Book Type (புத்தக வகை) : தொகுப்பு
Title (தலைப்பு) : எம்மை வாழ வைத்தவர்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2012-05-01-110
ISBN : 978-955-685-009-3
EPABNo : EPAB/2/19276
Author Name (எழுதியவர் பெயர்) : பொ.கனகசபாபதி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 540
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 1600.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): கெட்டி அட்டை
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):
  • அணிந்துரை  I
  • அணிந்துரை  II
  • அணிந்துரை  III
  • என்னுரை
  • எப்படி நன்றி சொல்வேன்  
  • பதிப்புரை 
  1. அருட்தந்தை லோங் அடிகளார்
  2. ஹண்டி.எஸ்.பேரின்பநாயகம்
  3. சங்.ஜோன் பிக்னெல்
  4. சங்கரப்பிள்ளை வீரசிங்கம்
  5. ஒறேற்ரர; சி.சுப்பிரமணியம்
  6. தெ.து.ஜெயரத்தினம்
  7. சா.வி.ஒ.சோமநாதர்
  8. சங். ஜே.ரி.அருளானந்தம்
  9. சி.வண.பிதா.நவரத்தினசிங்கம்
  10. வேலுப்பிள்ளை தம்பு
  11. க.மூ.சி.சீனித்தம்பி
  12. சு.குமாரசாமி
  13. செல்வி.இ.மு.தில்லையம்பலம்
  14. பிலிப். ஜோர்ஜ் வாசிங்டன் தம்பர்
  15. திருமதி. செல்லம்மா பிள்ளை
  16. ச.அம்பிகைபாகன்
  17. சி.கே.கந்தசாமி
  18. ந.சபாரத்தினம்
  19. க.பூரணம்பிள்ளை
  20. ஐ.பி.துரைரத்தினம்
  21. விபுலானந்த அடிகள்
  22. வீ.வீரசிங்கம்
  23. சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார்
Full Description (முழுவிபரம்):

ஆசியாவிலேயே எழுத்தறிவுள்ளோர் விகிதாசாரத்தில் ஜப்பானுக்கு அடுத்ததாக இலங்கை, சிறப்பாக யாழ்ப்பாணம் இருந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எம் நாட்டில்  à®•à®¾à®²à¯ பதித்த பின்னர் ஆங்கிலக் கல்வியே சமூக அசைவியத்திற்கு பிரதான காரணமாக இருந்தமையால் ஆங்கிலக் கல்வி மிக முக்கியத்துவம் பெற்றது. தம்பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்பினர். விருப்பத்திற்கும் வசதிக்குமிடையே நெடிய தூரம். அத்தூரத்தினை குறுகியதாக்கி  à®šà®¨à¯à®¤à®°à¯à®ªà¯à®ªà®¤à¯à®¤à®¿à®©à¯ˆà®šà¯ சாதகமாக்க முயன்றனர் தமது சமயத்தைப்பரப்ப வந்த வெளிநாட்டவர். எம்மக்கள் ஆங்கிலக் கல்வி அறிவில் முன்னிலை வகிப்பதற்கு வித்திட்டவர்கள் கத்தோலிக்க, அமெரிக்க திருச்சபையினரும் மிஷனறிமார்களும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்களின் பிரதான நோக்கம் சமயமாற்றம் என்பதை உணர்ந்த நம்மவர்கள் கவலையுற்றனர். எனவே  à®…வர்களுக்குப் போட்டியாக நம்மவர்களில் வசதி படைத்த, சமூக மேம்பாடு கருதிய பெருமக்கள் பாடசாலைகள் தொடக்கியது கல்வி அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் அனுகூலமாகியது. இவர்களில் சிலர் தனியே பாடசாலைகளை நிறுவினர் இன்னும் சிலர் ஒரு குழுமமாகி அதன் மூலமாக பாடசாலைகளை நிறுவினார்கள்.
இரு சாராரும்  à®¤à¯Šà®Ÿà®•à¯à®•à®¿à®¯ பாடசாலைகளை திறம்பட நடத்திய அதிபர்கள் யாபேரும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் அவர்களில் சிலர் அர்ப்பணிப்புடனும் கடமையுணர்வுடனும் ஆற்றிய கல்விச்சேவை மகத்தானது. அவர்களில் சிலருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது நான் செய்த பேறு. இன்னும் சிலருடன் பழகும் பாக்கியம் கிட்ட வில்லை என்றாலும் மற்றவர்கள் வாயிலாக அவர்கள் பெருமையைக் கேட்கும் சகாயம் கிட்டியது. இவர்கள் எல்லோரையும் பற்றி நினைக்கையில் எனது உள்ளத்தில் தோன்றும் நன்றி உணர்வால் உடல் புல்லரிக்கிறது. இவர்கள் இல்லாவிட்டால் நாம் இந்நிலைக்கு வந்திருப்போமா? நம்மவர்களில் பலர் உலகம் பூராவும் பரம்பி ஆங் காங்கே புகழும் பாராட்டும் பெற்றவர்களாக வாழ முடிந்திருக்குமா?
