Book Type (புத்தக வகை) : ஊடகம்
Title (தலைப்பு) : சமூக வானொலி
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-10-01-102
ISBN : 978-955-685-001-7
EPABNo : EPAB/02/18844
Author Name (எழுதியவர் பெயர்) : ரஸ்மின், எம்.சி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 208
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 500.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • சமூகவானொலியின் பணிகளும் செயற்பாடுகளும்
  • சமூகவானொலியின் பண்புக்கூறுகள்
  • சமூகவானொலி ஏன் தேவை?
  • அபிவிருத்தி, தொடர்பாடல், பங்கேற்றல்மற்றும் மகாவெலி சமூகவானொலி
  • இலங்கையில் சமகால சமூக வானொலிகள்  à®Žà®¤à®¿à®°à¯à®¨à¯‹à®•à¯à®•à¯à®®à¯ பிரச்சினைகள்
  • இலங்கையில் இணையத்தள சமூக வானொலிகளின் நன்மைகளை மக்கள் à®®à®¯à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®¤à®²à¯ - சவால்களும் வாய்ப்புகளும்
  • ஆணாதிக்க கட்டமைப்புகளும் à®ªà¯†à®£à¯à®µà®¿à®°à¯à®¤à¯à®¤à®¿à®¯à¯à®®à¯ - சமூகவானொலியை மையமாகக் கொண்ட நோக்கு
  • சமூக ஒலிபரப்புக்கு கிளைமொழி வழக்கினைப் பயன்படுத்துதல் -  à®’ரு நோக்கு
  • அபிவிருத்திக்கான தொடர்பாடலும் சமூக வானொலியும்
  • இலங்கையில் சமூக வனொலிகள் - சிறு அறிமுகம்
  • மக்கள் சேவை ஒலிபரப்பும் பன்முக தொடர்பாடலும் - ஓர் அறிமுகம்
Full Description (முழுவிபரம்):

சமூக அபிவிருத்திக்கான ஊடகத்தை வலுப்படுத்தல்
மக்கள் பங்களிப்பை ஊக்குவிப்பதுடன், அவர்களின் விருப்புக்களை பாதுகாத்து, மக்கள் தமக்குத் தேவை என்று கருதுகின்றவற்றை விடயப்பரப்பாகக் கொண்டிருக்கும், மக்களின் தொடர்பினை அதிகரிக்கச் செய்யும்; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய நிகழ்ச்சிகளைப் படைக்கும்; சகோதர சமூகத்த வர்களின் வாழ்வியல் மீதான பரீட்சயத்தை அதிகரிக்கச் செய்யும்; சிறந்த மானிடப் பண்புகளை வளர்த்து, மக்களின் அன்றாட வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை நிகழ்ச்சிகளில் உள்ளடக்கி, அத்தகைய பிரச்சினைகளுக்கு உரியவர்களிடமிருந்து தீர்வுகளைத் தருவிக்கும்; பால், இன, மத பேதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி - தொடர்பாடல் நிகழ்ச்சிகளின் போது சகலருக்கும் சமவள வான வாய்ப்புகளை வழங்கும்; ஏகாதிபத்திய அல்லது சட்டவிரோத சக்திகளைவிட்டும் விலகிவாழும் பக்குவத்தையும் ஆற்றலையும் வளர்த்து வலுவான ஒரு சமுதாயத்தைத் தரிசிப்பதை இலக்காகக் கொள்ளும் ஒரு சமூக ஊடக நிறுவனமே சமூக வானொலியாகும். 
இலங்கையைப் பொறுத்தவரை, சமூக வானொலிக்கான தேவை உணரப்பட்டு சுமார் மூன்று தசாப்தங்களாகிவிட்டன. மகாவெலி சமூக வானொலித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்குள் இலங்கையின் சமூக வானொலிகள் குறிப் பிடத்தக்க அடைவுகளைச் சந்தித்திருக்கின்றன. 
