Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-07-02-097
ISBN : 978-955-1857-96-7
EPABNo : EPAB/02/18814
Author Name (எழுதியவர் பெயர்) : க.சின்னத்தம்பி க.சுவர்ணராஜா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 216
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 560.00
Edition (பதிப்பு): ஐந்தாம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • உளவியலும் ஆசிரியரும்
  • கவனமும் புலக்காட்சியும்
  • ஞாபகம்
  • எண்ணக்கரு விருத்தி
  • தூண்டல் - துலங்கற் கற்றற் கொள்கைகள்
  • கள - அறிகை கற்றற் கொள்கைகள்
  • கற்றல் இடமாற்றம்
  • படைப்பாற்றல்
  • மொழி விருத்தி
  • கற்றலின் தகவல் முறைவழியாக்கல் மாதிரிகை
  • பல்வகை நுண்மதிகள்
  • மனவெழுச்சி நுண்மதிகள்
  • கலைச்சொற்கள்
  • துணை நூல்கள்
  • விடயச் சுட்டி
Full Description (முழுவிபரம்):

பிள்ளையைக் குவிமுகப்படுத்திக் கற்பிக்கும் எந்தவொரு நபருக்கும் உறுதுணையாக இருப்பது கல்வி பற்றிய உளவியலறிவு என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட விடயம். 'அறிகைத் தொழிற்பாடு களும் ஆசிரியரும்' எனும் இந்நூல் முதற்பதிப்பாக 1997ஆம் ஆண்டு ஏழு இயல்களோடு வெளிவந்தது. இன்று 2011ஆம் ஆண்டு பன்னிரண்டு இயல்களாக விரிவடைந்து பதினான்கு ஆண்டுகளின் பின் ஐந்தாவது பதிப்பாக வெளிவருவதையிட்டு அக மகிழ்வடை கின்றோம். 
1999 - இரண்டாம் பதிப்பு - எட்டாவது இயல் - படைப்பாற்றல்
2003 - மூன்றாம் பதிப்பு  - ஒன்பதாவது இயல் - மொழிவிருத்தி 
2007 - நான்காம் பதிப்பு  - பத்தாவது இயல் - கற்றலின் தகவல்                     à®¨à®¿à®°à®±à¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®²à¯ மாதிரிகை 
2011 - ஐந்தாம் பதிப்பு   - பதினோராம் இயல் - பல்வகை நுண்மதிகள் 
             - பன்னிரண்டாம் இயல் - மனவெழுச்சி நுண்மதி 
ஆகியவற்றோடு பன்னிரண்டு இயல்கள் அடங்கியதாக இப் புதிய பதிப்பு வெளிவருகின்றது. இது காலத்தின் மாற்றம் மட்டு மல்ல, அறிவுப் பெருக்கத்தின் மாற்றம் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. 
நான்காம் பதிப்பில் பத்தாம் இயல் 'கற்றலின் தகவல் நிரற்படுத்தல் மாதிரிகை' என்பதாகும். இந்த இயலோடுதான் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய கல்வியியலாளர் நண்பர் திரு.க.சுவர்ணராஜா அவர்கள் 'அறிகைத் தொழிற்பாடு களும் ஆசிரியரும்'    à®¨à¯‚லாக்கத்தில் இணைவு பெறுகின்றார். நான்காம் பதிப்பில் பத்தாமியலாகிய  'கற்றலின் தகவல் நிரற்படுத்தல் மாதிரிகை' என்பது ஐந்தாம் பதிப்பில் 'தகவல் முறைவழியாக்கல் மாதிரிகை' எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இதுவும் அறிகை பற்றிய தேடலின் மாற்றம் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளல் அவசியம். 
நிதர்சனமாக அறிகை மாற்றத்தை விருப்புடன் அறிய முகிழ்ந்து நிற்கும் கல்வித்துறையுடன் தொடர்புடைய ஆசிரியர்களே  à®à®¨à¯à®¤à®¾à®®à¯ பதிப்பு வெளிவருவதற்கு முதன்மைக் காரணியாக உள்ளவர்கள்.
மனிதன் உலகில் வாழ்கின்றான், மனிதனால் உலகம் நிலை பெற்றுள்ளது. இரண்டுக்கும் இருப்பியல் முக்கியம், இருப்பியலானது மாற்றங்களோடு பயணிப்பது. மாற்றத்தைத் தன்னகத்தில் ஏற்படுத்தாத எவருக்கும் எதற்கும் இருப்பு அற்றுப் போகின்றது. எனவே, மாற்றங் களை உள்வாங்கிப் பிள்ளையைக் குவிமுகப்படுத்தி நோக்கவும், பார்க்கவும், அறியவும் சாத்தியமான பயணிப்புக்கு இந்நூல் உதவுமென நம்புகின்றோம். 
இந்நூலின் முதல் நான்கு பதிப்புகளுக்கும் கல்வித்துறையினர் தந்த நம்பிக்கை கலந்த வரவேற்பு இவ்வைந்தாம் பதிப்புக்கும் கிடைக்குமென்ற விசுவாசத்துடன் வெளியிடுகின்றோம். மேலும் உளவியலறிவுடன் கற்பித்தலில் ஈடுபட அவாக் கொண்டவர்களுக்கு இந்நூல் சிறந்த அறிகையாக அமையுமென எதிர்பார்க்கின்றோம். இந்நூலாக்கத்தின் போது பன்முக அர்ப்பணிப்புடன் நூலின் செம் மையாக்கத்திற்கு உதவிய அன்புக்குரித்தாகிய நண்பர் திரு. சு. ஜெயச்சந்திரன் அவர்களுக்கு நன்றி கூறுவதில் அகமகிழ்வடைகின் றோம்.

க.சின்னத்தம்பி
க.சுவர்ணராஜா