Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் ( தொகுதி II )
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-08-03-100
ISBN : 978-955-1857-99-8
EPABNo : EPAB/2/19275
Author Name (எழுதியவர் பெயர்) : சு.சுசீந்திரராஜா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 180
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 480.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

 • முன்னுரை
 • நூலாசிரியர் உரை
 • பதிப்புரை
 • தமிழ்நாட்டில் இல்லாமல் இலங்கையில் நிலைபேறடைந்த தமிழ்ச் சொற்கள்
 • இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் சொற்தேர்வில் வேறுபாடு
 • தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தற்காலத் தமிழ்ச் சொல் வழக்கின் தகுநிலை
 • இலங்கைத் தமிழில் வினைச்சொற்களின் பெருக்கம்
 • இல்லை என்ற குறை ஒன்று
 • தமிழ் நாட்டில் சின என்ற வினைக்கு இலங்கையில் இல்லாத கட்டுப்பாடு
 • க்ரியாவின் கவனத்திற்கு உட்படாத வினை தவிர்ந்த சொற்கள்
 • க்ரியாவின் அகராதியில் இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள்
 • இலங்கைத் தமிழில் எடுப்பி மறப்பி என்பன மட்டுமா?
 • இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ்மொழிப் பயன்பாட்டில் ஆரும் நீரும் வேறுபடுமாறு
 • இலங்கையில் வட்டார வழக்குச் சொற்கள்
 • ஆக்கப் பெயரமைப்பில் வேறுபாடு
 • நிறைகுடத்தின் நிறைபொருள்
 • மணித்தியாலம் ஒரு சொல்லா? இரண்டு சொல்லா?
 • காலத்தில் முற்பட்டவை தமிழ்நாட்டு வழக்கா? இலங்கை வழக்கா?
 • பெறுமதி பற்றி
 • ஆருக்கு என்ன குறை?
 • எடுக்கு என்ற வினை
 • அங்கு இங்கு உங்கு எங்கு போன்ற தோற்றச் சொற்கள்
 • என்னம்
 • தன்மை ஒருமைப் பெயரைத் தவிர்க்கும் போக்கு
 • நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம்
 • மரணி  என்ற வினைச் சொல்
 • முயலும் முயற்சியும் 
 • பெரியவர்க்குப் பேச்சில் மரியாதை காட்டுவது
Full Description (முழுவிபரம்):

தமிழியல்சார் சிந்தனைத் துளிகள், தொகுதி ஐ என்ற எனது நூலுக்கு, 2009ஆம் ஆண்டு நூலாசிரியர் உரை எழுதியபோது, இரண்டாவது தொகுதி என ஒரு நூலை வெளியிடும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இந்நூல், முதற்தொகுதியின் தொடர்ச்சி - தொகுதி ஐஐ. ஆதலால், அங்கு கட்டுரைகளின் தோற்றம் பற்றிக் கூறிய பொதுக் கருத்துக்கள், இங்கும் பொருந்தும். இந்நூலில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள், தமிழில் உள்ள சொற்கள் பற்றியவை. அவை, கடந்த ஈராண்டுகளில், திட்டமிடாது, அவ்வப்போது தனித்தனியாக எழுதப்பெற்றவை. கட்டுரைப் பொருள்கள், தொடர்புடையவையாக இருக்கும் போதும், ஒரே பொருளை, வௌ;வேறு கோணத்தில் நோக்கி எழுதும் போதும், கூறிய கருத்துக்களை மீண்டும் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெரும்பாலும், கட்டுரைகளின் முன்னுரையிலே தான் கூறிய கருத்து மீண்டும் வருகிறது.
தமிழியல் பற்றி, நாள் இதுவரை எடுத்துரைக்கப்படாத கருத்துக்கள் எவ்வளவோ உண்டு. ஆய்வு வளர்ச்சிக்கு, தேடுவதும், தொகுப்பதும், வகுப்பதும், ஒப்புநோக்கிக் காண்பதும், சிந்திப்பதும், எழுதுவதும் இன்றியமையாதவை. தொகுதிகளைப் பெருக்கிக் கொண்டே போகலாம். அதற்கு, உடல் நலம், உளநலம், நினைவாற்றல் போன்றவை உதவ வேண்டும். இனி, எல்லாம் கடவுள் சித்தம் என இருப்போம்.
முன்னுரையோ அறிமுகவுரையோ இல்லாமல், நூல்கள் வெளியிடுவதில்லை என்பது, சேமமடு பதிப்பகத்தின் கொள்கை. இது, நல்ல கொள்கையென்றாலும், தகுதி வாய்ந்த அறிஞர் வாய்க்காதவிடத்து தர்மசங்கடமாகிவிடுகிறது. இன்று, நமது நாட்டில் நல்ல அறிஞர்களைக் கண்டுகொள்வது அரிது; இருப்பவர்களை விரல்விட்டு எண்ணலாம். இந்நூலின் முதற் தொகுதிக்கு, நண்பர் பேராசிரியர் கா.சிவத்தம்பி 'புலமை நிறை தோழமையுணர்வுடன்' பாயிரக்குறிப்பு எழுதினார். மீண்டும் அவரைத் தொல்லைப்படுத்த விரும்பாது, இரண்டாவது தொகுதியாகிய இந்நூலுக்கு, நண்பர் பேராசிரியர் சி.தில்லைநாதனிடம் முன்னுரையோ அறிமுகவுரையோ எழுதும்படி கேட்டபோது, அவர் மகிழ்ச்சியுடன் உடன்பட்டார். அவ்வப்போது அவருடன் யாழ்ப்பாணத்துக் கிராமத் தமிழ் வழக்குகள் பற்றித் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். சமுதாயம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறதல்லவா? அவர், இடையிடையே யாழ்ப்பாணம் சென்றபோது, சில வழக்குகள் பற்றி விசாரித்து அறிந்து வந்து என்னிடம் கூறியதுண்டு. நண்பர் தில்லைநாதனுக்கு நன்றி. 
இந்த நூலையும் சேமமடு பதிப்பகம் வெளியிடுகின்றது. அதன் உரிமையாளர் திரு.சதபூ.பத்மசீலன் தமிழ்ப் பற்றும் உணர்ச்சியும் மிக்கவர். தரமான தமிழ் நூல்களை வெளியிடுவதில் மிக ஆர்வங் கொண்டுள்ளார். அவரது வெளியீட்டுப் பணி தமிழ்ப் பணியாகும். அவர் தம் பணி ஓங்குக.
சு.சுசீந்திரராஜா