கிராமிய மக்களின் வாழ்க்கையின் எந்தவொரு பகுதியிலும் வானொலி தனது தாக்கத்தைச் செலுத்தலாம் என்பதற்கு இலங்கை யின் ஆரம்பகாலச் சமூக வானொலிகளின் செயற்பாடுகள் சான்றாக இருந்துள்ளன. கள ஆய்வு, நேரடியாகச் சென்று நேயர்களின் விருப்பு வெறுப்பகளை அறிதல், மக்களின் பங்கேற்புக்கான வாயில்களை திறந்துவிடுதல், வலுவூட்டலுக்கான நிகழ்ச்சிகளைப் படைத்தல், மக்கள் பிரச்சினைகளை கள ஆய்வுக்குட்படுத்துதல், உள்ளூர் கலை, கலாசாரம் மற்றும் மொழி, நாட்டார் வாழ்வியல் என மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடி பிரதிபலித்தல் என்று அன்றைய சமூக வானொலிகள் போட் அடித்தளம் மிகவும் உறுதியாகவே அமைந்திருந்தது. 
1990களின் பின்னர், வானொலி என்ற ஊடகத்திற்கும் மக்களுக்குமான தொடர்பில் பாரிய விரிசல் ஏற்படத்தொடங்கியது. மக்களின் விருப்பு வெறுப்பு என்கின்ற அம்சத்தைவிட விளம்பர தாரர்களின் திருப்தி முக்கியமான ஒரு நிபந்தனையாக மாறத் தொடங்கியது. வானொலி ஊடகம், அதிகாரத்தின் பாதுகாவலனாக செயற்பட வேண்டிய நிர்க்கதிக்கு உள்ளானது. அரச வானொலி ஊடகங்களுக்கு நிகராக தனியார் வானொலி நிலையங்கள் தமது இருப்பினை மிகவும் பலமான முறையில் அமைக்கத் தொடங்கின. கருத்தியல் போராட்டத்தை நடாத்தும் முதலாளி வர்க்கத்திற்கு மலிவு விலையில் கிடைக்கும் ஆயுதமாக வானொலி தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. சமுதாயக் கடப்பாடு என்பதைவிட பொழுதுபோக்கு என்பது வானொலிக்கான முதன்மையான பணியாக மாறத்தொடங்கியது. இத்தகைய ஒரு பின்புலத்தில் பிரதான நிலை ஊடகங்கள் தமது செல்நெறியை மாற்றிக்கொண்டன. இந்நிலையில், இலங்கையில் சமூக வானொலிகளின் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, சமூக வானொலிகள் பிரதான நிலை ஊடகங்களின் தாக்கத்திற்கும் ஆதிக்கத்திற்கும் நிகராக தம்மை நிலைநிறுத்திக் கொள்வதில் பலவாறான சிரமங்களைச் சந்தித்தன. மறுபக்கத்தில், அரசாங்கத்தினதும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினதும் அசிரத்தையும் இதில் பாரிய தாக்கத்தைச் செலுத் தின. இத்தகைய விடயங்களை முடிந்தளவில் ஆய்வுக்குட்படுத்துவது இந்நூலின் ஒரு பகுதியின் நோக்கமாகும். 
இலங்கையின் சமூக வானொலித்துறையில் ஆரம்பத்தில் தம்மை அர்ப்பணித்த பலர் தமது கருத்துக்களுக்கும் ஆற்றல்களுக்கும் சமூக வானொலி குறித்த ஆர்வத்திற்குமான சரியான களத்தை இழக்க நேரிட்டதோடு, அத்தகையவர்களின் தேடல்களும் அனுபவங்களும் அடுத்த பரம்பரையை நோக்கிக் கடத்தப்படுவதற்கான சூழ்நிலையும் உருவாக்கப்படவில்லை. மிகவும் உத்வேகத்துடன் இயங்கிக் கொண்டிருந்தவர்களுள் பலர் வெளிநாடுகளில் சிறந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற்று நாட்டைவிட்டே சென்றனர். சிலர் உள்ளூர் ஊடகங்களில் சில முக்கியமான பதவிகளை வகிக்கின்றனர். சமூகவானொலி பற்றிய நாட்டத்தைப் புதிய பரம்பரையினரிடம் ஏற்படுத்த வேண்டிய காலம் தாண்டிக் கொண்டிருக்கினற்து. 
