Book Type (புத்தக வகை) : சிறுகதைகள்
Title (தலைப்பு) : முதுசம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-11-01-103
ISBN : 978-955-685-002-4
EPABNo : EPAB/02/00000
Author Name (எழுதியவர் பெயர்) : சிவசுப்ரமணியம், த ( தம்பு-சிவா)
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 170
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 280.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • வாழ்கையின் வேதனைகளால்...
  • முதுசம்
  • யாழ்ப்பாணம்
  • இதற்காகவா?
  • வாழ வைத்த தெய்வம்
  • வாழ்வியல்
  • நான் வகுத்த வியூகம்
  • உன்னையே நீ அறிவாய்
  • யுத்த வடுக்கள்
  • வீணடித்த வாழ்க்கை
  • ஏமாறாதே ஏமாற்றாதே
  • இணைந்த உறவுகள்
  • ஏமாற்றம் தொடர்கதையானால்?
  • ஆட்கொல்லி எச்.ஐ.வி
  • பெண்ணாகப் பிறந்துவிட்டால்
  • நான் நானாக இருந்திருந்தால்
  • காத‌ல் ஒரு பொம்ம‌லாட்ட‌ம்
  • சூழ‌ல் அமைத்த‌ வாழ்க்கை கோல‌ங்க‌ள்
  • த‌ண்ட‌னை வ‌ழங்க‌ வேண்டாமா?
Full Description (முழுவிபரம்):

'சிறுகதை வாழ்க்கையின் சாரளங்கள். வாழ்க்கையிலே ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை, அல்லது ஒரு சம் பவத்தை எடுத்துக் கூறுவது' என்கிறார் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன். 
'எழுதுவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. ஏன் என்றால் எனக்குத் தெரிந்தவற்றைத்தான் நான் எழுதுகின்றேன். எனக்குத் தெரியாதவற்றை நான் ஒருபோதும் எழுதுவதில்லை' என்று உலகம் மதிக்கும் மக்கள் எழுத்தாளர் மார்க்ஸிம் கார்க்கி கூறிய வாசகங் களை மனத்தில் நிறுத்தி எனக்குத் தெரிந்தவற்றைப் படைப்புக்களாக எல்லோரும் புரிந்துகொள்ளும் மொழிநடையில் எழுதியுள்ளேன். 
'இலக்கியம் காலத்தின் கண்ணாடி' என்று சொல்வார்கள். சமுதாயத்தின் கண் நான் கற்றபாடங்கள் இன்றைய காலகட்டத்தின் அவசியம் கருதி அவற்றை வெளிக்கொணர வேண்டும் என்ற உந்துத லால், சிறுகதைத் தொகுதியாக வாசகர்கள் முன் வைத்துள்ளேன். 
இலக்கியம் பொழுதுபோக்குக் கருவி அல்ல. நயம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கக் கூடியதும் அல்ல. மக்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டியதே இலக்கியம். 
உண்மையான கோரங்களை நான் தெரிந்துகொண்டிருக்கின் றேன். தினசரி வாழ்க்கையில் நிகழும் கோரங்களை நான் தரிசித்த வண்ணம் இருக்கின்றேன். நாம் வாழும் வாழ்க்கை கீழ்த்தரமான சாக்கடை வாழ்க்கை என்பதை யாரும் மறுக்க முடியாது. மனித சமூகத்தை நான் அளவுகடந்து நேசிக்கின்றேன். என்றாலும் பிறருக்கு வேதனையளிக்க நான் விரும்பவில்லை. 
நாம் மானசிகமாக இருக்கக் கூடாதென்றும், அழகிய சொற் றொடர்களாலும், கவர்ச்சிகரமான பொய்களாலும் உண்மையை மூடிமறைக்கக் கூடாதென்றும் நான் உறுதியாகக் கருதுகின்றேன். வாழ்க்கையுடன் நாம் நெருங்கி நிற்க வேண்டும். மிக நெருங்கி நிற்க வேண்டும். நமது மனத்திலும் எண்ணங்களிலும் உறையும் நன்மைகளையும் மனிதாபிமானத்தையும் நாம் வாழ்க்கையில் ஊட்ட வேண்டும். 
சாதாரண பாமரமக்களை நாடி எனது எழுத்துக்கள் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் என் மனத்தில் ஒரு ஆத்ம திருப்தி ஏற்படும். எனது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் உயிர்த் துடிப்புள்ள ஜீவன்கள். சமுதாயத்தில் நாம் தரிசிக்கும் மனிதர்கள். அவர்களில் நானும் ஒருவனாக நடமாடுகின்றேன். 