காரணர்களாகிய அதிபர்களில் சிலர் என்மனதில் நீண்ட காலமாக நிலைத்து நிற்கிறார்கள். அவர்களைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது எனது வாழ்வின் இலட்சியம் என்றே கூற வேண்டும்.
 à®…வர்களைப் பற்றி தொடராக எழுத வேண்டும் என நான் எண்ணிய போது கனடா 'ஈழநாடு' பத்திரிகை ஆசிரியர் தம்பி பரமேஸ்வரன் தனது பத்திரிகையில் எழுதுமாறு வேண்டினார். சம்மதித்தேன். அதே சமயம் இத்தொடரினை ஈழத்தில் வாழ்பவர்களும் வாசிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போது ''தினக்குரல்' ஆசிரியர் பாரதியுடன் தொடர்பு கொண்டேன். எனது ஓரிரு ஆக்கங்கள் தினக் குரலில் பிரசுரிக்கப்பட்டதுடன் அவர்களுக்கும் எனக்கும் வேறு தொடர்பு இருந்ததில்லை. ஆனால் பாரதி  à®…க்கட்டுரைத் தொடரினைப் பிரசுரிக்க சம்மதம் தெரிவித்தார். அங்கே கட்டுரை தொடரத் தொடங்கியவு டனேயே எனது அபிமான மாணவி திரு.கோகிலா மகேந்திரன் அவர்கள் அத்தொடரினை நான் நூலாக்குவதாக இருந்தால் அப்பணியினை மனமுவந்து செய்யவுள்ளதாக சேமமடு பிரசுரத்தின் பத்மசீலன் கேட்டதாகக் கூறினார். செய்யலாம் என்றேன்.
இது இரண்டு வருடங்களுக்கு முன்னர். 
சில அதிபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்கள் பற்றிய தகவல் ஏதாயினும் இருந்தால் தந்து உதவுமாறு இங்குள்ள பத்திரிகைகள் பலவற்றில் விளம்பரம் செய்திருந்தேன். ஒரு சிலர் உதவினார்கள். ஏனையவர்கள் பாராமுகாய் இருந்தனர். என்னால் இயன்றவரை தகவல்களைச் சேர்த்து 23 அதிபர்கள் பற்றி எழுதியுள் ளேன். இன்னும் எழுதப்பட வேண்டியவர்கள் உள்ளார்கள். நான் கொடுத்த ஆரம்பத்தினை வேறு பலர் தொடரலாம். என்;னால் முடியுமனால் நானும் செய்வேன்.
இந்நூலிற்கு மதிப்புரை வழங்குமாறு, நான் அதிபராக இருந்த காலத்தில் யாழ் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளராக திறம்படச் சேவையாற்றிய திரு. க. சிவநாதனிடமும், எமது கல்லூரியின் புகழ் பெற்ற மாணவர்களாகிய பேராசிரியர் பொ. இரகுபதியிடமும், யாழ். பல்கலைக்கழகத்து முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவர்களிடமும் கேட்டேன் தாராளமாகச் செய்து தருகிறோம் என்றார்கள். செய்தும் உள்ளார்கள், கலாநிதி பொ. இரகுபதி நோர்வேயில். நோர்வே- தென்னாசிய ஆய்வு நிறுவனத்தின் உயர்நிலை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.இந்தியாவின் ஒரிசா மாநில பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தின்  à®¤à¯†à®©à¯à®©à®¾à®šà®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ பேராசிரியராகவும், யாழ். பல்கலைக்கழகத்திலே கலைபீட அதிதிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். பின் அட்டையில் என்னைப் பற்றிய குறிப்பினை மனமுவந்து எழுதி தந்த என் பிரியமான மாணவன் கவிஞர் இளவாலை விஜேந்திரனுக்கும் எனது  à®‰à®³à®®à®¾à®°à¯à®¨à¯à®¤ நன்றி. நான் எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு முழு உதவி நல்கும் எனது நல்மாணாக்கனும் நண்பனுமான இராமநாதனுக்கும் என் நன்றி.
நான்  à®•à®£à®¿à®©à®¿à®¯à®¿à®²à¯ விரல் நுனியால் தட்டித்தட்டி தப்புத் தப்பாக  à®ªà¯Šà®±à®¿à®¤à¯à®¤à®µà®±à¯à®±à®¿à®©à¯ˆ பொறுமையுடன் திருத்தியதுடன் செப்பமிட்டுந்தந்த திரு.வர்ணன் அவர்களுக்கும் எனது நன்றி.
 à®•à®Ÿà¯à®Ÿà¯à®°à¯ˆà®¯à®¿à®©à¯ˆà®¤à¯ தொடராக வெளியிட்டு வந்த கனடா ஈழநாடு  à®†à®šà®¿à®°à®¿à®¯à®°à¯ திரு.பரமேஸ்வரனுக்கும், தினக்குரல் உரிமையாளருக்கும்,  à®…சிரியர் திரு.பாரதிக்கும் எனது நன்றிகள். இந்நூலினை அச்சிட்டு உதவிய சேமமடு பதிப்பக உரிமையாளர் பத்மசீலனுக்கும் என் இதய பூர்வமான நன்றி.

பொ.கனகசபாபதி