பிரதானநிலை வானொலி (ஆயளெவசநயஅ சுயனழை) தமது சமுதாயக் கடப்பாட்டினை சரியானமுறையில் நிறைவேற்றத் தவறியிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், மக்களின் குரலாக பல சமூகவானொலிகள் வெளிவரவேண்டியிருக்கின்றன. கல்வி, பண்பாடு, கலைகலாசாரம், சுகாதாரம், சமயம், பொழுதுபோக்கு என சகல துறைகளிலும் இலங்கையின் கிராமப்புற மக்களை வலுவடையச் செய்வதற்குப் பலநூறு சமூக வானொலிகள் தோன்ற வேண்டியுள்ளன.
யுத்தம் இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை சமூகத்திற்கும் இடையில் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் பாரிய ஓர் இடைவெளியைத் தோற்று வித்திருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதால் சமாதானம் மலர்ந்துவிட்டது என்று சிலர் தவறாக நினைக்கின்றார்கள். பிரதானநிலை ஊடகங்கள், இத்தவறான கருத்துநிலையை மிகவும் இறுக்கமாகக் கட்டமைத்து வருகின்றன. யுத்தம் முடிவுக்கு வந்தாலும் அயற் சமூகத்தைப் படிப்பதற்கு; வாசிப்பதற்கு; புரிந்துகொள்வதற்கு; மதிப்பளிப்பதற்கு; விட்டுக்கொடுப்பதற்கான பயிற்சிகள் சமூகத்தின் ஆழமான பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை. வெளிப்பகட்டுக் காகவும் பொதுமக்களின் அவதானத்தை அற்ப நோக்கங்களுக்காக வென்றெடுப்பதற்காகவும் இது, எல்லோருக்குமான நாடு என்ற கருத்துநிலை கட்டமைக்கப்படுகின்றது. இந்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் பெற்றுக்கொடுத்த வெற்றிக்கு சமாதானம் என்று பெயர்வைத்து நமது பிரதான நிலை ஊடகங்களும் அதிகார வர்க்கமும்தான். உண்மையில், சமாதானம் என்பது பிர யோக ரீதியான ஒன்று. மக்கள் மத்தியில் அந்தப் பிரயோகப் பயிற்சி யினை வளர்ப்பதற்கான இயலுமையை சமூக வானொலி நிறை யவே கொண்டிருக்கின்றது. பல்லின சமூகமொன்றில், மக்களை பிரக்ஞை பூர்வமாகக் கொண்டும் கொடுத்தும் வாழ்வதற்கான ஒரு சூழ்நிலையை இலங்கையின் பிரதானநிலை வானொலிகளைவிட சமூக வானொலிகளால்தான் ஏற்படுத்த முடியும். 
சமூகவானொலி என்றால் என்ன? அதற்கும் வர்த்தக வானொலி களுக்குமிடையிலான வித்தியாசங்கள் என்ன? இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சமூக வானொலி எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை விளக்கும் ஒரு நூல்கூட இதுவரை இலங்கையில் வெளியிடப்படவில்லை. சில உதிரியான கட்டுரைகள் சிங்களத்திலும் தமிழிலும் வெளிவந்தபோதும் சமூகவானொலியை ஒரு துறையாகக் கற்பதற்கு அவை எந்தவிதத்தி லும் போதியவையல்ல. தாய்மொழியில் ஊடகக்கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களின் நலன்கருதியே இத்தகைய ஒரு நூலை எழுத வேண்டியேற்பட்டது. இதில் இடம்பெறும் நான்கு கட்டுரைகள் வௌ;வேறு சர்வதேச மாநாடு களில் வாசிக்கப் பட்டவை.
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ஊடகம், அபிவிருத்திக் கான தொடர்பாடல் என்பன கடந்தபல ஆண்டுகளாக போதிக்கப் பட்டு வருகின்றன. இவற்றில் சமூக அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்கும் பணியும் பற்றிய அலகுகள் திருப்திப்படக்கூடிய நிலையில் இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் உள்ளூர் மயமாக்கத்துடன் அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கான தொடர்பாடல் போன்ற எண்ணக்கருக்கள் புதிய பரிமாணங்களைப் பெற்றுவருகின்றன. தகவல்களை மிக விரைவில் கிராமிய மக்களுக்குக் கொண்டு செல்லும் தொடர்பாடல் உத்திகள் பல கோணங்களிலிருந்தும் முன் மொழியப்படுகின்றன. இது சமூக வானொலி பற்றிய கற்கையை மேம்படுத்துவதற்கான சரியான தருணமாகும். 
சமூகவானொலிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை முன்வரவில்லை. இதனால், இணையத்தளத் தின் வாயிலாக சமூக வானொலிகளை நடத்துவதில் நமது இளைய தலைமுறையினர் முனைப்புக் காட்டுகின்றனர். அறிவக நிலையங் களையும் அபிவிருத்தித் திட்டங்களையும் மையமாகக் கொண்டு சில இணையத்தள சமூக வானொலிகள் இயங்கி வருகின்றன. இணையத் தளமும் பண்பலை போன்று மிகவும் தாக்கமான ஒரு தளம்தான். அதில் எமது தேவைக்கு ஏற்ப நூற்றுக்கணக்கான தொடர்பாடல் மாதிரிகளை நாம் தயாரித்துக் கொள்ளலாம்.
இன்றைய நிலையில் இலங்கை போன்ற நாடுகள் இணையத் தளத்தின் வாயிலாக சமூக வானொலிகளின் பாவனை மீது அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கின்றது. இணையத்தள சமூக வானொலியை பண்பலைவாயிலான சமூக வானொலியுடன் ஒப்பிடும் போது இணையத் தளவானொலி  à®ªà®² அனுகூலங்களைக் கொண்டிருக்கின்றது. ஒலியை மாத்திரமன்றி, ஒளிக்காட்சி மற்றும் எழுத்து ஆகியவற்றையும் கொண்டிருக்கின்றது.  à®‡à®¤à¯ சமூக வானொலியின் செயற்பாடுகளைக் கேட்பதற்கு மாத்திரமன்றி, பார்ப்பதற்கும் வாசிப்பதற்கும் இடமளிக்கின்றது. அதேநேரம், வானொலியின் ஆவணங்கள் யாவற்றையும் பதிவிறக்கம் செய்வதற் கான வாய்ப்பும் உள்ளது. அத்துடன், வினைத்திறன் மிக்க பின்னூட்டலை (நுககநஉவiஎந கநநடியஉம) வழங்கவும் இணையத்தள சமூகவானொலியில் இடமுள்ளது. வலைப் பின்னலாக்கம் (நேவறழசமiபெ) பரிமாற்றம் என்பனவற்றுக்கான வாய்ப்பு இணையத்தள சமூக வானொலியில் அதிகமாகும். ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை சேமித்து  à®µà¯ˆà®ªà¯à®ªà®¤à®±à¯à®•à®¾à®© வாய்ப்பு இணையத்தளத்தில் அதிகமாக உள்ளது. மிகவும் பயனுறுதிமிக்க தொடர்பாடல் உத்திகளை கையாள்வதன் மூலம் இணையத்தள வசதியில்லாத கிராமங்களுக்கும் இத்தகைய நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும். 
சமூக வானொலியைப் பயன்படுத்தலில் உள்ள மற்றுமொரு சமூக ரீதியான பயன் பெண்களின் பங்குபற்றலுக்கான வாய்ப்பும் ஏற்பாடுகளும் இதில் அதிகமாக இருப்பதாகும். பெண்களின் உரிமை, பால்நிலை தொடர்பான அடிமட்ட முரண்பாடுகள், பெண் வலுவாக் கம் மற்றும் பெண்கள் தொடர்பான இதர அம்சங்கள் என சகல விடயங்களையும் தமது கருத்துநிலைக்கு ஏற்றாற் போல தயாரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு சமூக வானொலியில் அதிகம் உண்டு.
தமிழில் சமூகவானொலி பற்றிய கற்கை
தமிழில் ஊடகத்துறையினை ஒரு பாடமாகக் கற்கும் இளைஞர் யுவதிகளிடமும் வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களிடமும் சமூக வானொலி தொடர்பான விழிப்புணர்வு போதியளவில் இல்லாதிருப் பதை அறிந்துகொள்ள முடிந்தது. சமூகவானொலி பற்றிய அறிமுக மின்மை இன்றைய ஊடகக் கற்கைகளில் சமூக வானொலிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் குறைவாக இருப்பதை எடுத்துக்காட்டு கின்றது. 
ஊடகக் கற்கைக்கு சிங்கள மொழியில் உள்ள சாத்தியமான சூழ்நிலை தமிழ்மொழியில் இல்லை. சிங்களத்தில் ஊடகப் பயிற்சி நிலையங்கள் ஓரளவுக்குச் சிறப்பாகச் செயற்படுகின்றன. தொடர் பாடல், அபிவிருத்தியில் தொடர்பாடலின் பங்கு, தொடர்பாடலில் பன்முகத்தன்மை, தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்பாடல் கண்டுவரும் வளர்ச்சி, ஊடக அறிவு (ஆநனயை டுவைநசயஉல) போன்ற துறைகளில் வெளிவந்திருக்கும் சிங்கள மொழி நூல்கள், அதனைக் கற்கும் மாணவர்களுக்கு சமூக மாற்றத்தில் ஊடகம் எத்தகைய பங்கினை வகிக்கலாம் என்பதை இலகுவில் புரிந்துகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்துகின்றன.
நந்தன கருணாநாயக்க (2000, 2001, 2004), சேனக குணவர்தன (1999, 2007), அஜந்த ஹப்புதந்ரி (2008), திசரகுமாரபேலி (2000), ரோஹன லக்ஷ;மன் (நுனவைநன 2000) பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல (1998ஃ2009, 2003ஃ2009) போன்றவர்களின் நூல்கள் தொடர்பாடலின் பல்வேறு பரிணாமங்களை சிங்கள மாணவர்க ளுக்கு காட்டியுள்ளன. இத்தகைய நூல்களுடன் ஒப்பிடும் அளவுக்கு தமிழில் ஒரு நூல்கூட வெளிவரவில்லை. சிவபாதசுந்தரம் எழுதிய ஒலிபரப்புக்கலை தமிழ் வாசகர்களுக்கு நீண்டகாலம் வழிகாட்டி நூலாக இருந்துவருகின்றது. விமல் சொக்கநாதன் (2008), ஜோர்ஜ் சந்திரசேகரன், திருஞானசுந்தரம், உவைசுர் ரஹ்மான் உள்ளிட்டவர் களும் தமது நூல்களை வெளியிட்டுள்ளனர்.  à®ªà¯†à®°à¯à®®à¯à®ªà®¾à®²à¯à®®à¯ ஒலிபரப்பு அனுபவம், ஒலிபரப்பின் தொழில்நுட்பம், ஒலிபரப்பின் ஆற்றல் என்பனவற்றை எடுத்துக்கூறும் நூல்களாகும். அந்தவகையில், ஒலிபரப்பின் சமுதாயக்கடப்பாட்டினை எடுத்துக்கூறும் ஆய்வுகள் வெளிவர வேண்டிய காலகட்டத்தில் இந்நூல் வெளிவருகின்றது.
ஊடகக்கற்கை என்பது இலங்கையில் தமிழ்மொழியைப் பொறுத்தவரை ஒரு பின்தங்கிய துறையாகவே உள்ளது. வெளிப் படையாகச் சொல்வதானால் இலங்கை இதழியல் கல்லூரி மாத் திரம் ஓரளவு இத்துறையில் இயங்கி வருகின்றது. ஊடகத் துறையில் செய்தியாளர்களாகக் கடமையாற்ற விரும்புபவர்களுக்கான  à®šà®¿à®±à®¿à®¯ களமாக அதன் பாடத்திட்டம் அமைகின்றது. அத்துடன், ஊடகத் துறையை நிதியீட்டலுக்காக மாத்திரம் மேற்கொள்ளும் சில முதிர்ச்சி பயிற்சி நிறுவனங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
சிங்கள மொழியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தமிழ் மொழியுடன் ஒப்பிடும்போது பெரியளவில் சிறப்பிடம் பெறுகின்றன. களனி, கொழும்பு, ஸ்ரீபாலி, ஜயவர்தனபுர உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் ஊடகம் தனியானதொரு துறையாக போதிக்கப்படு கின்றது. இப்பல்கலைக்கழகங்களில் ஊடகத்தைப் போதிப்பவர்கள் பெரும்பாலும் ஊடகத்தை ஒரு துறையாகக் கற்றவர்கள். ஊடகத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்ட அனுபவம்  à®‰à®Ÿà¯ˆà®¯à®µà®°à¯à®•à®³à¯. புதிய போக்குகளுக்கு ஏற்ப ஊடகக்கற்கையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என விரும்புகின்றவர்கள். இவர்களிடம் சமூக வானொலி பற்றிய ஆழமான ஒரு பிரக்ஞை இருக்கின்றது. இத்தகைய ஒரு சாதகமானநிலை இலங்கையில் தமிழ்மொழியில் கற்கும் மாணவர்களுக்கு இல்லை. 
