Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வியியல் ஓர் அறிமுகம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2013-07-01-125
ISBN : 97-895-568-502-46
EPABNo : EPAB/2/19281
Author Name (எழுதியவர் பெயர்) : ச.முத்துலிங்கம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2014
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 275
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 1200.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பாகம் -1
கல்விக்கோட்பாடுகள் : 
1.    à®•à®²à¯à®µà®¿à®šà¯ சிந்தனையாளர் சிலரின் கருத்துக்கள் 
2.    à®•à®²à¯à®µà®¿à®¯à¯à®®à¯ பொருளாதாரமும் 
3.    à®•à®²à¯à®µà®¿à®¯à¯à®®à¯ சமூகமும் 
4.    à®•à®²à¯ˆà®¤à¯à®¤à®¿à®Ÿà¯à®Ÿà®®à¯à®®à¯ அதன் வகைகளும் 
5.    à®šà®®à®¯à®•à¯ கல்வி 
பாகம்- 2
உளவியல் 
ஊக்கம் பற்றிய கொள்கைகள்
பிள்ளை வளர்ச்சிப் பருவங்கள்
பிள்ளைகளின் பொருத்தப்பாடு 
எண்ணக்கருவும் சிந்தனையும் 
அறிவு வளர்ச்சி

பாகம் -3
கற்றலும் கற்பித்தலும் 
1.    à®•à®±à¯à®±à®²à¯à®®à¯ ஊக்கமும்
2.    à®•à®±à¯à®ªà®¿à®¤à¯à®¤à®²à¯ பொதுமுறைகள்
3.    à®¸à¯à®•à®¿à®©à¯à®©à®°à®¿à®©à¯ கொள்கையும் நிரலித்த கற்பித்தலும் 
4.    à®µà®•à¯à®ªà¯à®ªà®±à¯ˆà®•à¯ கற்பித்தல்

பாகம் -4
அளவீடும் வழிகாட்டலும்
1.    à®ªà®¾à®Ÿ அடைவும் அதன் அளவீடும்
2.    à®¨à¯à®£à¯à®ªà®®à®¤à®¿à®¯à¯à®®à¯ அதன் அளவீடும்
3.    à®†à®³à¯à®®à¯ˆà®¯à¯à®®à¯ அதன் அளவீடும்
4.    à®¤à¯Šà®´à®¿à®²à¯à®•à¯à®•à¯ வழிகாட்டல்
5.    à®•à¯‚ட்டு வழிக்காட்டல் 

பாகம் -5 
கல்வி முறை 
1.    à®šà¯à®¤à®¨à¯à®¤à®¿à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ பின் இலங்கையிற் கல்வி மாற்றங்கள் 
2.    à®‡à®²à®™à¯à®•à¯ˆà®¯à®¿à®±à¯ புதிய கல்வித் திட்டம் 
3.    à®‡à®™à¯à®•à®¿à®²à®¾à®¨à¯à®¤à®¿à®©à¯ கல்விமுறை  

Full Description (முழுவிபரம்):
நூலாசிரியரான பேராசிரியர் சதாசிவம் முத்துலிங்கம் ஒரு மூத்த தலைமுறைக் கல்வியாளர். முதலில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் கல்வியியல் துறையிலும் பணியாற்றியவர். குறிப்பாகப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆசிரியர் கல்வியாளராகத் திகழ்ந்த பேராசிரியர் அவர்கள் பிரதானமாகக் கல்வி உளவியல், கல்விப் புள்ளியியலும் மதிப்பீடும், விஞ்ஞானக் கல்வி கற்பிக்கும் முறைகள் ஆகிய பாடங்களைத் துறைப்போகக் கற்பித்தார்கள். நான் உட்பட இன்றைய தலைமுறையினரான பல கல்வியியல் பேராசிரியர்களும் மூத்த கல்வியாளர்களும் அன்னாரிடம் உயர்கல்வி பயின்றவர்கள். இறுதிக் காலத்தில் கனடா சென்று வாழ்ந்து அங்கு காலமானவர். 
 
இன்று கல்வியியல் நூல்கள் ஏராளம் வெளிவந்துவிட்டன. எமது மதிப்பீட்டில் இருநூறு நூல்களாவது வெளியிடப்பட்டிருக்கலாம். இலங்கையில் வெளிவந்துள்ள கல்வியியல் நூல்கள் பற்றிய ஒரு நூற்பட்டியல் ஒன்று இன்றைய ஒரு முக்கிய தேவை என்பது வேறொரு விடயம். அதில் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய விடயம் 1970களில் தமிழ்மொழியில் கல்வியியல் நூல்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, இந்நூலை எழுதி வெளியிட்டவர் பேராசிரியர் அவர்கள். இன்று கல்வியியல் எழுத்துப்பணி விரிவான முறையில் நடைபெறுகின்றதென்றால் அப்பணிக்கு ஒரு முன்னோடியாக அமைந்தவர் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். 
 
