Mr.Selvamanoharan

திருச்செல்வம் செல்வமனோகரன்  à®¯à®¾à®´à¯à®ªà¯à®ªà®¾à®£à®ªà¯ பல்கலைக்கழகத்தில்   இந்து நாகரிகத் துறையின் விரிவுரையாளர். இவர்  'இந்து மெய்யியல்'  à®¤à¯à®±à¯ˆà®¯à¯ˆ  à®¤à®©à®¤à¯ கற்கையாக, ஆய்வாக, புலமைச் செயற்பாடாக வளர்த்து வருபவர். பின்னைக் காலனிய நோக்கில் இந்து மெய்யியல் சிந்தனைகள்  à®•à¯à®±à®¿à®¤à¯à®¤à¯ புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கும் அல்லது  à®•à®£à¯à®Ÿà¯à®ªà®¿à®Ÿà®¿à®•à¯à®•à¯à®®à¯ அறிவு, ஆய்வு இவரது ஆளுமையின் வெளிப்பாடாகின்றது.   மெய்யியல், இலக்கியவியல், கலையியல் உள்ளிட்ட துறைகளில் ஊடாடித்  à®¤à®®à®•à¯à®•à®¾à®© விமரிசனச் சிந்தனைசார்  à®¨à®µà¯€à®© அணுகுமுறைகளுடன் கூடிய கோட்பாட்டாக்க மரபை உணர்ந்து, தெளிந்து உருவாக்குபவர். இதன் அடையாளமாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்.  à®®à®°à®ªà¯à®•à¯à®•à¯à®®à¯ நவீனத்துவத்துக்கும் இடையிலான தொடருறு உரையாடலை  à®µà®³à®°à¯à®¤à¯à®¤à¯ நிதானமாக  à®‡à®¯à®™à¯à®•à¯à®ªà®µà®°à¯. தமிழ்ச் சூழலில் 'தமிழர் மெய்யியல்'  à®•à¯à®±à®¿à®¤à¯à®¤ தேடல் தவிர்க்க முடியாது என்பதை இனங்கண்டு அதன் உருவாக்க முயற்சியிலும் ஈடுபடுபவர்.   மெய்யியல் நோக்கில் புதிய ஆய்வுக்களங்களை இனங்கண்டு புலமை நேர்மையுடன் உழைப்பவர்.  'தூண்டி' இலக்கிய வட்டம் சார்பில் பல்வேறு ஆய்வுக் கருத்தரங்குகளை வழிநடத்தியவர்.  à®¤à®®à®¿à®´à¯à®ªà¯ பதிப்பு முயற்சிகளிலிலும் ஆர்வம் கொண்டு 'சிவஞானசித்தியார் ஞானப்பிரகாசருரை' (2017) , 'சிவசங்கர பண்டிதம்' (2016) முதலான நூல்களின் பதிப்பாசிரியர்.  'இலங்கையில் சைவத்தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சியில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் வகிபாகம் - ஓர் ஆய்வு' (2015)  à®Žà®©à¯à®®à¯ நூலையும் ஆக்கித்தந்துள்ளவர்.  à®¤à®±à¯à®ªà¯‹à®¤à¯ சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் செயலாளராகவும்  à®‡à®°à¯à®¨à¯à®¤à¯ தனது சமூகப் பணிகளை மேற்கொண்டு வருபவர்.  

தி.செல்வமனோகரன் புத்தகங்கள்
2017 - சமய நூல் - காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்
2020 - சமய நூல் - காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும்