Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : உலகக் கல்வி வரலாறு
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-08-02-080
ISBN : 978-955-1857-79-0
EPABNo : EPAB/02/18824
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 112
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 380.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • தொல் குடியினரின் கல்வி
  • கிரேக்கக் கல்வி மரபு
  • சீன நாகரிகத்துக்கல்வி 
  • ரோமானியக் கல்வி
  • தொல்சீர் தமிழகக் கல்வி 
  • வேத உபநிடதக் காலக் கல்வி
  • பௌத்த கல்வி வளர்ச்சி 
  • கிறீஸ்தவக் கல்வி வளர்ச்சி
  • இஸ்லாமியக் கல்வி வளர்ச்சி 
  • ஐரோப்பிய மறுமலர்ச்சியும் கல்வியும் .
  • கல்வி விரிவாக்கற் செயற்பாடுகளின் வளர்ச்சி
  • இருபதாம் நூற்றாண்டின் கல்வி
  • பல்கலைக்கழக வரலாறு
  • கலைத்திட்ட வரலாறு
  • தொலைக்கல்வி  à®µà®°à®²à®¾à®±à¯ 
  • இருபத்தோராம் நூற்றாண்டின் கல்வி வளர்ச்சி
  • பின்னிணைப்பு -1  
  • பின்னிணைப்பு -2   
Full Description (முழுவிபரம்):

உலகக் கல்வி வரலாறு  à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà®¾à®• தமிழில் வெளிவரும் முதலாவது ஆக்கமாக இந்நூல் அமைகின்றது. 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஆய்வரங்கில் இவ்வாறான ஒரு நூலின் தேவை கலந்துரையாடலின்போது வெளிவந்தது. குறித்த அமர்வு ஒன்றினுக்குத் தலைமை தாங்கிய வேளை என்னிடம் இக்கருத்து முன்வைக்கப்பட்டது.
உலகக் கல்வி வரலாற்றை ஒரு நூலில் எழுதி முடித்தல் மிகவும் கடினமான பணி. பிரபஞ்சத்தை ஒரு சிமிழுக்குள் அடைப்பதற்கு ஒப்பானது. உலகக்கல்வி வரலாற்றில் தொடர்ச்சியாக நிகழ்ந்த முக்கியமான பதிவுகளே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 
கல்வி வரலாற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது, சமூகத்தின் பொருண்மியத் தளத்தினால் கல்விச் செயல்முறை உருவாக்கம் பெறும் இணைப்பைக் கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. அதாவது சமூகத்தின் பொருண்மியத் தளத்தில் நிகழும் மாற்றங்கள் கல்வியாக் கத்தின் மீது நேரடியான செல்வாக்குகளை ஏற்படுத்துகின்றன. 
அறிவுசார்ந்த வெளியீடுகளுக்கு உற்சாகமளித்துவரும் சேமமடு பதிப்பகத்தினரும் நண்பர்களும் நன்றிக்குரியவர்கள். 
சபா.ஜெயராசா

தமிழில் 'உலகின் கல்வி வரலாறு' தொடர்பான எந்தவொரு நூலாக்கமும் இதுவரை வெளிவரவில்லை. இதுவே இத்துறையில் வெளிவரும் முதல் நூலாகவும் முன்னோடி நூலாகவும்  à®…மை கின்றது. உலகக் கல்வி வரலாறு பல்வேறு தொகுதிகளில் எழுதப்படவேண்டிய பெரு நிலைப்பரப்பாகும். இந்நூல் அந்தப் பெரும் பரப்பைச் சுருக்கிச் சிமிழ் நிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்பணி மிகவும் சிக்கலானது. இத்தகைய பணியை நூலாசிரியர் துணிந்து மேற்கொண்டுள்ளமை பாராட்டுக்குரியது. 
பொருத்தமான தலைப்புகளிலே உலகக் கல்வி வரலாற்றை நிரற்படுத்தி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. தொன்மையான கிரேக்கக் கல்வி மாத்திரமன்றி தமிழகக் கல்வியும் இந்நூலிலே இடம்பெற்றுள்ளமை குறித்துரைக்கப்படக் கூடிய சிறப்பம்சம் ஆகின்றது. மேலைப்புல கல்வி வரலாற்றாசிரி யர்கள் தொன்மையான தமிழகக் கல்வி பற்றி குறிப்பிடாத நிலையில் இந்நூலாசிரியரின் முயற்சி பயனுள்ள ஆவணப்படுத்தலாகவும் இத்துறையில் மேலும் பல ஆய்வுகளை முன்னெடுப்பதற்குரிய ஆற்றுப்படுத்தலாகவும் அமையும். இந்நூல் கல்வி வரலாற்றின் சில அடிப்படைத் தளமாற்றங்களை கட்டுமானம் செய்ய விளைகின்றது. 
சுருக்க வரலாறுகளை எழுதுவோர் மேற்கொள்ளும் வாய்ப் பாடுகளைத் தவிர்த்துள்ளமை இந்நூலுக்கு மேலும் சிறப்பைக் கொடுக்கின்றது. உலகக் கல்வி வரலாற்றை அறிந்துகொள்வதற்குரிய பயனுள்ள ஒரு நூலாக்கமொன்றை வெளியிடுவதிலே நாம் பெரும் மகிழ்ச்சி கொள்ளலாம்.
தெ.மதுசூதனன்