இலங்கைப் பல்கலைக்கழக முறையில் கல்வியியல் 1964 முதல் தமிழ்ஃ சிங்கள மொழியில் கற்பிக்கப்பட்டது. 1973 முதல் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாக் கற்கை நெறியும் தமிழ்மொழி வழியில் கற்பிக்கப்படலாயிற்று. அதற்கு முன்னர் ஆங்கிலமொழி வழியிலேயே கல்வியியல் பாடங்கள் யாவும் கற்பிக்கப்பட்டன. கலாநிதி . பிரேமதாச உடகம கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் அவர் பாடசாலைகளில் தாய்மொழியே பயிற்று மொழி என்பதால், கல்வியியல் பயிலும் ஆசிரியர் மாணவர்கள் தாய்மொழியிலேயே கல்வியியல் பயில வேண்டும் எனக் கருதி, அக்கொள்கையையே நடைமுறைப்படுத்தினார். அதன் காரணமாக, 1973 முதல் பல்கலைக்கழக நிலையில் கல்வியியல் கற்கை நெறிகள் தாய்மொழியில் கற்பிக்கப்படலாயிற்று. ஆங்கிலவழிக் கல்வி கைவிடப்பட்டது.
 
அதேவேளையில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் எங்கும் (அப்போது பலாலி, கோப்பாய், மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை போன்றன) தமிழ்மொழி வழியிலேயே கல்வியியல் கற்பிக்கப்பட்டது. இவ்வாறு கல்வியியல் கல்வியானது தாய்மொழி மயமாக்கப்பட்ட காலத்தில், கல்வியியல் நூல்கள் தமிழ்மொழியில் இருக்கவில்லை. அதனைக் கற்ற மாணவர்கள் விரிவுரையாளர்களின் விரிவுரைகளிலும் ஆங்கில நூல்களிலுமே தங்கி இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பேராசிரியர் முத்துலிங்கம் அவர்கள் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் பிரச்சினையைப் பிரதானமாகக் கருத்திற் கொண்டு கல்வி உளவியல், புள்ளியியல் ஆகிய துறைகளில் நூல்களை எழுதி வெளியிடத் திட்டமிட்டார். அவ்வாறே கல்வித் தத்துவம், கல்விச் சமூகவியல், ஒப்பியல் கல்வி ஆகிய துறைகளிலும் மாணவர்களுக்கு உதவி தேவைப்பட்டதைப் பேராசிரியர் உணர்ந்து கொண்டார். இத்தகைய ஒரு பின்புலத்தையே பேராசிரியரின் கல்வி உளவியல், கல்விப் புள்ளியியல் உட்பட இந்நூலும் அவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. அவருடைய கல்வி உளவியல் நூல் ஆங்கில மொழியிலும் சிங்கள மொழியிலும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சிங்கள நூலைத் திரு.டி.எஸ்.ரணவக்க என்ற கல்வியியல் விரிவுரையாளர் மொழிபெயர்த்தார். ஆங்கில நூலைப் பேராசிரியர் அவர்களே எழுதி வெளியிட்டார். 
 
பேராசிரியர் அவர்களின் உளவியல் நூல் பல பதிப்புகளைக் கண்டது. சேமமடு பதிப்பக உரிமையாளர் திரு.பத்மசீலன் என்னுடன் தொடர்புகொண்டு உரிய அனுமதியுடன் இவ்வுளவியல் நூலை அழகிய முறையில் இரு பாகங்களாக வெளியிட்டார். கடந்த நான்கு தசாப்த காலமாகப் பல பதிப்புகளைக் கண்ட இந்நூல் கல்வியியல் மாணவர்கள் மிக விரிவாக வாசிக்கப்பட்டு வருகின்றது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 
 
கல்வி உளவியல், கல்விப் புள்ளியியல் ஆகிய துறைகளில் சிறப்பறிஞரான பேராசிரியர் அக்காலத்தில் (1970களில்) கல்வியியலின் ஏனைய துறைகளில் (கல்வித் தத்துவம், சமூகவியல், ஒப்பியல் கல்வி) மாணவர்களின் வாசிப்புக்குப் பொருத்தமான துணை நூல்களின் பற்றாக்குறையை அறிந்துகொண்டார். அதன் காரணமாக அத்துறைகள் சார்ந்த பல அத்தியாயங்கள் அடங்கிய ஒரு நூல் பற்றிய ஆழமாகச் சிந்தித்தார். அச்சிந்தனையின் விளைவாக உருவானதே கல்வியியலுக்கு ஓர் அறிமுகம் என்ற இந்நூலாகும். 
 
அக்காலத்தில் சகல ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களாலும் பெரிதும்  à®µà®¿à®°à¯à®®à¯à®ªà®¿ இந்நூல் வாசிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்களும் இந்நூலைப் பொpதும் வரவேற்றார்கள் என்பது எனது ஞாபகம்.
 
புதிய பதிப்பாக இந்நூலைச் சிறந்த பதிப்பாக வெளியிட முடிவு செய்த சேமமடு பதிப்பக உரிமையாளர் பெரிதும் பாராட்டுக்குரியவர். நூலாசிரியர் காலஞ்சென்று விட்டமையால் இந்நூலை இற்றைப்படுத்தி வெளியிட வாய்ப்பில்லாத நிலையில் மூல நூல் அப்படியே வெளியிடப்படுவதாகக் கருதுகின்றேன். அத்துடன் பேராசிரியர் தொட்டுச் சென்றுள்ள விடயங்களை விரிவுபடுத்தித் தமிழில் பல நூல்கள் பின்னர் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆசிரியர் கல்வியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் கலாசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்நூலுக்குத் தங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறான ஆதரவு நூலாசிரியரின் கல்விப் பணிக்கு வழங்கும் கௌரவமாகவும் அமையும். 
 
பேரா.சோ.சந்திரசேகரன்