Book Type (புத்தக வகை) : உளவியல்
Title (தலைப்பு) : குழந்தை உளவியலும் கல்வியும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-04-01-092
ISBN : 978-955-1857-91-2
EPABNo : EPAB/02/18843
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 120
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 660.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

பகுதி i - à®•à¯à®´à®¨à¯à®¤à¯ˆ உளவியல்
  1. குழந்தை உளவியற் கோட்பாடுகள்
  2. குழந்தை உளவியலின் உலகளாவிய வளர்ச்சி
  3. குழந்தை உளவியல் ஆய்வு முறைகள்
  4. நடத்தைக்குரிய உயிரியல் மற்றும் சமூக அடிப்படைகள்
  5. குழந்தையும் குடும்பச் சூழலும்
  6. மனவெழுச்சி வளர்ச்சி
  7. அறிகை மேம்பாடு
  8. மொழி வளர்ச்சி
  9. சமூக மயமாக்கலும் ஆளுமை மேம்பாடும்
  10. நினைவாற்றல் வளர்ச்சி
  11. குழந்தை உளவியலும் விளையாட்டுக்களும்
  12. குழந்தைகளும் இயல்பாற்றல் குலைவும்
 
பகுதி ii - à®•à¯à®´à®¨à¯à®¤à¯ˆà®•à¯ கல்விச் சிந்தனைகள்
  1. ஜோன் கென்றி பெஸ்டலோசி
  2. ஜோன் பிரட்ரிக் கேர்பார்ட்
  3. பிரெட்;ரிக் புரோபல்
  4. மரியா மொன்ரிசோரி அம்மையார்
  5. ஜி.ஸ்ரான்லி லேரால்
  6. அல்பிரட் பீனே
  7. புறூனர்
 
பகுதி iii -  à®¤à®®à®¿à®´à¯ மரபில் சிறார் கல்விச் சிந்தனைகள்
  1. பாரதியார்
  2. தேசிய விநாயகம் பிள்ளை
  3. அழ வள்ளியப்பா
  4. நாவலியூர் சோமசுந்தரப்புலவர்
 
பகுதி iv - à®¨à®Ÿà¯ˆà®®à¯à®±à¯ˆà®•à®³à¯
  1. சிறாரைக் கேடுறுத்தல் தொடர்பான சமூக உளவியற் காட்டுருக்களின் மதிப்பீடு
  2. சிறார் கல்வி தொடர்பான மாற்றுவகைச் சிந்தனை
  3. புலன் தழுவிய கற்றல்
  4. விளங்கும் திறன் வளர்ச்சி
  5. அசைவுக்கல்வி
  6. பாலர் கல்வியில் இசைவாக்கல்
  7. சிந்தனையும் காரணங்காணலும்
  8. பேச்சுத்திறன்
  9. பாலர் கதைகள்
  10. மீட்புக்குரிய சிறார் கல்விச் சிந்தனைகள் 
 
பகுதி v -  à®‡à®²à®•à¯à®•à®¿à®¯à®®à¯
 
பகுதி vi - à®•à®²à¯ˆà®šà¯ சொற்கள்
Full Description (முழுவிபரம்):

பேராசிரியர் சபா.ஜெயராசாவின் ஆக்கங்களுள் தனிச்சிறப்பு மிக்க நூலாக 'குழந்தை உளவியலும் கல்வியும்' அமைகின்றது. 
குழந்தை உளவியல், குழந்தைக் கல்வி, குழந்தை வளர்ப்பு முறை முதலாம் துறைகளிலே பரவலான ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. வளர்ந்த நிலையில் ஏற்படும் விலகல் நடத்தைகளுக்கும் இடர்களுக்கும் குழந்தை நிலை வளர்ப்பில் நிகழ்ந்த தவறான அணுகுமுறைகளும் ஆதரவு இன்மையுமே முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. 
இன்று சிறுவர்க்குரிய கல்வியில் அழுத்தங்களும் திணிப்புக் களும் மேற்கொள்ளப்படுவதால் எதிர்ப்பாராத பின்னடைவுகள் வளர்ச்சிப் பருவத்தில் நிகழ்ந்த வண்ணமுள்ளன. 
அதேவேளை முன்பள்ளிகளும் பெருமளவிலே கவனிப்பாரற்ற நிலையிலே இயங்கிய வண்ணமுள்ளன. அரசாங்கம் ஆரம்பக் கல்வியில் செலுத்தும் ஊன்றிய கவனம் போன்று முன்பள்ளிகளிலே செலுத்துதல் இல்லை. நாட்டம் கொள்வதுமில்லை. 
மேற்கூறிய எதிர்மறையான சூழலிலே சிறார் பற்றிய தெளிந்த புலக்காட்சியை ஏற்படுத்துவதற்கும் முன்னேற்றகரமான அணுகு முறைகளை முன்னெடுப்பதற்கும் பயனுள்ள ஆக்கமாக இந்நூல் அமைகின்றது. தமிழ் மரபுகளையும் உள்வாங்கிய அனைத்து விடயப் பரப்புக்களையும் உள்ளடக்கிய நூலாக இது கட்டமைப்புச் செய்யப் பட்டிருத்தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 
முன்பள்ளி ஆசிரியர்கள் தாமாகக் கற்று தமது வாண்மையை மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் பெற்றோர் உளவியல் நிலையிலே தமது பிள்ளைகளை அணுகி முழுநிறைவான வளர்ச்சியை அறிகை ஆட்சி, எழுச்சி ஆட்சி, உடலியக்க ஆட்சி ஆகிய துறைகளிலே ஈட்டிக்கொள்வதற்கும் இந்நூல் பயன்மிக்க ஆக்கமாகின்றது. சாதாரணமாக குழந்தை வளர்ப்பிலும் குழந்தைக் கல்வியிலும் அக்கறையுள்ளவர்களுக்கும் வழிகாட்டி நூலாகவும் அமைந்துள்ளது. 
-தமிழாகரன்-