Book Type (புத்தக வகை) : தத்துவம்
Title (தலைப்பு) : மெய்யியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN-2012-12-03-117
ISBN : 97-895-568-501-61
EPABNo : EPAB/2/19277
Author Name (எழுதியவர் பெயர்) : பேராசிரியர் நா. ஞானகுமாரன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2012
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 224
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 420.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

அணிந்துரை    vi
முகவுரை    viii
பதிப்புரை    x
            

அத்தியாயம்-1
மேலைத்தேய மெய்யியல்    01
அத்தியாயம்-2
கீழைத்தேய மெய்யியல்    22
இந்தியமெய்யியல்    25
அத்தியாயம்-3
சீன மெய்யியல்    47
அத்தியாயம்-4
ஜப்பானிய மெய்யியல்    75
அத்தியாயம்-5
திபெத்திய மெய்யியல்    85
பகுதி - II
அத்தியாயம்-6 
அறிவாராய்ச்சியியலுக்கு ஓர் அறிமுகம்    92
அத்தியாயம்-7
ஒழுக்கவியலுக்கு ஓர் அறிமுகம்    104
அத்தியாயம்-8
உளவியலுக்கு ஓர் அறிமுகம்    115
அத்தியாயம்-9
மனமெய்யியலுக்கு ஓர் அறிமுகம்    124
அத்தியாயம்-10
சமயமெய்யியலுக்கு ஓர் அறிமுகம்    133

பகுதி - II
அத்தியாயம்-11
ஒழுக்கவியலாய்வில் தண்டணை    139
அத்தியாயம்-12
அறிவினேடு எவ்வாறு பரீட்சயம்?    154
அத்தியாயம்-13
மனம், உடலுக்கிடையிலான உறவு பற்றிய பிரச்சனை    163
அத்தியாயம்-14
சமய மெய்யியலில் அற்புதங்கள்    178
அத்தியாயம் -15
சமகாலமெய்யியலில் தர்க்கப்புலனறிவாதம்    191

நூற்பட்டியல் -I     203
நூற்பட்டியல் -II    212

Full Description (முழுவிபரம்):

பேராசிரியர் நா.ஞானகுமாரன் கடந்த முப்பந்தைந்து வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண மெய்யியல் துறையில் பணியாற்றிவருபவராவர். துடிப்பும் ஆர்வமும் மிக்க இவர் மெய்யியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். 'சைவசித்தாந்தத் தெளிவு', 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்', 'நயந்தரும் சைவசித்தாந்தம்', 'அருளாளர்களின் சமய அனுபவம்', 'மெய்யியல்', 'சைவ சமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு', 'சைவ சித்தாந்தத்தில் அத்வைத எண்ணக்கருத்து', 'வேதாந்த மெய்யியல்', 'மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும்' போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார். சைவசித்தாந்தத் தெளிவானது சமீபத்தில் திருத்திய பதிப்பாக வெளிவந்துள்ளது. அதேபோல இந்நூலும் அநேகரது வேண்டுகோளிற்கிணங்க திருத்திய பதிப்பாக புதிய அத்தியாயங்களும் இணைக்கப்பட்டு வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும். இவரது சைவ சித்தாந்தத் தெளிவானது சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மெய்யியல், சைவசித்தாந்தம், வேதாந்தம், சார்ந்த பல ஆய்வுக்கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிப் பாராட்டைப் பெற்றவர். இவர் சர்வதேச ஆய்வரங்குகளிலும் பல கட்டுரைகளைச் சமர்ப்பித்ததுடன் ஒப்சலா பல்கலைக்கழகம்  à®šà¯à®µà¯€à®Ÿà®©à¯, அரிசோனா பல்கலைக்கழகம் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆய்வாளராகவும் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். 
திருத்திய பதிப்பாக வெளிவரும் இந் நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மகிழ்வடைகின்றேன். மெய்யியலைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இந் நூல் பெரிதும் வழிகாட்டவல்லதாகும். இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் மெய்யியல் துறையில் அனுபவம் நிறைந்த இந் நூலாசிரியர், மேலைத்தேய, கீழைத்தேய மரபுகளின் அடிப்படையில் மெய்யியலை அணுகியுள்ளதுடன் பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இவரது ஆய்வுப் பணியானது மேலும் தொடர மனதார வாழ்த்துகின்றேன். 

பேராசிரியர்.எஸ்.மோகனதாஸ்
முன்னாள் துணைவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்
பல்கலைக்கழக ஆணைக்குழு உறுப்பினர்,
கொழும்பு.
12. 11. 2012