Book Type (புத்தக வகை) : உளவியல்
Title (தலைப்பு) : உளவியல் ஊடுதலையீடுகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2012-08-01-113
ISBN : 978-955-685-012-3
EPABNo : EPAB/02/18825
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 116
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • மூக நோயியல்
  • வன்படிமங்களின் பரவல்
  • பொறியுடல்
  • போரின் வடுக்கள்
  • ஆற்றல் வெளிப்பாட்டுக்கு வினையூட்டல்
  • விருத்தி உளவியலும் பிரயோக நிலையும் 
  • அறிகைச் சிகிச்சை முறை
  • நடப்பியற் சிகிச்சை
  • இருப்பியச் சிகிச்சை
  • வாழ்வின் அர்த்தங்களைத் தேடும் சிகிச்சை
  • தனிநபரைக் குவியப்படுத்தும் சிகிச்சை
  • பரிமாற்றப் பகுப்பாய்வு
  • வாசிப்பும் உளச்சுகமும்
  • கதையாடற் சிகிச்சை
  • மகிழ்பொழுது மற்றும் மகிழ்செயல்
  • சீர்மியமும் இலக்கியங்களும் 
  • பால்நிலைச் சீர்மியம்
  • சிந்தனையும் எழுபாய்சற் கோட்பாடும்
  • பயன்பட்ட நூல்கள்
Full Description (முழுவிபரம்):

உளவியல் ஊடுதலையீடுகள் சமகாலத்தில் அதிக முக்கியத் துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஆசிரியர், பெற்றார், நிர்வாகிகள், சீர்மியர், உளச்சமூகப் பணியாளர், ஆற்றுப்படுத்துனர் என்ற அனைவரும் இத்துறையில் ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
மிகவும் கனதியான கருத்துக்களைத் தமிழ்மொழி வாயிலாகக் கையளிப்புச் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. விடயம் கனதியான நிலையில் அவற்றைச் சுமந்துசெல்லும் மொழியும் கனதியைத் தாங்கிய நிலையிலேதான் தொழிற்படும். 
ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை கல்வித்தர மேம்பாடு பற்றிய விவாதங்களிலே வலியுறுத்தப் பட்டு வருதல் குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த வாசிப்பு என்பது கனதியான உள்ளடக்கத்தை நோக்கிய வாசிப்பாகும். 
'விளங்கவில்லை' என்று மேலோட்டமாகக் கூறுதல் அறிவின் ஆழத்தைத் தரிசிக்காமல் தடுக்கும் எதிர்ப்புலமை நடவடிக்கை யாகும். அறிவு ஆழ்ந்து செல்லும் பொழுது அதற்குரிய சிக்கற்படும் தன்மையும் அதிகரித்துச் செல்லலை அறிவின் ஆய்வு புலப்படுத்தும்.
மேற்கூறிய நுழைவாயிற் கருத்தோடு படிக்கத் தொடங்கலாம்.

சபா.ஜெயராசா