Sivasubramaniam, T

இந்தத் தொகுதியைத் தந்துள்ள தம்பு சிவா அவர்கள் இதழியலில் நீண்டகால அனுபவ வீச்சைக் கொண்டவர். சளைத்தலின்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆற்றல் அவரிடத்து மேலும் விசை பெற்றுள்ளது.

இத்தொகுதியில் இடம்பெற்ற அனைத்துக்கதைகளும்  'வெளிமலர்ச்சி நடப்பியல்' சார்ந்தவையாகவுள்ளன. நாளாந்த வாழ்விலே நடப்பவற்றையும் 
கண்டு அனுபவித்தவற்றையும், ஈடுபாட்டுடன் 
நுகர்ந்து கொண்டவற்றையும் உணர்ச்சிகளை ஏற்றித்தருதல் கதைகளிலே காணப்படும் இயல்பாகின்றது. 
நடப்பியலும் உணர்ச்சியியலும், உள்ளுணர்வும் 
வெளிமலர்ச்சி நடப்பியலை நோக்கி நகர்த்துகின்றன.  
வாழ்க்கையின் சம்பவத் துணிக்கைகள் ஒவ்வொரு கதையிலும் நிலைமாற்றம் செய்யப்படும் பொழுது நடப்பு நிலவரங்கள் 
சிலாகித்து மேலெழுந்து நிற்கின்றன.
கதையின் எடுத்துரைப்பு வழியாக 
வாழ்க்கை மற்றும் சமகாலத்தைய சூழல் பற்றிய 
மதிப்பீடுகளும், இயல்புகளும் பரவலாக்கம் செய்யப்படுகின்றன. அவ்வாறான மதிப்பீடுகளின் குழப்பமற்ற தொடர்ச்சி 
அனைத்துக் கதைகளிலும் காணப்படுகின்றது. 

சமகாலச் சுரண்டலின் பன்முகத்தளங்களும், கோலங்களும் 
கதைகள் எங்கும் விரவி நிற்கின்றன. 
அந்நிலையில் மொழிக்கையாளல், நிலவரங்களோடு 
பயணித்தலாக வளர்ச்சியடைந்து செல்கின்றது. 
கதைகளினூடாக ஒருவித அறிவுக் கையளிப்பை 
மேற்கொள்ளல் ஆசிரியரின் நோக்கமாகின்றது. 
கூறுபவற்றை உள்வாங்கிச் சுவைக்கும் நிலைக்கு மட்டும் 
வாசகரை மாற்றியமைக்காது சிந்திக்க வைத்து 
அறிகை நிலையிலே துலங்கச் செய்தலும் 
ஆக்கங்களிலே தெரிகின்றன. 
அந்த நிலையில் எழுந்துள்ள ஆக்கங்கள் 
ஆசிரியருக்குரிய தனித்துவத்தைப் 
புலப்பாடு கொள்ளச் செய்கின்றன. 

 

சிவசுப்ரமணியம், த ( தம்பு-சிவா) புத்தகங்கள்
2011 - சிறுகதைகள் - முதுசம்