சமூக வானொலி பற்றிய எனது ஆர்வத்திற்கு களமமைத்தது இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ஐஊவுயு). வெளிநாடுகளில் இடம்பெற்ற மாநாடுகளில் கலந்துகொள் வதற்கான வாய்ப்பினை முகவர் நிலையம் எனக்கு வழங்கியது. நான் கடமையாற்றிய ஊடகம் மற்றும் தொடர்பாடல் பிரிவு சமூக வானொலி மற்றும் சமூகஊடகம் தொடர்பாக எனது அறிவு மட் டத்தை அடிக்கடி சுயவிசாரணை செய்து கொள்வதற்கான வளமாக வும் களமாகவும் அமைந்திருந்தது. அந்தவகையில், எனது துறைத் தலைவர் அத்துல புஷ்பகுமாரவுக்கு என்றுமே எனது நன்றியறிதல் உண்டு. 
பொதுநலவாய நாடுகளுக்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஆர்.ஸ்ரீதர், ஆசிய ஊடக மற்றும் தகவல் நிலையத்தின் ஆய்வுத்துறைத் தலைவர் கலாநிதி காலிங்க செனவிரத்ன, நரேந்திர ரானா, பீ.பீ.சி உலகசேவையில் கடமை யாற்றும் நண்பர் எம்.ஜே.ஆர்.டேவிட், யுனெஸ்கோ நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவுப் பணிப்பாளர் விஜயானந்த ஜயவீர போன்ற வர்கள்  à®Žà®©à®¤à¯ முயற்சிகளுக்குப் பல விதங்களில் பக்கபலமாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனதார்ந்த நன்றிகள்.  
எனது குருநாதர் எம்.அஷ்ரப்காண், மூத்த ஒலிபரப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், சகோதரர்களான எல்.வஸீம் அக்ரம், சாகீர் மொஹமட் (தென்றல் அறிவிப்பாளர்) ஆகியோருக்கு எனது விஷேட நன்றிகள். 
இந்நூல் வெளிவருவதில் பல்வேறு வழிகளிலும் துணை நின்ற எனது மனைவி அஸ்மியாவுக்கும் எனது பெற்றோருக்கும் நன்றிகள். நண்பர்களான எம்.எஸ்.அபுல்கலீஸ் (உதவி விவசாய பணிப்பாளர்), எம்.ஜே.எம். ஹாரீஸ், மொஹமட் அர்ஹம், பஸ்லான்முஹமட், தெ.மதுசூதனன், சதபூ.பத்மசீலன் ஆகியோரையும் இவ்வரிசையில் சேர்த்துக்கொள்கிறேன்.
ளுநயசஉh கழச ஊழஅஅழn புசழரனெ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சகோதரன் நவாஸ் முஹம்மத்திற்கு விசேட நன்றி. 
இந்நூலில் உள்ள குறைபாடுகளை சொல்லித்தருபவர் யாராகவிருந்தாலும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன். 
-எம்.சீ.ரஸ்மின்
நிறைவேற்றுப் பணிப்பாளர், அபிவிருத்தி ஊடகக் கற்கைக்கான நிலையம் 
இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் 
கொழும்பு.