Suwarnarajah, S

கதிரேசன் சுவர்ணராஜா வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளர் இணைப்பாளராhக பணிபுரிபவர். ஆசிரியர் கல்வித்துறையில் நீண்டகால அனுபவம் கொண்டவர். பல்வேறு உயர்நிலைக் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டவர்.   

இவர் கற்றல் - கற்பித்தல் பணிகளுடன் மட்டுமல்லாமல் ஆய்வுப் பணிகளிலும் முழுமையான ஈடுபாடு கொண்டவர். கல்வி முகாமைத்துவம், ஆசிரியத்துவம், கற்பித்தலியல், கல்வி உளவியல், கல்வி ஆலோசனை  à®µà®´à®¿à®•à®¾à®Ÿà¯à®Ÿà®²à¯ முதலான துறைகளில் ஆழமான ஈடுபாடும் நடைமுறைப் பிரயோகமும் கொண்டவர். இதனால் பல்வேறு புதிய சிந்தனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆக்கங்களையும் படைத்துவருபவர்.  
 
சமூகநலன், மாணவர் நலன் சார்ந்து கல்வியியின் தர மேம்பாட்டுக்காய் புத்தாக்கமான சிந்தனைகளை வெளிப்படுத்துவதில் நிதானமும் முதிர்ச்சியும் கொண்டவர்.  
க.சுவர்ணராஜா புத்தகங்கள்