன்பு உலகம் பொருளாதார ரீதியில் கூறுபட்டிருந்தது. அரசியல் ரீதியில் பேரரசுகள் (நுஅpசைநள) ஒன்றுபட்ட முறைமையை நிறுவ முற்பட்டன என்று வலர்ஸ்ரீன் கூறும் விளக்கம் வெஸ்ட்பாலியாவிற்குப் பிந்திய உலக அரசுகள் (Pழளவ றுநளவிhயடயைn ளுவயவநள) பற்றிய புரிதலுக்கு உதவுகின்றது. 
உற்பத்தி முறைகள் (ஆழனநள ழக Pசழனரஉவழைn)
மூன்றாம் உலக நாடுகளில் மேற்குலகில் ஏற்பட்டது போன்ற முதலாளித்துவ முறைக்கான மாற்றம் நடைபெறவில்லை. முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறைகள் (Pசந - ஊயிவையடளைவ ஆழனநள ழக Pசழனரஉவழைn) நீடித்தன. இலங்கையின் பலபகுதிகளில் விவசாய உற்பத்தியிலும் கைவினைத் தொழில்களிலும் சிற்றளவுப் பண்ட உற்பத்தி (Pநவவல ஊழஅஅழனவைல Pசழனரஉவழைn) தொடர்ந்து நிலை பெற்றுள்ளது. குடியான் சமூகம் (Pநயளயவெ ளுழஉநைவல) என்ற வரைய றைக்குள் அமையக்கூடிய சமூகங்களை பல்வேறு பிராந்தியங்க ளிலும் காணமுடியும். கலாநிதி நியுடன் குணசிங்க அவர்கள் 1978ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பத்தைமேனி என்ற இடத்தில் கள ஆய்வினை நிகழ்த்தி யாழ்ப்பாணச் சமூகத்தின் குடியான் உற்பத்தி முறை பற்றி விரிவாக எழுதினார். அவருடைய ஆய்வு முடிவுகளை யும் கருத்துக்களையும் கூறும் முறையில் எழுதப்பட்டதே 'குடியான் சமூகமும் பொருளியலும்' என்னும் கட்டுரை. கட்டுரையின் முற்பகுதியில் குடியான் சமூகம் என்றால் என்ன? ஒருமைத் தன்மையுடைய குடியான் சமூகம் என ஒன்று யதார்த்த உலகில் உள்ளதா? பல்வேறாக்கம் என்னும் செயல்முறை குடியான் சமூகத்தில் ஓரினத் தன்மையை இல்லாமல் செய்து எவ்வாறு வர்க்க பிரிவினைகளைக் கொண்டு வருகிறது போன்ற விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. 
பால்நிலையும் அபிவிருத்தியும்
அபிவிருத்திச் சிந்தனையில் பங்கேற்பு அபிவிருத்தி (Pயசவiஉipயவழசல னுநஎநடழிஅநவெ) என்னும் மாற்றுச் சிந்தனை 1980க்களின் பின்னர் இலங்கையிலும் பிற தென்ஆசிய நாடுகளிலும் பிரபல்யம் பெற்றது. பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் இச்சிந்தனைக்கு ஆதரவு கொடுத்தனர். பெண்ணிலைவாத இயக்கங்கள் ஆரம்பத்தில் 'விட்' (றுஐனு) எனப்படும் கொள்கையினை ஆதரித்தன. காலப்போக்கில் 'ஹட்' (புயுனு) என்னும் மாற்றுக் கருத்து வளர்ச்சி பெற்றது. 'பால் நிலையும் அபிவிருத்தியும்' என்ற கட்டுரை 'பால்நிலை' பற்றிய அடிப்படை எண்ணக்கருக்களை அபிவிருத்தியுடன் தொடர்புபடுத்தி விளக்குவதோடு 'விட்' 'ஹட்' வேறுபாடுகளையும் தெளிவுபடுத்துகிறது.
இந்நூலில் உள்ள கட்டுரைகள் 'கூடம்' 'ஞானம்' 'அகவிழி' 'மகாஜனன்' ஆகிய சஞ்சிகைகளில் முன்னர் பிரசுரமாகியவை அவற்றினை சிறு திருத்தங்களுடன் இந்நூலில் சேர்த்துள்ளேன். இச்சஞ்சிகைகளின் ஆசிரியர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. நூலின் 6வது கட்டுரை முன்னர் பிரசுரிக்கப்படாதது; இந்நூலிற்காக எழுதிச் சேர்க்கப்பட்டது. இந்நூலினை அச்சிட்டு வெளியிடும் சேமமடு பதிப்பக உரிமையாளர் திரு.சதபூ.பத்மசீலன் அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றியினைத் தெரிவிக்கின்றேன். 

க.சண்முகலிங்கம்