சமுதாயத்தில் பெண்கள் பலவகையிலும் அனுபவிக்கும் அவலங்களை என் கதைகள் யதார்த்தமாக எடுத்துக்கூறி நிற்கின்றன. பெண்பிள்ளைகளின் ஆசாபாசங்களை அடக்கும் பெற்றோர்களின் தான்தோன்றித்தனமான போக்குகள், அந்தஸ்து, கௌரவம், சாத்திரம் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு பெண்பிள்ளை களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் ஒரு சமுதாயத்தை உங்கள் முன்காட்டியுள்ளேன். 
ஆணாதிக்க சமுதாயத்தில் குடிப்பழக்கம் சமுதாயச் சீர்கேடு களுக்கு எவ்விதம் துணை போகின்றன என்பதையும் குடும்ப வாழ்க் கையில் எவ்விதம் விரிசல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் பகிரங்கப்படுத்தியுள்ளேன். 
வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று வந்தவர்களின் சோக வரலாறுகள் யதார்த்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை வெளிநாட்டு மோகம் கொண்டவர்களினால் குடும்ப உறவுகள், காதல் உறவுகள் எவ்வகையில் உருக்குலைந்தன என்ற செய்திகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 
'எயிட்ஸ்' விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அவை சம்பந்தமான உண்மைப் பதிவுகள் சமுதாய நன்மை கருதி உள்ளதை உள்ளவாறே சொல்லப்பட்டுள்ளன. மேலும் பாலியல் சம்பந்தமான விடயங்கள் சமுதாய மக்களின் வாழ்வியலுடன் கோடிட்டுக்காட்டி கதைகள் புனையப்பட்டுள்ளன.
ஒவ்வொரு காலகட்டத்தையும் தொடர்புபடுத்தி எமது நாட்டின் நிலைமைகள் யதார்த்தமாக முன்வைக்கப்பட்டுள்ளன.
எம் நாட்டுப் பெண்கள் சிலர் எத்தகைய காரணங்களினால், விபச்சாரத்திற்குத் தள்ளப்படுகின்றார்கள் என்பதைத் தெரிவித்துள்ள அதேவேளை அது பற்றிய விடயங்களைச் சொல்ல வேண்டிய கட்டாயம்  à®‡à®©à¯à®±à¯ எமது சமுதாய நிலைகருதி உருவாகியுள்ளது. எல்லோரும் உணர்ந்துள்ள நிலையில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கில் அது பற்றிய கதைகளும் இத்தொகுதியில் இடம்பெற் றுள்ளன. 
ஒருவரை ஒருவர் காதலிப்பது, பலரைக் காதலிப்பது, உடல் உறவு கொள்வது, ஏமாற்றுவது இருபாலாருக்கும் பொதுவான விடய மானாலும், ஒரு சில காதல்கள் துளிர்விட்டு வளர்ந்துள்ளன என்பதும் மறுப்பதற்கில்லை.
வக்கிர எண்ணம் கொண்ட ஆண்வர்க்கத்தினால் பாதிப்புக்கு உள்ளான பெண்களின் கண்ணீர்க்கதைகள் நெஞ்சை உருக்கியத னால் அவற்றைக் கதையாகப் படைத்துள்ளேன். 
என்னால் எழுதப்பட்ட சிறுகதைகளைப் பிரசுரித்து அவற்றை வாசகர்களுக்குச் சென்றடைய வைத்த தினக்குரல், சுடர்ஒளி, தினகரன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கும் மல்லிகை, இனிய நந்தவனம் ஆகிய சஞ்சிகைகளுக்கும் எனது நன்றியினைத் தெரிவித் துக் கொள்ளுகின்ற அதேவேளை, எனது ஆக்க இலக்கிய முயற்சிக ளைக் கௌரவித்து விருதுகளும், பட்டங்களும் வழங்கி ஊக்குவித்த நல்நெஞ்சங்களுக்கும், பலவகையிலும் உந்துசக்தியாக இருக்கும் எனது நண்பர்கள் குழாத்தினருக்கும், என் சொந்தங்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
எனது நூலுக்கு மிகக் கனதியான அணிந்துரையை எழுதி வழங் கிய என் மதிப்புக்குரிய பேராசான் சாகித்திய ரத்தினா பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா அவர்களுக்கும் நன்றியைச் சொல்வதில் பெருமிதமடைகின்றேன். 
இந்தச் சிறுகதைத் தொகுதியை மிகச் சிறந்த முறையில் பதிப்பித்து வழங்கிய சேமமடு பொத்தகசாலை அதிபர் நல்லோன் சதபூ. பத்மசீலன் அவர்களுக்கும் அவரின் நிறுவன ஊழியர்களுக்கும், அட் டைப்படத்தை அழகாக வரைந்துதவிய ஓவியர் வீ.தவம் அவர்களுக்கும் என் நன்றியை அகமகிழ்வுடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். 
நன்றி
த.சிவசுப்பிரமணியம்
(தம்பு - சிவா)