Book Type (புத்தக வகை) : திறனாய்வு
Title (தலைப்பு) : தமிழியலும் திறனாய்வுக் கலையும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2012-03-01-107
ISBN : 978-955-685-006-2
EPABNo : EPAB/02/18848
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 112
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • தமிழ்ச் சூழலுக்குரிய தனித்துவத் திறனாய்வுக் கோட்பாட்டினை உருவாக்குதல்
  • தொல்காப்பியத்தின் திறனாய்வுக் கருத்துக்கள் 
  • உரையாசிரியர்களும் திறனாய்வும் 
  • மேலைப்புலத்து அனுபவங்கள் 
  • திறனாய்வின் பன்முக வளர்ச்சி
  • வாசகர் துலங்கல்
  • இனக்குழும நிலையும் அடையாள நெருக்கடியும்
  • புலச் சிதறல் உளவியல்
  • சமூக வளர்ச்சியும் புதிய கோட்பாடுகளும் 
  • சமூகக் கட்டுமை இயல்
  • நாவலரை முன்னிறுத்தி இனக்குழுமக் கோட்பாடும்
  • தமிழியலின் தளத்தை விரிவாக்கிய தனிநாயகம் அடிகளார்
  • தமிழிசை இயக்கமும் இனக்குழும அடையாளப்படுத்தலும்
  • எதிர்முனைப்பு இலக்கியம்
  • தமிழ்ச் சூழலுக்குரிய புதிய கோட்பாடுகள்
  • பின் இனக்குழுமக் கோட்பாடு
Full Description (முழுவிபரம்):

தமிழ்ச் சூழலுக்குரிய தனித்துவமான திறனாய்வுக் கோட்பாட்டை உருவாக்கும் அறிகை முயற்சி இந்நூலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
ஐரோப்பியச் சூழலில் பல்வேறு திறனாய்வுக் கோட்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. பன்மைச் சூழலும் அறிவின் புத்தாக்க வடிவங்களும் கலை இலக்கியங்களை அணுகும் முறைகளும் புதிய திறனாய்வு வடிவங்களை உருவாக்கி வருகின்றன.
தமிழ் மரபுக்குரிய திறனாய்வு அணுகுமுறையின் தோற்றத்தினைத் தொல்காப்பியத்திலே காண முடியும். தமிழில் உருவாக்கம் பெற்ற இலக்கண நூல்களிலும், உரை மரபுகளிலும் திறனாய்வுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. 
மேலைப்புலத்திறனாய்வுக் கோட்பாடுகள் கருத்தியலை (ஐனநழடழபல) உட்பொதிந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. கருத்தியலும் திறனாய்வும் வேறு பிரிக்க முடியாதவை என்பதை மீள வலியுறுத்த வேண்டியுள்ளது. 
இந்நூலாக்க முயற்சிக்கு உற்சாகம் தரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரும், மாலைக் குழுவினரும், பல்கலைக்கழகத்தினரும் வெளியீட்டாளரும் நன்றிக்குரியவர்கள். 

சபா.ஜெயராசா